எங்களுக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிறந்து
வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். எனவே தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது.
பேசுவதும் தமிழ் கலந்த தெலுங்கில் தான் பேசுவோம். எங்கள் குழந்தைகள் இருவருமே
தில்லியிலேயே வளர்ந்தவர்கள். பள்ளியில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துப்
படித்தார்கள். மேலும், தமிழ் பேசும்
நண்பர்களும் நிறையவே இருந்தார்கள். தலைநகரில் வளர்ந்த மற்ற தமிழ்க் குழந்தைகளைப்
போல, பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். ஓரளவிற்குத் தமிழ் பேச வரும். ஆனால்
எங்கள் மொழியான தெலுங்கில் பேசும் போது, தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு
மொழிகள் கலந்து அடித்து விடுவார்கள்.
தொகுப்புகள்
▼
வியாழன், 31 ஜனவரி, 2019
புதன், 30 ஜனவரி, 2019
பிங்கி பாட்டி கரோ – ஆதி வெங்கட்
அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய
இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே
ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. தலைநகர் தில்லியில் ஒரு தெருவில் இருக்கும்
வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி
கூட மிகவும் குறைவே. Service Street” என்று
சொல்லக்கூடிய சிறிய தெருவைத் தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம்
வந்து விடும். இந்த தெருவில் உள்ள வீட்டின்
பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய்
30 அடி இடைவெளிதான்.
செவ்வாய், 29 ஜனவரி, 2019
திங்கள், 28 ஜனவரி, 2019
தோய்ப்பு நடனம் - ஆதி வெங்கட்
இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே படிங்க.
ஞாயிறு, 27 ஜனவரி, 2019
சனி, 26 ஜனவரி, 2019
வெள்ளி, 25 ஜனவரி, 2019
வியாழன், 24 ஜனவரி, 2019
புதன், 23 ஜனவரி, 2019
செவ்வாய், 22 ஜனவரி, 2019
திங்கள், 21 ஜனவரி, 2019
பீஹார் டைரி – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்…
வாங்க... ஜாலியா ஒரு குதிரைப் பயணம் போகலாம்...
ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா பார்த்த
பிறகு அடுத்ததாக எங்கே என்ற கேள்வி பிறந்தது – ராஜ்கீர் பகுதியில் இன்னும் சில
இடங்கள் உண்டு பார்க்க என்றாலும் நாங்கள் சென்ற இடம் ஒரு கோவில் – அங்கே வெந்நீர்
ஊற்றும் இருக்கிறது – அங்கே தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதற்கு முன்னர் வேறு
சில விஷயங்களைப் பார்க்கலாம்.
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
சனி, 19 ஜனவரி, 2019
வெள்ளி, 18 ஜனவரி, 2019
வியாழன், 17 ஜனவரி, 2019
ஹாஸ்டல் பேய் – சுதா த்வாரகநாதன்
தில்லி
நகருக்கு பணி நிமித்தமாக வந்தது 1987 டிசம்பர் மாதம். எனக்கு வேலை கிடைத்தவுடன்,
எனக்கு முன்னரே தில்லியில் பணி புரிந்து கொண்டிருந்த தோழிகள் தங்கியிருந்த
ஹாஸ்டலில் நானும் வசிக்க ஆரம்பித்தேன். 11 மாதங்கள் வரை அந்த ஹாஸ்டல் வாசம் தான்.
என் அலுவலகத்தில் பணிபுரிந்த ஏழு பேர் அதே ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். ஒன்றாகச்
சேர்ந்து அலுவலகம் செல்வோம். அதைப் போலவே ஒன்றாகவே புறப்பட்டு ஹாஸ்டல் திரும்புவோம்.
புதன், 16 ஜனவரி, 2019
செவ்வாய், 15 ஜனவரி, 2019
திங்கள், 14 ஜனவரி, 2019
ஞாயிறு, 13 ஜனவரி, 2019
சனி, 12 ஜனவரி, 2019
வெள்ளி, 11 ஜனவரி, 2019
கதம்பம் - மைசூர்பாக் - பிளாஸ்டிக் தடை – தோரணம் – வேஷ்டி தினம் – அரசு அலுவலகங்கள்
சாப்பிட வாங்க – மைசூர்பாக் – 10 ஜனவரி 2019
டெல்லியில்
இருந்த வரை அடிக்கடி சோதனை முயற்சி செய்து பார்ப்பேன். வீட்டிலேயே எடுக்கும் நெய் நிறைய
இருக்கும். கடலைமாவும் கோதுமை மாவு வாங்கினால் கிடைக்கும். அப்புறம் என்ன சர்க்கரையைப்
போட்டு நினைத்த போதெல்லாம் மைசூர்பாக் தான். இனிப்பு சாப்பிட காரணம் வேறு வேண்டுமா
என்ன!!!
வியாழன், 10 ஜனவரி, 2019
புதன், 9 ஜனவரி, 2019
செவ்வாய், 8 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
சனி, 5 ஜனவரி, 2019
வெள்ளி, 4 ஜனவரி, 2019
வியாழன், 3 ஜனவரி, 2019
செத்துப் போயிடுவான்-ங்க... – புத்தாண்டுக் கொண்டாட்டம்...
“இப்படியே விட்டா செத்துப் போயிடுவான்-ங்க... 3 டிகிரி
குளிர்ல இராத்திரியெல்லாம் கெடந்தா என்ன ஆவறது? போடுங்க, போடுங்க, 100-க்கு ஃபோன்
போடுங்க...”
புதன், 2 ஜனவரி, 2019
நடுநிசியில் வந்த தேவி...
“நான் தேவி வந்திருக்கேன்டா....”
குரல் மட்டுமே கேட்கிறது. எங்கேயிருந்து குரல் வருகிறது
எனத் தெரியவில்லை. ஆனாலும், உத்தேசமாக ஒரு திசை நோக்கி குரல் கொடுத்தேன்.
“தேவியா, யார் தேவி, எந்த தேவி? எனக்கு எந்த தேவியையும்
தெரியாதே....”




















