சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டில்
சாப்பிட அழைத்திருந்தார்கள். தோசை சாப்பிட்ட பிறகு பேசிக் கொண்டிருந்தேன். அவரது
மகளிடம் “உனக்கு என்ன தோசை, வெட்டி தோசையா?” என்று கேட்க, இது என்ன புதிய பெயராக
இருக்கிறதே – வெட்டி தோசை! என
யோசித்து, அவர்களிடமே கேட்டேன்! அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்பதை கடைசியில்
சொல்கிறேன் – அதற்கு முன்னர் “வெட்டி தோசை” கேட்டபோது என் அம்மா நினைவுக்கு
வந்தார் – ஏன் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
அடை, தோசை என எது செய்தாலும்
சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். சில சமயங்களில் அம்மா ”இன்னும் ஒண்ணு போட்டுக்கோ…”
எனச் சொல்லும்போது வயிற்றில் இடம் இருக்கிறதோ, இல்லையோ சாப்பிடத் தோன்றும் – சரி
முழு தோசை/அடை சாப்பிட முடியாது – பாதி – அதாவது அரை தோசை/அடை போதும் எனச்
சொல்வோம். அடையாவது கொஞ்சம் தடிமனாக
இருக்கும் – கல்லில் இருக்கும்போதே தோசைத் திருப்பியால் பாதியாக Cut செய்து
தருவார்கள்! ஆனால் தோசையை இப்படிச் செய்வது கடினம் – எப்போதும் முழு தோசையாகத்
தான் தட்டில் வரும்! சில சமயங்களில் இல்லை இல்லை எனக்கு அரை தோசை தான் வேண்டுமென
அடம் பிடித்தால் – கத்திரிக்கோலால் தான் Cut பண்ணனும்னு சொல்வார் Cut செய்து
தந்தும் இருக்கிறார் – ஒரு வேளை அப்படி வெட்டிக் கொடுப்பது தான் “வெட்டி தோசையோ?”
எனவும் தோன்றியது!
சரி இப்போது, தலைப்பில் இருக்கும்
இரண்டாம் பகுதிக்கு வருகிறேன் – அவல் தோசை! இந்த அவல் தோசையும் அவர்கள் சொல்லிக்
கொடுத்தது தான். அவல் தோசை எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
அவல் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை & கொத்தமல்லி
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்யணும் மாமு?
பச்சரிசியை தண்ணீரில் அலசி ஊற
வைக்கவும். அவலை அலசி தயிரில் ஊறவைக்கவும். இரண்டும் ஊறியதும் அவலுடன் பச்சை
மிளகாய், பெருங்காயம், இஞ்சி சிறிதளவு சேர்த்து மைய அரைக்கவும். அரிசியையும் தனியே
நன்கு அரைத்து உப்பு போட்டு அரைத்து வைத்த அவலுடன் சேர்த்தால், அவல் தோசைக்கான மாவு
தயார். அரைத்த உடனே கூட தோசையாக வார்த்து சாப்பிடலாம். தோசைக்கல்லில் மாவை தோசையாக ஊற்றி, [ரவா தோசை/கரைத்த மாவு தோசை ஊற்றுவது போல] எண்ணை விட்டு மூடி
வைக்க வேண்டும் – திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை! அப்படியே எடுத்து தட்டில்
போட்டுக் கொள்ளலாம்! இந்த அவல் தோசைக்கு நல்ல
காம்போ தேங்காய் சட்னி தான்!
நானும் அவல் தோசை செய்து பார்த்தேன் –
புகைப்படம் எடுக்கவில்லை! இல்லத்தரசியிடம் சொல்ல, அவர்களும் செய்து
சாப்பிட்டார்கள் – புகைப்படமும் எடுத்து முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார்!
இப்பதிவில் அப்படம் தான் சேர்த்திருக்கிறேன். சரி இப்போது தலைப்பில் முதலாம்
பாதியான வெட்டி தோசைக்கு வருகிறேன்!
ரவா தோசை, மசாலா தோசை, ராகி தோசை,
அவல் தோசை, நெய் தோசை, பொடி தோசை, செட் தோசை, முட்டை தோசை என பலப்பல வகைகள்
தோசையில் உண்டல்லவா – ஏன் ஐஸ்க்ரீம் தோசை, ட்ரைஃப்ரூட்ஸ் தோசை கூட கிடைக்கிறது!
இப்படி எல்லாம் இல்லாமல் சாதாரணமாக செய்யும் தோசை – அதாவது சாதா தோசையைத் தான்
அவர்கள் வீட்டில் “வெட்டி தோசை” என அழைக்கிறார்கள்!
என்ன நண்பர்களே, வெட்டி தோசை
பற்றியும் அவல் தோசை எப்படிச் செய்வது என்பதையும் தெரிந்து கொண்டீர்களா? பதிவு
பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..
மீண்டும் வேறொரு பகிர்வில்
சந்திப்போம்…. சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
வெட்டி தோசையின் விளக்கம் அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆஹா... தோசைவெரைட்டி. அவல் தோசை செய்துபார்க்கணும். வெட்டி தோசைனா, தொட்டுக்க ஒண்ணுமில்லாம வெறும்ன சாப்பிடுவது என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குசெய்து பாருங்கள். நன்றாகவே இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
வெட்டித் தோசையோ பெட்டித் தோசையோ...
பதிலளிநீக்குதோசை என்றாலே தனி சுவைதான்.. ரசனை தான்...
வெட்டி தோசையோ, பெட்டி தோசையோ... தனி சுவை தான் - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
அவல் தோசை..நல்ல குறிப்பு...இங்கு பலர் இப்படி தான் தோசை சுடுவது...
பதிலளிநீக்குவெட்டித் தோசை..ஆஹா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குவெட்டி தோசைக்கான விளக்கம் அருமை..
பதிலளிநீக்குதோசை எப்படி எந்த விதத்தில் இருந்தாலும் எல்லாருக்கும் பிடிக்கும்தானே?! பிடிக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்.
பதிலளிநீக்குதோசைமாவு கொஞ்சமாய் இருந்தால் அவல் கை கொடுக்கும்.அவலை ஊற வைத்து வீட்டில் இருக்கும் அரிசிமாவை கொஞ்சம் கலந்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு தோஸை செய்யலாம்.
வெட்டி தோசை விளக்கம் சிரிக்க வைத்தது.
முகநூலில் ஆதி போட்டு இருந்ததை படித்தேன்.
வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து - செய்து பார்க்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதோசைகளுக்கு அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அவல் தோசை செய்முறைகள் அருமை.
நான் வெறும் அவலை ஊற வைத்து தோசை வார்த்துள்ளேன். இந்த மாதிரி அரைத்து செய்ததில்லை. இனி இப்படி முயன்று பார்க்கிறேன்.
வெறும் தோசை விளக்கம் சிரிப்பாக இருந்தது. தோசை எந்த உருவத்தில் இருந்தாலும் சாப்பிடும் ஆவலை தடுக்க முடியாது. எனவே "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட வயிறு" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவலை ஊற வைத்து தோசை - நான் செய்ததில்லை.
நீக்குதோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட வயிறு - கேள்விப்பட்டதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
தோசை எவ்வளவு சாப்பிடாலும் ஆசை தான். மங்களூர்ப் பக்கம் செட் தோசைக்காகச் செய்யும் சின்னச் சின்ன ஊத்தப்பங்கள் செய்யும்போது அரிசி+உளுந்து+வெந்தயம்+அவல் சேர்ப்பார்கள். தோசை கொஞ்சம் கனமாக வார்ப்பார்கள். பொதுவாக அவல் போட்டு தோசைக்கு அரைப்பது சிலர் வழக்கம். சாதா தோசை (அதான் வெட்டி தோசை) பண்ணுவதற்கே அவலும் ஊற வைத்துச் சேர்த்து அரைப்பார்கள். ஆனால் இம்மாதிரி உப்புக்காரம் போட்டுப் பண்ணினது இல்லை. ஜவ்வரிசியும் ஊற வைத்து அரைத்துச் சேர்ப்பது உண்டு. :))))
பதிலளிநீக்குமேலதிகத் தகவல்களுக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஆதியின் தோசையை முகநூலிலும் சாப்பிட்டேன். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குதோசை மாவில் வெந்தயம் அவல் சேர்ப்பதுண்டு. இப்படி ஸ்பெஷலாய்ச் செய்ததில்லை. குறித்துக் கொண்டிருக்கிறேன். வெட்டிதோசை என்ன என்று நான் யூகித்தது சரி என்பது கடைசியில் தெரிந்தது. எங்கள் வீட்டில் இதைக் கிண்டலாய்ச் சொல்லுவோம்!
பதிலளிநீக்குஉங்கள் வீட்டில் கிண்டலாகச் சொல்வீர்களா? அதான் யூகித்து விட்டீர்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
என் உறவினர் ஒருவர் தோசை போடப்போய சாப்பிட்டுக் கொண்டிருப்பார் ஒவ்வொரு தோசைக்குப்பின்னும் நாட் அவுட் என்பார் போதுமென்றபோது அவுட் என்பார் இது ஒரு சங்கேத பரிவர்த்தனை
பதிலளிநீக்குநாட் அவுட் - அவுட்! நல்ல சங்கேத பரிவர்த்தனை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
அட...! இப்படி ஒன்று இருக்கோ...?
பதிலளிநீக்குநன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு"வெட்டி தோசை" நண்பர் தெலுங்குக்காரரா? தெலுங்கில்தான் வெறும் என்பதை வெட்டி என்று சொல்வார்கள்.
பதிலளிநீக்குதமிழகத்தினைச் சேர்ந்த தெலுங்குக் காரர்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
ஹாஹாஹா நல்லா ஏமாத்தீட்டிங்க போங்க. வெட்டியதுதான் வெட்டி தோசையோன்னு நினைச்சேன். நம்ம சூப்பர் இளந்தோசையை வெட்டி தோசைன்னுட்டீங்களே. அதுலேயே முருகல், ஊத்தப்பம் செய்யலாமே. :)
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.
துளசி : எங்கள் வீட்ட்டில் வெட்டி தோசை மட்டுமே! பல வெரைட்டிகள் நாவூறுகிறது. தோசை மிகவும் பிடிக்கும்
பதிலளிநீக்குகீதா: வெட்டி தோசை ஹா ஹா....அவல் தோசை செய்ததுண்டு. நான் எல்லாமே சேர்த்து அரைத்துவிடுவேன். நன்றாக இருக்கும்....நான் எப்போதோ பல வருடங்களுக்கு முன் மங்கையர்மலர் என்று நினைவு அதில் பார்த்துக் குறித்து வைத்திருந்தேன்..
பன் தோசை, பட்டர் தோசை என்றும் செய்வதுண்டு. உங்கள் அம்மா செய்வது போலவே கல்லில் அடையை பாதியாக கட் செய்வதுண்டு. தோசையை கத்திரிக் கோலால் அப்படியே டிட்டோ...அம்மா கூட ஒன்று என்று சொன்னால் வயிற்றில் இடம் இருக்கோ இல்லையோ அந்த அன்பில் சாப்பிடத் தோன்றும்..எனக்கு என் அம்மாவின் நினைவு வந்தது..மகன் தற்போது வந்திருந்த போது இதைத்தான் சொல்லிச் சாப்பிட்டான்........நான் வார்க்க வார்க்க....
பன் தோசை, பட்டர் தோசை - :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வெட்டி தோசை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கரூர்ப்பக்கம் சென்றபோது மாவு தோசையை கல் தோசை என்று கூறுவதைப் பார்த்துள்ளேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவெட்டி தோசை என்றதும் ஏதோ ஒரு புதிய குறிப்பு என்று பார்த்தால் கடைசியில் நல்ல விளக்கம்!
பதிலளிநீக்குஅவல் தோசை குறிப்பிற்கு அன்பு நன்றி!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஜோர் ஜோர்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....
நீக்குவெட்டி தோசை விளக்கம் சூப்பர்! அவள் தோசை செய்து பார்க்கிறேன். நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குகுறிப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குவெட்டித் தோசை பெயர்க்காரணம் புன்னகைக்க வைத்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு