சாப்பிட வாங்க – தேன்குழல் –
5 February 2019
மாலை
நேர நொறுக்குத் தீனிக்கு. எப்போதுமே நானே மாவரைத்து, உளுந்து வறுத்து மாவாக்கி, பொட்டுக்கடலையும்
அதே போல் மாவாக்கி, இதர சாமான்களை சேர்த்து தேன்குழல் செய்திருக்கேன்.
முதல்முறையாக
கடையில் முறுக்கு மாவு வாங்கியுள்ளேன். சில நாட்களாக செய்யாமலே இருக்கிறது என இன்று
செய்தாச்சு. பாட்டி தேங்காய் எண்ணெயில் தான் கைமுறுக்குகளைச் சுற்றி போட்டு எடுப்பார்.
நானும் இன்று தேங்காய் எண்ணெயில் தான் போட்டெடுத்தேன். வாங்க அரட்டை அடித்துக் கொண்டே
கொறிக்கலாம்.
பிளாஸ்டிக் இல்லா சமையலறை – 31 January 2019
முதலில்
அவசியமற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பின்
எதையும் வாங்குவது நல்லது. இருக்கும் பொருட்களையும் அவ்வப்போது சுத்தம் செய்து தேவைப்படுபவர்களுக்கு
கொடுத்து உதவலாம். அல்லது வேறு விதமாக உபயோகப்படுத்தலாம். அடுத்து மறுசுழற்சிக்கு கொடுப்பது.
நானும்
இப்படித்தான் செய்து வருகிறேன். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக எவர்சில்வரில் மளிகைப் பொருட்கள்
மாற்றம். என்னிடமிருந்த டிபன் பாக்ஸ்களையும், சம்படங்களையும் உபயோகப்படுத்திக் கொண்ட
பின் மீதியுள்ளவற்றுக்கு கணக்கிட்டு வாங்கிக் கொண்டேன்.
சி.டி.
மார்க்கரால் மகள் அதில் உள்ள பொருட்களின் பெயர்களை எழுதித் தந்தாள். கையால் அழித்தாலும்
தண்ணீர் பட்டாலும் அழிவதில்லை. சோப்பு பட்டால் மட்டுமே அந்த மை அழிகிறது. வேறு பொருட்களை
மாற்றும் போது சோப்பால் சுத்தம் செய்து விட்டு மாற்றிக் கொள்ளலாம்.
விஸ்வாசம் – 9 February 2019
ஏறக்குறைய வெளியாகி ஒரு மாதம்
ஆகப்போகிறது. எங்கள் வீட்டுத் 'தல'யுடன் இன்று தான் சென்று பார்த்து வந்தோம்..:)
11 மணி காட்சிக்கு முன்பதிவு
செய்திருந்ததால் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு தியேட்டருக்கு சென்று விட்டோம்.
சிறிது நேரம் காத்திருக்கையில் அங்கு வந்த சில ஜோடிகளையும், குடும்பங்களையும் பார்த்துக்
கொண்டு அமர்ந்திருந்தோம்.
கைக்குழந்தையுடன் வந்திருந்த
தம்பதிகளை பார்த்து, நம்ப எல்லாம் இப்படியெல்லாம் வந்திருப்போமா?? என்றேன். உடனே என்னவரோ
"ஏன்! நம்ப ரோஷியை எடுத்துக் கொண்டு வந்திருக்கோமே" என்றார்!!
சினிமாவிற்கு செல்வதில் விருப்பமே
இல்லாத என்னவருடன் டெல்லியில் நான் பார்த்த படங்கள் மூன்று :) அதுவும் மகளின் ஐந்தாவது
வயதில் :)
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
"அது யாரோட போனீங்களோ!!! சத்தியமா நான் வரலை!! என்றேன் :)
சரி!! எங்க திரைக்கதையை விட்டுவிட்டு
சினிமாவுக்கு வருவோம்! அடாவடி தூக்குதுரை என்ற பெயருக்கு ஏற்ப கட்டப்பஞ்சாயத்தும்,
அடிதடி சண்டைகளும் தான் படம் முழுதும் வியாபித்திருக்கின்றன.
நயன்தாராவுடனான காதல் காட்சிகள்..பத்து
வருட பிரிவுக்குப்பின் தன் மகளையும், மனைவியையும் சந்திக்கும் அஜித்..அப்பா மகளுடனான
புரிதல்கள்.
இறுதியில் கணவன் மனைவி இடையேயான
புரிதலை விட அப்பாவுக்கும், மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பு வெற்றி பெறுகிறது.
பாடல்கள் ஓகே ரகம் தான்.
ஆக மொத்தம் பொழுதுபோக்குக்கு
தகுந்த படம்.
ஜாடிக் குடும்பம் – 12 February 2019
இன்று
வாசலில் வந்த ஜாடிக்காரரிடம் விதவிதமான அளவுகளில், விலைகளில் பீங்கான் ஜாடிகள் இருந்தன.
நான் ஊறுகாய் போட்டு வைக்க மூன்று கிலோ, நான்கு கிலோ கொள்ளளவு கொண்ட இரண்டு ஜாடிகளை
வாங்கிக் கொண்டேன்.
அதில்
இட்லிமாவும் விட்டு வைத்தால் புளிக்காதாம். ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லையாம்.
இது எந்தளவு உண்மை என்று செய்து பார்த்தால் தான் தெரியும் :)
சில
நாட்கள் முன்பு உப்புக்கும், புளிக்கும் ஜாடிகளை தெற்கு வாசலில் வாங்கினேன். கொஞ்சமாக
ஊறுகாய் வைத்து பயன்படுத்த கால் கிலோ கொள்ளளவு கொண்ட இரண்டு ஜாடிகளை சித்திரைத் தேரின்
போது வாங்கினேன்.
இந்த
மாதிரி பீங்கான் ஜாடிகளில கூட பாட்டில் போல் திருகு மூடி இருக்குமென்று மாமியார் சொல்லிக்
கேட்டிருக்கிறேன். ஆனால் நான் இதுவரை பார்த்ததில்லை. இந்த ஜாடிக்காரரிடம் கேட்டுப்
பார்த்தேன். அவரும் எல்லாரும் கேட்கறாங்க!! வருவதில்லை என்றார்!
சரி!
நெய்வேலியிலிருந்து கொண்டு வந்த எலுமிச்சம்பழங்களை உப்பு போட்டு நன்றாக ஊறியாச்சு.
இன்று மாடியில் வெயிலிலும் வைத்திருக்கிறேன். அதை ஜாடிக்கு மாற்றிட வேண்டியது தான்.
தேவைப்படும் போது காரமும், எண்ணெயும் சேர்த்துக்கலாம்.
என்ன
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி
வெங்கட்
இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி
பதிலளிநீக்குஆஹா முதல் படமே அசத்துதே!! அப்படியே எடுத்துச் சாப்பிடனும் போல இருக்கே!! மிகவும் பிடிக்கும்
அடுத்து ஜாடிகள் ஈர்க்குது. நானும் வைச்சுருக்கேன்...இப்படியான ஜாடிகள் ரொம்பப் பிடிக்கும்.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குப்ளெய்ன் ஸ்டிக்கர் வாங்கி அதில் பெயர் எழுதி ஒட்டலாமே மறுபடியும் தேவையான பொழுது ஒன்னொரு ஸ்டிக்கட் ஒட்டிக்கலாம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குமுதலில் அவசியமற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பின் எதையும் வாங்குவது நல்லது. இருக்கும் பொருட்களையும் அவ்வப்போது சுத்தம் செய்து தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவலாம். அல்லது வேறு விதமாக உபயோகப்படுத்தலாம். அடுத்து மறுசுழற்சிக்கு கொடுப்பது.//
பதிலளிநீக்குஅதே அதே...நம்ம வீட்டுல பாட்டிகள் இருந்ததால் கிச்சன்ல ப்ளாஸ்டிக், ந்யூஸ்பேப்பர், ப்ளாஸ்டிக் ஷீட் என்ரிக்கு தடா...ஸோ எனக்கும் அப்படியே பழகிவிட்டது..
நான் எவர்சில்வர் மற்றும் பாட்டில்கள் வைச்சுருப்பேன்..
உங்க கிச்சன் ஷெல்ஃப் சூப்பரா இருக்கு. டப்பாக்களும்...கொஞ்சம் உயரமா இருக்கும் போல இருக்கே உங்களுக்கு ஓகெ...ஆனா மீ க்கு ஹா ஹா ஹா ஹா..இப்ப கூட இங்க பங்களூர்ல கிச்சன் ரொம் ரொம்ப ரொம்ப சிறியது. ஒரு ஆள் உட்காரலாம் இருவர் நிற்கலாம்ன்றது போல.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குமுருக்கை பார்த்ததும் வாய் ஊறுது..பார்சலும் அனுப்ப மாட்டீங்க ஹும்ம் மனைவியிடம் கேட்டால் கைவலிக்கும் என்று எஸ்கேப் ஆகிவிடுவாள்...ஹும்ம்ம் நாந்தான் செய்து ஆகணும்
பதிலளிநீக்குநண்பரே உங்களுக்கு மனைவியிடம் பூரிக்கட்டையால் அடி வாங்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்து இருந்தேன். பரவாயில்லை முறுக்கு எல்லாம் செய்யத் தெரியுமா!!.
நீக்குஅந்த முறுக்கு சாப்பிடுகிற மாதிரி இருக்குமா இல்ல அதை கடிக்கும்போது பல்லு விழுந்துருமா?
தேன்குழல் செய்து மனைவியை மயக்குவது எப்படி?http://avargal-unmaigal.blogspot.com/2015/01/blog-post.html
நீக்குநீங்கள் செய்து தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
கடிக்கும்போது பல்லு விழுந்துருமா? ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
உங்கள் குறிப்பு/பதிவு கண்டேன் மதுரைத் தமிழன். மகிழ்ச்சி.
நீக்குமுகநூலிலும் கண்டு மகிழ்ந்தேன். இங்கும் காணக் கிடைத்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குகுட்மார்னிங். இருங்க இப்போதுதான் யஸாகா சாப்பிட்டிருக்கிறேன். அரைமணிநேரம் கழித்துதான் காபியே! தேன்குழல் அதற்கு அப்புறம்தான் சாப்பிடவேண்டும்!
பதிலளிநீக்குயஸாகாவா? இது என்ன புதுசா? (ஒருவேளை என்ன வாங்கிக்கொடுத்தார் என்று தெரியாதவாறு யாரேனும் கொடுத்ததைக் கலாய்க்கிறீங்களா?)
நீக்குஹாஹா :) நானும் அதென்னன்னு ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிட்டேன் :) ஆயுர்வேதிக் மெடிசின்
நீக்குயசாகா என்பது ஆயுர்வேத மருந்தா.... இப்போது தான் அறிந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
நீக்குபிளாஸ்டிக் இல்லா சமையலறைக்குப் பாராட்டுகள். விஸ்வாசம் இன்னும் பார்க்கவில்லை. நல்ல பிரிண்ட்டுக்கு முயற்சிக்கவில்லை! அமேசானில் வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஜாடிகள் நன்றாய் இருக்கின்றன. ஆனால் ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும்!
பதிலளிநீக்குஜாடிகளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் - அதே. இப்போது இன்னும் சில ஜாடிகள் பெரியம்மா வீட்டிலிருந்து வந்திருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆதி ஜாடியில் தயிர் செய்தால் புளிக்காதுதான் அதாவது டக்கென்று..அது போல மாவும்...ஆனால் சென்னை சம்மர் வெயிலுக்கு ஹிஹிஹி.....
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
நீக்குமுக நூலில் பார்த்தேன். முறுக்கு தேங்குழல் பிரமாதம்.
பதிலளிநீக்குசுத்தமான சமையலறை ஆரோக்கியத்துக்கு முதல் படி.
வெங்கட் மாட்டிக் கொண்டாரா.
கணவர்களுக்கு மறதி ஜாஸ்திமா.
கதம்பம் சூப்பர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கிட்டே டிவியில படம் பார்த்த மாதிரி இருந்தது தங்களின் கதம்பம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குதிருகுமூடி ஜாடி நான் சின்னவயதிலேயே பார்த்திருக்கிறேனே...
பதிலளிநீக்குகதம்பம் நல்லா இருந்தது. என் ஒபினியன், மளிகை சாமான் வைத்துக்கொள்வதற்கு அந்த பெரிய பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்குவதால் தவறில்லை. அது ஆயுளுக்கும் உபயோகப்படும். பிளாஸ்டிக்கின் பிரச்சனை, அது மக்கிப்போவதில்லை என்பதுதான். இன்னொன்று, எவர்சில்வர் பாத்திரங்களைவிட பிளாஸ்டிக் பாட்டில்களில் இன்னுமே நல்லா இருக்கும் (வைக்கும் பொருட்கள்)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குமீண்டும் ஒரு முறை இங்கு வாசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமுறுக்கு தேன்குழல் கண்ணைக்கவர்கிறது .ஜாடி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் அழகா இருக்கு . .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.
நீக்குஎன்னமோ தெரியவில்லை. இந்த மாதிரி பிடிச்ச தின்பண்டங்களை பற்றி நல்ல பசி நேரத்திலேதான் படிக்க வாய்க்குது.
பதிலளிநீக்குஜாடி எல்லாம் ஜோடி ஜோடியாக இருக்குது. ஜோடி இல்லாத ஜாடி வருத்தப்படாதா!
ஜோடி இல்லாத ஜாடி வருத்தப்படாதா? :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
முகநூலில் வாசித்தேன். அங்க்கும் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஎன் வீட்டில் கண்ணாடி பாட்டில்கள், எவர்சில்வர் ட்ப்பாதான் நிறைய.
நல்ல தரமான பிளாஸ்டிக் டப்பாவும் இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதேன்குழல் பார்க்க அழகு.
பதிலளிநீக்குதிருகு ஜாடிகளில் எண்ணெய், புளி, உப்பு எல்லாம் வைத்து இருந்தார்கள்.
நானும், உப்பு, புளி, ஊறுகாய்களுக்கு ஜாடி வைத்து இருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குதிருகு ஜாடிகளில் எண்ணெய், புளி, உப்பு எல்லாம் வைத்து இருந்தார்கள் என் அம்மா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குதேன்குழலைப் போலவே கதம்பமும் சுவை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா.
நீக்கு//வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "அது யாரோட போனீங்களோ!!! சத்தியமா நான் வரலை!! என்றேன் :)//ஹாஹாஹா! வெங்கட் என்பவர்களே இப்படித்தான் இருப்பார்களோ? எங்கள் வீட்டிலும் இதே உரையாடல் நடக்கும்.
பதிலளிநீக்குஆஹா... உங்கள் வீட்டிலுமா.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா.