சமீபத்தில் தான் எனது மகள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க ஒடிசா
கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. LKG முதல் கல்லூரி பட்டப் படிப்பு வரை அனைத்துமே
தலைநகர் தில்லியில் தான் படித்தாள். பள்ளிப்படிப்பு முழுவதும், வீட்டிற்கு எதிரே
இருந்த பள்ளியில் தான். கல்லூரியும் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தான். இதுவரை
வீட்டில் எங்களுடன் தங்கி படிப்பினை முடித்து விட்டாள். இப்போது, எங்களை விட்டு
தனியாக, ஒடிசாவில் தங்கிப் படிக்க வேண்டும். சின்னச் சின்னதாய் அவளுக்கு வேண்டிய
பொருட்களை எல்லாம் சேகரித்து வைக்க ஆரம்பித்தோம். தில்லி கல்லூரியில் வாங்க
வேண்டிய சான்றிதழ்கள் அனைத்தையும் அவளே வாங்கிக் கொண்டு வந்தாள். ஒரு நாள் நான்
அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப, முகத்தில் அதீத மலர்ச்சியுடன் கதவைத் திறந்தாள்.
“அம்மா, நான் ஒடிசா போவதற்காக சில பொருட்களை வாங்கி
வந்தேன். வந்து பாருங்கம்மா என்றாள். சற்றே இளைப்பாறிய பிறகு பார்த்தால், ஒரு
சின்ன கிட் [ஷாம்பு, சோப்பு, சீப்பு, வாசனை திரவியம் போன்றவற்றை வைக்க], சின்னதாக
ஒரு பர்ஸ், ஒரு வாசனை திரவியம், முடியை சுருள் சுருளாக ஆக்குவதற்கான முடியை சுருள்
சுருளாக ஆக்குவதற்கான Curlers மற்றும் ஒரு
Tag! ஒவ்வொன்றும் பார்க்க அழகாகவே இருந்தது. அனைத்தையும் சந்தோஷமாகக் காண்பித்தாள்.
ஒவ்வொரு பொருள் பற்றியும் எங்கள் உரையாடல் இப்படி இருந்தது.
கிட் – நான்: “ஏம்மா, இது ரொம்ப
அழகா இருக்கே, இது என்ன விலை?” மகள்: இது
வெறும் 499 ரூபாய் தான்மா... நான்: ஆ.... அப்படி
இதில் என்னடி ஸ்பெஷல்? மகள்: அம்மா, இந்த
கிட்ல எல்லாமே வந்துடும். எதையும் தேட வேண்டாம். வேண்டுமென்றால் ஆணியில் கூட
மாட்டிக் கொள்ளலாம். அலங்காரம் முடிந்ததும் இதை அழகாக மூடி வைத்துக் கொள்ளலாம். இந்த
இடத்தில் சின்னச் சின்ன கம்மல்களை வைத்துக் கொள்ளலாம். இந்தக் கைப்பிடியால் இப்படி
அழகாக பிடித்துக் கொள்ளலாம்.
பர்ஸ் - நான்: இந்த பர்ஸ்
எதுக்குடி இப்ப வாங்கினே? இந்த மாதிரி வீட்டில் இருக்குமே? மகள்: போம்மா... இந்த கலர் பார், எவ்வளவு sober,
எவ்வளவு cool ஆக இருக்கு. இந்த மாதிரி trendy ஆக வீட்டில் இல்லை. இதை compact-ஆக
என் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். [பர்சில், sober, cool, trendy எனப்
பார்த்து நீங்கள் வாங்கி இருந்தால்
சொல்லுங்கள். நான் ஞே என விழித்தேன்]. நான்: இந்த பர்ஸ்
எவ்வளவும்மா? மகள்:
இதுவா, சும்மா, 299 ரூபாய் தாம்மா.
பர்ஃப்யூம் - நான்: இந்த பர்ஃப்யூம்
பார்க்க அழகா இருக்கே? மகள்: ஆமாம்மா இது ஒரு
ஃபாரின் பிராண்ட். நான்: ஏம்மா, வீட்டில் தான்
இரண்டு மூணு இருக்கே! மகள்: அம்மா, அது வேற,
இது வேற. நான்: ஓ... இது எவ்வளவு விலை? மகள்: 599/- ரூபாய்....
Curlers: நான்: இது என்னடா? ரோல் ரோலா நிறைய இருக்கு. மகள்:
இது Curlers மா. நான்: உன் முடி தான் அழகா Straight-ஆ இருக்கே. இதெல்லாம்
எதுக்கு கஷ்டம்.... மகள்: சும்மா ட்ரை செய்யதாம்மா... நான்: இது எவ்வளவு விலை? என்று கேட்க, நிறைய விலை தான்
சொன்னாள்.
மறுநாள் தலை குளித்து, கண்ணாடியைப் பார்த்து நிறைய நேரம்
செலவழித்து, அந்த Curlers போட்டுக் கொண்டு
ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தாள். நான் அவளிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தேன்.
“ஏம்மா, நேராய், அழகாய் இருக்கும் முடியை, இவ்வளவு கஷ்டப்பட்டு சுருள் சுருளாக ஆக்குவது
அவசியமா? சீப்பு வைத்து வாரினால் திரும்பவும் நேராகி விடாதா? மகள் – “ஏம்மா, நானே,
இப்போதான் உபயோகிக்கிறேன். எடுத்த பிறகு தான் தெரியும்” என்றாள். அவள் அதை
எடுக்கும்போது கூடவே இருந்தேன். சுருள் சுருளாக ஆகாமல், நுனியில் மட்டும் கொஞ்சம்
வளைந்திருந்தது. அவள் முகத்தில் ஈயாடவில்லை. கோபம் என் மீது திரும்பியது.
போம்மா... நீ தொணதொணன்னு கேட்டதால் தான் சீக்கிரம் எடுத்தேன். அதன் சுருளவில்லை.
சரி சரி... அடியேய், நாள் முழுவதும் போட்டாலும் உன் முடி சுருளாதடி என்று சொல்ல,
“எம்மா, இப்படி சொல்ற?” என்று அழாத குறையாகக் கேட்க, சரி நாளை முயற்சி செய்...
உனக்கு எனது வாழ்த்துகள். மறுநாளும் முயற்சிக்க முடி சுருளாகவில்லை. ஆனாலும் அதை
ஒடிசாவிற்கு எடுத்துச் சென்றாள்.
Tag: நான்: இது என்னடா? இதை எதுக்கு வாங்கின? மகள்:
இதில் பேர் எழுதி சூட்கேஸில் மாட்டி வைக்கலாம். பயணிக்கும்போது அதைப் பார்த்து
சரியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றாள். நானும் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம்
தானே. என் கிட்ட இருக்க பிராண்ட் சூட்கேஸ், ஒரே மாதிரி நிறம், வடிவம் என
இருக்கும். கண்ணாடி போட்டுக்கொண்டு பெயரைப் படிக்க நேரம் ஆகும் என்பதால், பரிசுப்
பொருள் சுற்றிவந்த ரிப்பன் எடுத்து அழகாய் பூ சுத்தின மாதிரி சுற்றிவிட்டேன். பெல்ட்-ல்
தூரமாக வரும்போதே தெரிந்துவிடும் என்று பெருமையாகச் சொல்ல, ஒரு கேவலமான லுக் ஒன்றை
கொடுத்தாள்! சரிடா, இதுக்கு எவ்வளவு ரூபாய் கொடுத்தே எனக் கேட்க, Just 75/- rupees தாம்மா என்று சொல்லி சென்று
விட்டாள்.
இந்த டேக் பற்றி எங்கள்
பகுதி நண்பர் வீட்டில் நண்பர்கள் குழாமுடன் பேசிக் கொண்டிருந்த போது சொல்ல, ஒரு நண்பர்
அவரது மனைவி சூட்கேஸின் கைப்பிடியில் பழைய துணியைக் கட்டி வைப்பார் என்று சொல்லி, தூரத்தில்
வரும்போதே தெரிந்து விடும் என்று சொன்னார். அதற்குள் அவரது மனைவி, இப்போது சணல் கயிற்றை
கொத்தாகக் கட்டி வைத்திருக்கிறேன் எனச் சொல்ல, அதற்கு நண்பர், “அந்த சூட்கேஸை ஒரு பய
தொடமாட்டான்” என்று கிண்டலடித்தார். இந்த சின்ன விஷயத்துக்கு யாராவது இவ்வளவு செலவு
பண்ணுவாங்களா? என்று கிண்டல் செய்ய கூட வந்திருந்த மகளுக்கோ ஒன்றும் புரியவில்லை –
ஒரு 75/- ரூபாய் செலவு செய்ததுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என!
கல்லூரியில் கிடைத்த
ஸ்டைஃபண்ட் பணத்தில் நான் ஒன்றுமே செலவு செய்யாமல் வைத்து இருந்தேன். மேல் படிப்புக்கு
ஒடிசா செல்லும்போது தேவையாக இருக்குமே என இந்த மினிசோ கடையில்
பார்த்துப் பார்த்து வாங்கி வந்தேன். இப்படி எல்லோரும் சேர்ந்து கிண்டல் செய்கிறீர்களே
என அழாத குறையாகக் கேட்க, “ஹேய்… இது சும்மா பொழுது போக்கு, நீ ரொம்ப சமத்து, செலவே
செய்ய மாட்டியே” என்று சமாதானம் சொல்லி அவளைத் தேற்றினேன்.
விரைவில் வேறு ஒரு
பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….
நட்புடன்
சுதா த்வாரகநாதன்
புது தில்லி.
பின் குறிப்பு:
உங்கள் மேலதிகத் தகவலுக்காக – MINISO என்பது ஜப்பானின் டிசைனர் ப்ராண்ட்.
ஜப்பானிய டிசைனர் Mr. Miyake Junya மற்றும் சைனீஸ் தொழிலதிபர் Mr. Ye Guofu ஆகியோர்
உருவாக்கிய ஒரு ப்ராண்ட் – 2013-ஆம் ஆண்டு ஆரம்பித்த இதன் கடைகள் இப்போது பல நாடுகளில்
இருக்கின்றது. புது தில்லியில் கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கிறது. தமிழகத்தில் சேலம்
மற்றும் கோவையிலில் இந்தக் கடைகள் இருக்கிறது. இன்னும் தகவல் தேவை எனில் இங்கே
பார்க்கலாம்!
குட்மார்னிங். சுவாரஸ்யமான அனுபவங்கள்.
பதிலளிநீக்குஇனிய் காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஇந்த அவசர யுகத்தின் வியாபர தந்திர கவர்ச்சிகளுக்கு மக்கள் எளிதில் விழுந்து விடுகிறார்கள்!
பதிலளிநீக்குஉண்மை. வியாபார தந்திரங்கள், விளம்பர யுக்திகள் என பலவும் மக்களை பல பொருட்களை வாங்க வைத்து விடுகின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இளைஞர்கள், இளைஞிகளைக் கவரலாம். அவங்களுக்குத் தேவையாகவும் இருக்கும். பின்னால் காலப்போக்கில் சிக்கனத்தின் அவசியத்தை உங்கள் மகள் புரிந்து கொள்வாள்.
பதிலளிநீக்குசிக்கனம் நல்லது. தேவைக்கு மட்டும் வாங்குவது பழக்கத்தில் வந்தால் சிக்கனம் வந்து விடும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப்
பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
இன்றைய உலகம் வியாபார உலகம் அல்லவா
பதிலளிநீக்குஉண்மை. இங்கே அனைத்தும் வியாபாரம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
பிள்ளைகளின் ஆர்வத்திற்குத் தடை போடுவது சற்று சிரமமே. அனுபவத்தில் அவர்களே எது சரி என்பதை தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். மற்ற பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும்கூட இந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
பதிலளிநீக்குஉண்மை. அனுபவம் நல்ல பல படங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
இதைப்போல மகளுக்கு எதாவது 'நான்'
பதிலளிநீக்குவாங்கும்போது அதை ஐம்பதாம் எண்ணால் வகுத்துருவேன். (அம்பது என்பது ஒரு வசதிக்காகத்தான். 48, 49 ன்னு தான் இருக்கும்) சின்ன எண்ணில் கோபாலுக்குச் சொல்லிருவேன் :-)
ஹாஹா.... உங்கள் ஊர் கரன்சியில் கம்மி தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நமக்கும் நல்ல பாடம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகுழந்தைகளின் இயல்பை, பெரியவர்களின் எண்ணத்தை அழகாய் சொல்லி இருக்கிறார் சுதா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅம்மா மகள் உரையாடல் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.
நீக்குஎனக்கோ, என் மகள்களுக்கோ இதுமாதிரியான பொருட்களில் ஆர்வமில்லை.
பதிலளிநீக்குநல்லது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
கிட்டத்தட்ட எல்லா வீட்டுலயும் அம்மா பொண்ணு டயலாக் இப்படித்தான் இருக்கும் போல. பார்க்க நல்ல சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குநாம் தலையிடாமல் இருக்கும் வரை நல்லது. நாம் ஏதாவது சொன்னால் அவர்கள் இருவரும் நமக்கு எதிர் அணியில் ஒன்றாகி விடுவார்கள்.... ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
பெண்களுக்கே உரித்தான புது மோகங்கள்.
பதிலளிநீக்குஅதுவும் புதிதாக வேறிடம் செல்லும் இளம் பெண்ணுக்கு
உரித்தான் ஆர்வங்களையும் அன்னையின் ரியாக்ஷன் களையும் அழகாக வடித்திருக்கிறார்
சுதா த்வாரகானாதன்.
வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஇப்போதைய யுவ யுவதிகள் பலரும் இப்படித்தான் பின்னால் புரிந்து கொள்வார்கள் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபதிவு மிகவும் அருமை அம்மா பெண் உரையாடல் நன்றாக இருக்கிறது.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குபதிவை ரசித்தேன். இளம் வயதினர்தான் இப்போதைய வியாபார உலகின் இலக்கு. மயங்காதவர் குறைவு. இந்த மினிசோ பார்த்திருக்கேன்...நெட்டில்தான்..சும்மா என்ன என்று தெரிந்து கொள்ளத்தான்...மற்றபடி வாங்கியதில்லை.
பதிலளிநீக்குஇப்போதைய குழந்தைகள் நாம் விலை கேட்டால்....ரொம்ப கூலாக ஜஸ்ட் ......இவ்வளவுதான் அப்படினு சொல்லுறதை பார்த்திருக்கேன்...
கீதா
ஆஹா மினிசோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!