டெல்லியில் வசித்த பத்து வருடங்களும்
இந்த பானத்தை பருகாமல் இருந்ததில்லை. வெயில் காலத்தில் தண்ணீரில் கலந்தும், சில சமயங்களில்
பாலில் கலந்தும் சில்லென்று பருகியிருக்கிறேன். சில சமயம் சோடாவில் கலந்தும், தண்ணீரோடு
எலுமிச்சை சாறும் கலந்து என விதவிதமான சுவையில்!
இதில் இருக்கும் பொருட்கள் உடலுக்கு
தீங்கு தராது. இதன் வரலாறை கூகிள்/விக்கிப்பீடியாவில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சமயம் Dabur ன் Sharbhat E Azam என்று Roohafza போலவே இருந்தது. மிகவும் சுவையாகவும்
இருந்தது. நம்மூர் நன்னாரி சர்பத் போல வடக்கே இருப்பவர்களுக்கு Roohafza!
கணவரின் நண்பர் ஒருவருக்கு இந்த பானத்தை
அறவே பிடிக்காது. நான் அவருக்கு இந்த பானத்தை பரிசளிப்பதாகவும், அவர் எனக்கு அறவே பிடிக்காத
மாகாளிக்கிழங்கை ஊரிலிருந்து வாங்கி வருவதாகவும் கலாட்டா செய்து கொள்வோம்!
மகள் குழந்தையாக இருந்த போது, ஏறக்குறைய
எட்டு மாதம் ஃபீடிங் பாட்டிலுக்கு பழக்கமாகியிருந்தாள். ஒரு சில காரணங்களுக்காக மருத்துவரிடம்
அழைத்துச் சென்றிருந்தேன். அவர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் பாட்டிலை பரணில் போடும்
படி சொன்னார். பாட்டிலை நிறுத்தியதும் திரவ வடிவில் அதுவும் வெள்ளையாக இருப்பவற்றை
சாப்பிட அடம்பிடித்தாள். ஏறக்குறைய ஒரு வாரம் பாலே குடிக்கவில்லை.
மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது
ஒரு நண்பர் பாலில் Roohafza விட்டு ரோஸ்மில்கா குடுத்துப் பாரேன் என்று சொன்னார். அதன்
படி டம்ளரில் ரோஸ்மில்க் கலந்து ஸ்ட்ரா போட்டு குடுக்கவும், உண்ணாவிரதத்தை முடித்து
குடிக்க ஆரம்பித்தாள். அன்று அந்த நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து என் மகிழ்ச்சியை
பகிர்ந்து கொண்டேன். பின்பு ஸ்ட்ரா பழக்கத்தையும் சிறிது நாளில் மறக்க வைத்தேன்.
இப்படி வாழ்வின் பல தருணங்களில் ஒன்றாய்
கலந்த Roohafza வை திருச்சி வந்த பின் மிஸ் செய்தேன். இவ்வளவு வருடம் கழித்து
amazon-ல் ஆர்டர் செய்து கிடைக்கச் செய்த என்னவருக்கு நன்றி. இனி எஞ்சமாய் தான்.
மீண்டும் வேறொரு பகிர்வில்
சந்திப்போம்…. சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்
சிறப்பு. அப்படியே அதை எப்படிச் செய்வது என்றும் சொல்லியிருந்தால் நாங்களும் குடித்திருக்கலாம்.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்
Rooh Afza கடைகளில் கிடைக்கிறது. குளிர்ந்த தண்ணீருடனோ, பாலுடனோ பருகலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.
வெயிலுக்கு இதமாய் சில் என்ற நீருக்கு நேர் எதுவுமில்லை என்பது என் அபிப்பிராயம்
பதிலளிநீக்குகுளிர்ந்த நீர் - அதுவும் மண் பானையிலிருந்து! அதற்கு ஈடு ஏது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
சில் என்ற நீருக்கு நேர் எதுவும் வெயிலுக்கு இதமாய் இருக்காது என்பது என் அபிப்பிராயம் தாகமும் அடங்கும் காசும் செலவில்லை
பதிலளிநீக்குகாசும் செலவில்லை! :))) உண்மை. ஆனால் இப்போதெல்லாம் நீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ரோஸ்மில்க் ஒரு காலத்தில் ரொம்ப பிடிக்கும் அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் ஆனால் அதற்கு அப்புறம் சுகர் அதில் அதிகம் என்பதால் விட்டுவிட்டோம்
பதிலளிநீக்குரோஸ்மில்க் - இப்பவும் பிடிக்கும். ஆனால் இதைக் குடிப்பது குறைவு இப்போது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
your comment was published என்று வருகிறது ஆனால் கமெண்ட்தான் காணவில்லை
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கள் வந்திருக்கின்றன ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நானும் இந்த பானம் கேள்விப்பட்டு இருக்கிறேன் சகோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஇங்கே Rooh Afza தாராளமாகக் கிடைக்கின்றது...
பதிலளிநீக்குஇனிப்பு அதிகம் என்பதனால் -
இப்போது சற்று யோசனையாக இருக்கின்றது...
தமிழகத்தில் கிடைப்பதில்லை. தில்லியிலும் நிறைய கிடைக்கும்.
நீக்குசற்றே இனிப்பு அதிகம் தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
அருமையான பானம்தான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பானம் மாதிரிதான் தோன்றுகிறது. ரோஸ் மில்க் குடித்திருக்கிறேன். இது இங்கு கிடைக்குமா என தெரியவில்லை தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வெயிலுக்கு வெறும் எலுமிச்சை சாறு வெல்லத்துடன் நீர் சேர்த்து பானகமாய் குடித்தாலும் உடம்புக்கு நல்லது. இனிய பானத்தை பற்றி பகிர்ந்த மைக்கு மிகவும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குRooh Afza எங்கள் வீட்டிலும் அதிகம் பயன்படுத்தி இருக்கோம். நாங்க இந்த பெப்சி, கோலா, ஃபான்டா, மிரின்டா போன்றவை வாங்கியதே இல்லை. எங்க வீட்டுக்குளிர்சாதனப் பெட்டியில் இவற்றுக்கெல்லாம் இடமும் இல்லை. என் தம்பி மனைவி வந்தால் ஜூஸ் எதுவுமே வாங்க மாட்டீங்களா என்று கேட்பார். வாங்கியதே இல்லை. முன்னர் அதிகம் விருந்தாளிகள் வந்து கொண்டிருந்த போது எலுமிச்சை ஜூஸ் வீட்டிலேயே தயாரித்து வைத்திருந்தேன். இப்போதெல்லாம் அதுவும் இல்லை. யாரானும் வந்தால் ஜில்லென்று குடிக்கப் பானைத் தண்ணீர் தான். அப்புறம் காஃபி, தேநீர், பால், ஹார்லிக்ஸ் போன்றவை! :)))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குஒரே ஒரு முறை பெப்சியோ கோக்கோ வாங்கிக் குடித்துவிட்டுப் பின்னர் ஒரு வாரம் வயிற்றுப் போக்கினால் கஷ்டப்பட்டேன். அதிலிருந்து அவற்றைத் தொடுவதே இல்லை.ரோஸ் மில்க் கூட வீட்டுத் தயாரிப்புத் தான்.
பதிலளிநீக்குஅம்மாவிற்கும் பெப்சி, கோக் குடித்தால் ஒத்துக் கொள்ளாது! அதனால் அவற்றைக் குடிக்க மாட்டார். நானும் பெரும்பாலும் Aerated Drinks தவிர்த்து விடுவேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஆ.... உங்களுக்கு மாகாளி பிடிக்காதா? அநியாயம்!!!!எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குமலையில வௌஞ்சா மாகாளி; நாட்டுல வௌஞ்சா நன்னாரி என்பார்கள்.
எனக்கு நந்தனார் சர்பத்தும் பிடிக்கும். தஞ்சாவூர்ப் பக்கம் இந்த சர்பத்தில் சபிஜா விதை சேர்த்துப் போட்டுத் தருவார்கள்.
அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் மாகாளி பிடிக்காது! நன்னாரி பிடிக்கும். இங்கே நன்னாரி சர்பத் கிடைப்பதில்லை! ஊருக்கு வரும் சமயத்தில் குடிப்பதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பாண்டிச்சேரியில் குணசேகரன் கடை (அமுதம் அங்காடி எதிரில்) நன்னாரி எசென்ஸ் ஒரு பாட்டில் 100-120 ரூ. நான் பல வருஷங்களா வாங்கி உபயோகப்படுத்தறேன். எலுமிச்சை ஜூசுடன் சேர்த்து ஜலம் விட்டு சாப்பிட்டா அட்டஹாசமா இருக்கும். (அந்தக் கடை கம்மர்கட்டுக்கு ஃபேமஸ். நிறைய சாப்பிட்டு பல்லைக் கெடுத்துக்கொண்டிருக்கேன்)
நீக்குகம்மர்கட் - அது ஒரு கனாக்காலம்...... இப்போது கிடைக்கிறதா என்ன?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை தமிழன்.
Roohafza Super...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇந்த ரூஹஃப்சாவை பஹ்ரைனில் இருக்கும்போது பாகிஸ்தானில் தயார் செய்தது இரண்டு பாட்டில் வாங்கினேன். (ரோஸ் மில்க் சிரப் என நினைத்து) பிடிக்கவே இல்லை. கிளம்பும்போது இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். இப்போதான் உங்கள் இடுகையின்மூலம் தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குநன்றாக இருக்குமே.... சிலருக்கு பிடிப்பதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நன்னாரி வாங்குவோம்.Rooh Afza இதைப்பற்றி கேள்வி பட்டது இல்லை.
பதிலளிநீக்குஇதே கலரில் வெயிலுக்கு என்று ஒரு பானம் சாப்பிடுவார்கள் அது தாழ்ம்பூ எஸனஸ் என்று சொல்வார்கள். அம்மை நோய் தாக்காது அதை குடித்தால் என்று சொல்வார்கள்.
நன்னாரி தலைநகரில் கிடைப்பதில்லை. எனக்கும் அந்த சுவை பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
Rooh Afza தில்லிக்குச் சென்ற போது குடித்ததுண்டு. அப்புறம் வாங்கி வந்தும் குடித்ததுண்டு. இப்போதுதான் ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குநன்னாரி சப்ஜா விதை போட்டு வீட்டில் குடிப்போம். ரொம்பப் பிடிக்கும். ரோஸ் எஸன்ஸ் வீட்டிலேயே தயார் செய்வண்டு. மாகாளி ரொம்பப் பிடிக்கும்....
கீதா
ஆஹா நீங்கள் சுவைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீங்கள் சொல்லியிருக்கும் பானம் சுவைத்ததில்லை. வீட்டில் எலுமிச்சை ஜூஸ் தான் செய்வார்கள் அதுவும் அபூர்வம். கூலாகக் குடிக்கும் பழக்கமும் இல்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
Roohafza ரோஜா இதழ்களால் செய்யப்படுவது, அதனால் உடலுக்கு மிகவும் நல்லது. சோர்வை போக்கும். அதோடு எலுமிச்சை சாறு சேர்த்து குளிர்ந்த நீர் ஊற்றி பருகலாம். சிலர் பாலில் சேர்த்து ரோஸ் மில்க் போல அருந்துவார்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி
நீக்கு