தொகுப்புகள்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அழ வைத்த அன்பு – காதலர் தினம்




“ஏய், DD.... DD... DD.... ஃபோன் அடிக்குது எடு DD....”

DD-இடமிருந்து ஒரு பதிலும் கிடைக்காது போக, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் சைகையில் விசாரித்தார். அவரும் சைகையிலேயே பதில் சொன்னார் – “ஏதோ சண்டையாம்....”




தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணமே இருக்க, பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தோழியிடம் தனது அலைபேசியைக் கொடுத்து, மீண்டும் தோழியின் மடியில் படுத்துக் கொண்டார். கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தோழியின் உடையை நனைக்க, “அழாத DD” என்று சொல்லிக் கொண்டே வந்த அழைப்புகளைத் துண்டித்தார். நடுவே ஒரு அழைப்பினை எடுத்து DD அழுது கொண்டிருப்பதைச் சொல்லி, துண்டிக்கப் போக, அங்கே இருந்து வந்த பதிலால், அழுது கொண்டிருந்த DD காதில் வைக்க, எதிர் முனையிலிருந்து வந்த குரலுக்கு பதிலே இல்லை DD-இடம்.

பேருந்தில் இருந்த பலரின் பார்வையும் அழுது கொண்டிருந்த DD மேலேயே இருந்தது. என்னதான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவருடைய ஆவலாக இருந்தது. அழைப்பு வருவதும், சில அழைப்புகளை துண்டிப்பதும், சில அழைப்புகளை எடுத்து பேசாமல் கேட்பதும் என தொடர்ந்து கொண்டிருந்தது காட்சி. பேருந்தில் இருந்தவர்களில் பலர் DD படித்த கல்லூரி மாணவர்கள் தான். பேருந்தின் உள்ளே இருந்தபடியே ஒருவருக்கொருவர் WhatsApp மூலம் செய்திகள் அனுப்புவதும், டிக்-டாக் காணொளிகள் அனுப்புவதும் என ரகளையாக இருந்தது. ஒன்றிரண்டு பேர் மட்டும் DD அழுவதால் கொஞ்சம் கவலை கொண்டனர். தொடர்ந்து அழைப்பை ஏற்காததால் பேருந்தில் இருந்த மற்றொரு நண்பரின் எண்ணுக்கு அழைக்க, “DD உனக்கு கால் இந்தா....” என்று சொல்ல, நண்பரின் அலைபேசியை வாங்கவே இல்லை DD.

பேருந்தில் இருந்த கல்லூரி மாணவ, மாணவியர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் பரபரப்பு. ஒரு பொண்ணு அழறாளே... என்ன காரணமா இருக்கும், ஏதாவது காதல் பிரச்சனையா, விவகாரமா ஏதாவது நடந்துடுச்சோ..., அவளைப் பார்த்தா கல்யாணம் ஆனமாதிரி தெரியலையே.... என என்னென்னமோ எண்ணங்கள் – குழுவாக வந்திருந்த சில பயணிகள், தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பொதுஜனத்திற்கு எப்போதுமே அடுத்தவர்களின் விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம் அடுத்தவர்களின் துயரைத் தீர்ப்பதில் இருப்பதில்லை. இங்கேயும் அப்படியே..... DD-க்கு என்னதான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள வேண்டும் – அவரை தொடர்ந்து அலைபேசியில் அழைப்பது யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் – அழைப்பது ஆண் தான் என்று அனைவரும் தீர்மானமாக இருந்தார்கள் – காதல் தான் பிரச்சனை என்பதையும் உறுதியாக நம்பினார்கள்.

இத்தனை காட்சிகளும் சமீபத்திய தமிழகப் பயணத்தில் ஒரு பேருந்துப் பயணத்தின் போது பார்த்தது – திருச்சியின் பக்கத்து கிராமம் ஒன்றிலிருந்து நகரம் நோக்கி வந்தபோது பார்த்த காட்சிகள் இவை. பாதி வழியில் தான் நான் பேருந்தில் ஏறி இருந்தேன். அமர்ந்து கொள்ள இருக்கை இல்லாத காரணத்தினால் நின்று கொண்டே வந்தேன். என் உயரத்திற்கு பலருடைய நடவடிக்கைகளையும் பறவைப் பார்வையில் பார்க்க முடிந்தது. பயணிகளின் சம்பாஷணைகளைக் கேட்கவும் முடிந்தது. நமக்கு தான் “ராஜா காது கழுதைக் காது” வழக்கம் ஆயிற்றே! அழுது கொண்டிருந்த பெண்ணை அனைவருடைய கண்களும் பார்த்தபடியே இருந்ததையும் கவனிக்க முடிந்தது. காதல் பற்றி படித்த பல விஷயங்கள் எனக்குள் வந்து போனது.

தில்லி வந்த புதிது.... அப்போது தான் என் அறை நண்பர் பல புத்தகங்களை அறிமுகம் செய்தார். அப்படி அறிமுகம் செய்த புத்தகங்களில் ஒன்று பாலகுமாரன் அவர்களின் “இனிது இனிது காதல் இனிது” புத்தகம். எத்தனை முறை அந்தப் புத்தகத்தினைப் படித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. அப்போது பல தோழிகள் இருந்தாலும் காதல் எனும் வலையில் விழவே இல்லை! எனக்குத் திருமணம் ஆகும்வரை காதலிக்க வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை! அப்புத்தகத்தில் பிடித்த சில வரிகளை எனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்ததை இன்னமும் கூட என்னிடத்தில் வைத்திருக்கிறேன். காதலியிடம் முட்டைக்கோஸ் எனத் திட்டுவாங்கும் காதலன், “மணலை இறைத்து இறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன.... அடியே நாளையேனும் மறக்காமல் வா” என காதலிக்காகக் காத்திருக்கும் காதலன் சொல்லும் கவிதை, என மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது இன்னமும்! புத்தகத்தின் பல வரிகள் மனப்பாடம்!

இந்த நினைவுகள் மனதில் ஓட, பேருந்துக் காட்சிக்குத் திரும்பினேன். DD தோழியின் மாடியிலிருந்து எழவே இல்லை! அழுகை தொடர்ந்து கொண்டிருந்தது. மக்களும் பெரிதாக ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தினால் வேறு விஷயங்களில் தங்கள் பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள். பேருந்துகளில், விமானத்தில் என எந்த வழி பயணித்தாலும் சக பயணிகளைக் கவனித்தால் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்க முடியும். சில எழுத்தாளர்களுக்கு கதைகள் பிறக்கக் காரணமே இப்படியான அனுபவங்கள் என்பதை படித்திருக்கிறேன். நானும் பார்க்கிறேன் என்றாலும் கதையாக எழுத என்னால் முடிவதில்லை! இந்தக் காதல் இப்படி அழ வைக்கும் காதலாக இருக்க, வேறொரு பேருந்துப் பயணத்தில் பார்த்த காட்சி வேறு விதம். அது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன் – விரைவில்!

மீண்டும் இந்தப் பேருந்துப் பயணத்திற்கு வருகிறேன். பலரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தோழியின் கையில் இருந்த DD-யின் அலைபேசியில்  மீண்டும் அழைப்பு – திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தேன்......

ANBU CALLING..... என வந்து கொண்டிருந்தது.....

என்ன நண்பர்களே.... இன்றைய பதிவினை ரசித்தீர்களா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை வேறு ஒரு பதிவில் சந்திப்போம்...... சிந்திப்போம்.....

நட்புடன்....

வெங்கட்
புது தில்லி.

பின் குறிப்பு: பதிவின் ஆரம்பத்தில் DD என்று எழுதியதைப் பார்த்து நண்பர் திண்டுக்கல் தனபாலன் என்று நினைத்து இருந்தால் நான் பொறுப்பல்ல! ஹாஹா.... அந்தப் பெண்ணை தோழிகள் DD என அழைத்ததைக் கேட்டதால் அப்படியே எழுதி விட்டேன். 

54 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. டிடி என்றதும் நம்ம டிடி தான் உடனே நினைவுக்கு வரார்.....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அப்பெண்ணின் பெயர் கேட்டபோது எனக்கும் DD நினைவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. வெங்கட்ஜி உங்களுக்கு சரியா சம்பவங்கள் கண்ணுக்கும் காதுக்கும் கிடைக்குதே!!! ஹா ஹா

    அதை அழகா சொலல்வும் செய்யறீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்களையும் காதுகளையும் திறந்திருந்தால் பல விஷயங்கள் கிடைக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றது விட்டுவிடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங். நினைத்தபடியே முடிவு. சுசீ எழுதியவன் அல்லவா நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ஸ்ரீராம் இதையே முடிவுன்னு சொல்லிட்டீங்களோ!! அன்பு காலிங்க்!!! நான் அதற்கும் மேல என்னவா இருக்கும்னு அந்த பொண்ணுக்குன்னு நினைத்து முடிவு மண்டையைக் குடையுதுன்னு சொல்லிருக்கேன் ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஹாஹா.... முடிவு உங்களால் யூகிக்க முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. மண்டைக் குடையுது :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. 'அன்பு' காலிங்க்!! அன்பு அழைத்தும் அப்பெண் எழாதது பதில் சொல்லாதது ஏனோ? அத்தனை மன வருத்தமோ அப்பெண்ணிற்கு?! கண்டிப்பாக இதை வைத்தே கதை எழுத முடியும்தான் நம் கற்பனையைத் தட்டி விட்டு..

    வெங்கட்ஜி நான் முதல்ல நினைச்சேன் நீங்க ஒரு அனுபவத்தை வைச்சு கதைதான் எழுதியிருக்கீங்கன்னு...ஹா ஹா

    உங்களால எழுத முடியாதா? ஆஆஆஆஆஆஆஆஅ நீங்க அருமையா எழுதியிருந்தீங்களே இதற்கு முன்ன கூட....

    ஹூம் இந்தக் கதையின் முடிவு தெரியலையே!!! இப்ப என் மண்டை குடையுது ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு தெரியாமல் மண்டை குடையுது! ஹாஹா... பேசாம அந்த பேருந்திலிருந்து இறங்காமல் தொடர்ந்து பயணித்திருக்கலாம் நான்! இன்னும் கொஞ்சம் விஷயம் கிடைத்திருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பறவைப்பார்வையில் எல்லோரையும் பார்க்க முடியும், என் உயரம் காரணமாக...

    ஹா... ஹா... ஹா.. நல்ல வசதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நானும் வெங்கட்ஜியின் அதை நினைத்து ஆஹா என்ன வசதி நு நினைச்சேன்... ஸ்ரீராம்...மீ யை நினைத்துப் பார்த்துக் கொண்டே ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. வசதி தான் - சில சமயங்களில் தொந்தரவும் கூட! சில சமயம் பேருந்தின் மேற்கூரை இடிக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஹாஹா உங்களை நினைச்சுப் பார்த்தீங்களா.... குள்ளமாக இருப்பதிலும் சில வசதிகள் உண்டு! கவலைப் படேல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. நீங்கள் சொல்லி இருக்கும் 'அடியே நாளைக்காவது மறக்காமல் வா' நானும் படித்திருக்கிறேன். என்னிடம் நிறைய பாலகுமாரன் புக்ஸ் இருக்கின்றன. நிறைய ரசித்ததுண்டு. ஆனால் ஒரு ஸ்டேஜில் வெறுத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஸ்டேஜில் வெறுத்து விட்டது. உண்மை. நானும் பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் அவரது புத்தகங்கள் அத்தனை ரசிக்க முடிவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. நான் எழுதிய சுசீ லிங்க் பின்னர் இங்கு எடுத்துத் தருகிறேன்... எங்கள் தளம் செல்லவேண்டும்!!!! மணி ஆறு ஆகப்போகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சுசீ படித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. //ANBU CALLING//

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.

    விளக்கம் 1:
    அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. 'சுசீ' லிங்க் தேடி எடுத்து விட்டேன்! முடிந்தால் வாசித்து மறுபடி (?) கருத்துரை ஒன்று இடவும்!

    https://engalblog.blogspot.com/2013/07/blog-post_10.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி எழுதியது காதலர்களின் ஊடல் என்று நினைக்கிறேன், ஸ்ரீராம் எழுதியது கணவன் மனைவி ஊடல் என்று நினைக்கிறேன். காதலியின் ஊடல் சங்ககால தலைவியரின் ஊடலைப்போன்றது. தீருவதற்கு காலம் பிடிக்கும். மனைவியின் ஊடல் ரயில் வண்டி வரை மாத்திரம். பிரிவு என்று உணர்தல் வரும்போது தன்னுடைய கண்ட்ரோலில் உள்ள ஒருவரை விட மனசிருக்காது. ஆகவே சில சப்பைக்கட்டு காரணங்களைக்காட்டி ஊடலை முடித்து கொள்வர்.
      Jayakumar​​

      நீக்கு
    2. ஜேகே ஸார்... "அவர்கள் இருவரும்" கணவன் மனைவி என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?!!!!

      நீக்கு
    3. பெண் அழவில்லையே. கெஞ்ச கெஞ்ச சும்மா இருந்தார்.

      நீக்கு
    4. உங்கள் பதிவினையும் படித்தேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
    6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. மிகவும் சுவாரஸ்யமான சம்பவம். திரைபடங்களில் மட்டுமே பார்த்தது நேரில் நடப்பது வேடிக்கையான நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு
  12. நல்லா இருக்கு. ஆனால் அன்பு என்னும் பெயர் பெண்களிடையேயும் உண்டே? ஆகையால் அன்பு கூப்பிட்டார் என்பதால் யாருனு சொல்ல முடியும்? இப்படியும் நினைச்சுக்கலாம். ஆனால் எனக்கும் தி/கீதாவைப் போல் மண்டை குடையுது. சரி ஒரு கதைக்கரு! இதை நீட்டி எழுதப் போறவங்களுக்காகக் காத்திருக்கேன். காதலர் தினத்துக்கேற்ற பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கும் அன்பு எனும் பெயர் உண்டே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. ஸ்ரீராம் சார் :"DD நீங்க மட்டும் தான் எங்கள் Blog-க்கிற்கு கதை எழுதி அனுப்பவில்லை"

    அவரிடம் நடந்த உண்மையை கதையாக எழுதி அனுப்புகிறேன் என்று... ஆனால் இதுவரை இயலவில்லை...

    வேறு கதை யோசித்து எழுத ஆரம்பித்தால், பாடல் வரிகளுடன் குறளோடு பதிவு வருகிறது... என்ன செய்ய...?

    இந்த பதிவில் அந்த DD ஏன் அழுதாங்களோ தெரியாது... இந்த DD-யும் அழுதுள்ளேன் - இதே போல் பேருந்தில்...

    அந்த நிஜ கதையை தான் ஸ்ரீராம் சாரிடம் சொல்லி இருந்தேன்... ம்... பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD... ஆவலைத் தூண்டி விடுகிறீர்கள்.. தாமதம் செய்யாமல் அனுப்புங்கள். முன்பு உங்களிடம் சொன்னதையே மறுபடி சொல்கிறேன். பாடல்களோடு வந்தாலும் பரவாயில்லை, கதையை சீக்கிரம் எழுதுங்கள்... அனுப்புங்கள்.

      நீக்கு
    2. டிடி திருக்குறள் வந்தால் என்ன கதை மாந்தர்கள் திருக்குறள்லயே குரல் கொடுத்து பேசுவது போல எழுதிடுங்க!!!!!!

      கீதா

      நீக்கு
    3. உங்கள் கதையைப் படிக்க, நானும் ஆவலுடன் இருக்கிறேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. சுவாரஸ்யமான குறும்படம் பார்த்தது போல் இருந்தது. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா....

      நீக்கு
  15. அழகான பதிவு . சம்பவத்தை மிக அழகா எழுதியிருக்கீங்க .அன்பு அழ வைக்குமா ? அன்புக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியுமே .//ராஜா காது // எனக்கும் இதே பிரச்சினை கண்ணு மூக்கு காது எல்லாமே எப்பவும் அலெர்ட்டா இருப்பதால் பலர் பார்வைக்கும் அறிவுக்கும் எட்டாததெல்லாம் எனக்கும் தெரியும் :)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  16. டிடி ஏன் அழுதாள் என்று தெரியவில்லையே?
    ஆனாலும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்....

      நீக்கு
  17. எங்கட டிடி ஓ என ஒரு கணம் பதறிட்டேன்ன் ஹா ஹா ஹா:). ஆனா கடசிவரை டிடி யின் முடிவு தெரியாமல் போச்சே:))...ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பதறிட்டீங்களா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  18. ///மீண்டும் அழைப்பு – திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தேன்......

    ANBU CALLING..... என வந்து கொண்டிருந்தது.....//

    ஆவ்வ்வ்வ் அடுத்தவர் மொபைலை ஒட்டுப் பார்ப்பதில் என்னா ஒரு ஆனந்தம் ஹா ஹா ஹா... அந்த அன்பு என்பது அன்புக்கரசி ஆகவும் இருக்கலாம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு எனும் அன்புக்கரசி! :)) ஒட்டுப் பார்க்கவில்லை! நேரடியாகத் தெரிந்தது தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அடுத்து என்னவாயிற்றோ என எண்ண வைத்த கதை.. இல்லை கதை என்று சொல்வதை விட கண்ணெதிரே நடைபெற்ற நிகழ்வு. உங்களது பறவை பார்வையில்,(இந்த இடம் சிரிப்பை உண்டாக்கியது.) நன்றாக கவனித்ததை கற்பனை கலந்து ஒரு நல்ல கதையாக்கி தந்திருக்கலாம். அந்த அளவுக்கு தங்களின் எழுத்தாற்றல் அபாரமாக இருந்தது. இன்றைய தினத்துக்கு பொருத்தமான பதிவு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து என்னவாயிற்றோ என்று எண்ண வைத்த கதை - மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  20. நல்ல சுவாரஸ்யமான கதை போல இருக்கு நீங்கள் பார்த்த நிகழ்வு.

    சொல்லியிருக்கும் விதமும் அருமை. அப்புறம் என்ன ஆனதோ என்று கேட்க வைக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  21. நான் கூட நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வு ஏதோ ஒரு பெரிய நகரத்தில் நடந்தது போலும் என்று நினைத்தால் கடைசியில் திருச்சிக்கு அருகே ஒரு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த பேருந்து என அறிந்தபோது கிராமங்கள் ‘முன்னேறிக்கொண்டு’ இருக்கின்றன அறிந்துகொண்டேன். அன்பு என்ற பெயர் கொண்டவர் அந்த பெண்ணிற்கு துன்பம் தந்துவிட்டார் போலும்
    இடையே ஒரு சிறுகதையாக் எழுதலாமே? .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதையாக எழுதலாமே..... நீங்களே முயற்சிக்கலாமே ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....