தொகுப்புகள்

சனி, 18 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – சிரிப்பு – பல்பு – சம்பாவின் இசை – மகிழ்ச்சி – பதிலடி - சொர்க்கம்


காஃபி வித் கிட்டு – பகுதி 63

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கஷ்டப்படுகிறவன் கிட்ட சிரிப்பு இருக்காது… சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது… ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

காகம் தந்த பல்பு:

இந்த வாரத்தின் ஓர் நாள்.  நடுவில் சில நாட்கள் அலுவலகம் சென்று வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வீட்டில் தான்.  பதிவுலகம் பக்கம் உலா வருவது, வீட்டில் சுத்தம் செய்வது, சமைப்பது, சாப்பிடுவது, உறங்குவது, படிப்பது என பொழுது போய்க் கொண்டு இருக்கிறது.  ஒரு நாள் இரவு பத்துமணிக்கே உறங்கிவிட்டேன்.  நல்ல உறக்கம்.  திடீரென காகம் ஒன்று ”கா கா, கா கா” என கரையும் ஒலி காதில் ஒலிக்க, எழுந்து கொண்டேன். விடிந்து விட்டது போலும், சரி இன்றைய வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு,  கண்களைத் திறக்காமல் கைகளைத் தேய்த்து கண்களில் வைத்துக் கொண்டு, கண்களைத் திறந்து எனது உள்ளங்கைகளை பார்த்துக் கொண்டேன்.  அப்படியே நடந்து பால்கனிக்கு வந்து பார்த்தால் ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது. என்னடா இது, என்னதான் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும், இப்படியா இருக்கும்? காகம் கரைந்ததே, விடியவில்லையா, என நினைத்துக் கொண்டே வந்து கடிகாரத்தினைப் பார்த்தால் நள்ளிரவு இரண்டு மணி!  அட ஏமாற்றி விட்டாயே காகமே என அதனைக் கடிந்து கொண்டு மீண்டும் படுக்கையில் விழுந்தேன்!  காக்கா எப்போது வேண்டுமானாலும் கரையும்!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஒரு கிராமியப் பாடல்.  பாடலை ரசிப்பதோடு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை காணொளியாகவும் காண முடியும் என்பது இரட்டிப்பு சந்தோஷம் தருவது. பாடலைக் கேட்டுக் கொண்டே இயற்கையையும் ரசிக்கலாமே…



எங்க சுத்திட்டு இருக்கீங்க…

அலுவலகத்திலிருந்து அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதால் காலையிலேயே தயாராகி விடுகிறேன் – எப்போதும் போலவே.  காலை உணவு, மதிய உணவு தயார் ஆனதும், நானும் தயாராகவே இருக்கிறேன் – எப்போது வேண்டுமானாலும் அலைபேசியில் அழைத்து, அரை மணி நேரத்திற்குள் அலுவலகம் வந்து சேரச் சொல்கிறார்கள்.  சூழல் அப்படி இருக்கிறது. பேருந்துகள், ஆட்டோக்கள் என எதுவுமே இயங்காத சூழலில் உடனடியாக அலுவலகம் சென்று சேர்வது இயலாத காரியம்.  Essential Services என இருக்கும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்காக சில பேருந்துகளை இயக்குகிறார்கள் என்றாலும் வீட்டிலிருந்து சற்று தூரம் நடந்து அங்கே நீண்ட நேரம் காத்திருந்தால் தான் பேருந்து கிடைக்கிறது. இல்லை எனில் நடை தான்! சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவு! நடந்து சென்று மாலை திரும்பும் போதும் நடை! அல்லது நீண்ட நேர காத்திருப்பு! ஒரு நாள் அலுவலகத்திலிருந்து இரவு ஏழு மணிக்கு புறப்பட்டு வீட்டிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது வழியிலேயே அழைப்பு – திரும்பி வரச் சொல்லி! என்னையே நொந்தபடி திரும்பினேன்.  அங்கே இருந்த காவல்துறை நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் – “எங்க சுத்திட்டு இருக்கீங்க?”   

அவரிடம் பதில் சொல்லும் விதமாக, “ஜனாப்b, உங்களைப் போலவே நானும் பணியில் இருக்கிறேன் – சுகாதாரத் துறை ஊழியன் – காலையிலிருந்து அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தேன் – இப்போது தான் புறப்பட்டேன் – திரும்ப அழைக்கிறார்கள்” என்று சொல்ல, “இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலையோ? பத்திரமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை” என்று சொல்லி அனுப்பினார்.  மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று வேலை முடித்து வீடு திரும்பிய போது மணி எட்டரை! அடுத்த நாளும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று சொல்லி தான் வீட்டுக்கு அனுப்பினார் எங்கள் அதிகாரி! அலுவலகத்தில் பகல் இரவு பாராமல், சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களுக்கு – பத்மநாபன் அண்ணாச்சி உட்பட - இந்த நேரத்தில் ஒரு சல்யூட்! கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே சொல்லித் தான் ஆக வேண்டும்.   

இந்த வாரத்தின் கேள்வி பதில்:

கேள்வி: மகிழ்ச்சியான நபர் யார்?

பதில்: (1) விருந்து இலையில் வைக்கப்படும் எல்லாவற்றையும் சாப்பிடுபவர்; (2) கஞ்சத்தனம் இல்லாமல் பாராட்ட தெரிந்தவர்; (3) தன் வீட்டை ஓர் நாளாவது பூட்டி விட்டு சுற்றுலா செல்லத் தயாராக இருப்பவர்; (4) தன் கடமைகளை எப்போதும் விக்கிரமாதித்தனின் வேதாளம் போல் தானே என்றும் ஏற்றுக்கொண்டவர்; (5) படுத்ததும் உறங்கிவிடுபவர். – பதில் சொன்னவர் சுமதி வில்வராஜ் (தமிழ் கோராவிலிருந்து!)

இந்த பதில்களிலேயே அதிகம் பிடித்தது மூன்றாவது பதில் தான்! உங்களிடம் இக்கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லலாமே!

படித்ததில் பிடித்தது:

இந்த வாரத்தின் படித்ததில் பிடித்ததாக ஒரு ஜென் கதை!

சரியான பதிலடி…

ஜென் துறவி ஒருவர், நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள இருந்தார். அதனால் அவர் தன் மடாலயத்தில் இருந்து புறப்பட்டார். பயணம் செய்யும் போது, ஒரு பெரிய ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆற்றை கடக்க சாய்ந்து விழுந்த ஒரு தென்னை மரத்தை தான் அந்த ஊர் மக்கள் பயன்படுத்தினர்.

இந்த மரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அத்தகைய குறுகலான மரம் அது. துறவியும் கடப்பதற்கு மரத்தில் ஏறி நடக்க ஆரம்பித்து, கரையை கடக்கும் அளவில் வந்துவிட்டார். அப்போது மறுகரையில் இருந்து, ஒருவன் ஆற்றை கடக்க ஏறி வந்தான். அவன் மிகவும் கோபக்காரன், யாரையும் மதிக்காதவன். இதனால் அவன் ஊரில் உள்ளோரிடம் கெட்டப் பெயரைத் தான் ஈட்டினான்.

ஆனால் அவனிடம் துறவி அன்புடன், "தம்பி, எனக்கு சிறிது வழிவிடுங்கள், நான் இந்த ஆற்றை கடக்க இன்னும் சிறிது தூரம் தான் உள்ளது. கொஞ்சம் வழிவிட்டால் நன்றாக இருக்கும்" என்று கேட்டார்.

அதற்கு அவன், "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை" என்று ஆணவத்தோடு கூறினான். ஆனால் பெரியவர் எதுவும் பேசாமல், திரும்பி சென்றார். பின் அவன் "எதற்கு எனக்கு வழிவிட்டீர்கள்?" என்று கேலியாக கேட்டான்.

துறவி அதற்கு "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு" என்று கூறி மறுபடியும் நடக்க ஆரம்பித்தார்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2011-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவிலிருந்து…

இந்த இடத்தில் என் பெரியம்மாவின் [அம்மாவின் அக்கா] சமையல் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நல்ல காரசாரமாய் சுவையாக இருக்கும் அவர்கள் சமையல். நமக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்து தினம் தினம் ஒவ்வொரு வகையாக சமைத்துத் தருவார்கள். நான் என்று அல்ல, வீட்டிற்கு வரும் யாரும் ”எனக்கு இது பிடிக்கும் என்று சொல்லிவிட்டால், எத்தனை நாட்கள் கழித்து திரும்ப வந்தாலும் மறக்காமல் அவருக்குப் பிடித்த அந்த உணவினை சமைத்துத் தருவார். செய்யும் ஒவ்வொரு உணவு வகையும் நேர்த்தியாகயும், சுவையாகவும் இருக்கும். அப்புறம் என்ன, சுவையான உணவினை உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்ணைத் தழுவ சிறிது நேரத்தில் நித்திராதேவியின் வசப்பட்டு மாலையில் எழுந்தால் மீண்டும் சுடச்சுட காபி, கொரிக்க எதாவது கிடைக்கும்.  முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

66 கருத்துகள்:


  1. காக்காவிற்கு பசி எடுத்து உங்க வீட்டுபக்கம் வந்த கரைந்து இருக்கீறது ஆனால் அதுக்கு சாப்பாடு போடாமல் தூங்கிவிட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையேதான் நானும் நினைத்தேன்!

      நீக்கு
    2. இராத்திரி ரெண்டு மணிக்கா பசிக்கணும் காக்காய்க்கு! :) அதுக்கு நம்மள மாதிரி மூணு வேளை கணக்கு இல்லை என்பதையும் ஒத்துக்கணும் மதுரைத் தமிழன்!

      நீக்கு
    3. ஹாஹா... உங்களுக்கும் அதே மாதிரி தோன்றியதா? நல்லா இருக்கு! பொதுவாக காக்காய்/பறவைகளுக்கு இங்கே உணவு வைக்கும் வழி இல்லை! மொட்டை மாடிக்கு போகும் வழி இல்லை ஸ்ரீராம்!

      நீக்கு
  2. என் சாய்ஸ் கஞ்சத்தனம் இல்லாமல் பாராட்ட தெரிந்தவர்;

    பதிலளிநீக்கு
  3. வாங்க நம்ம வீட்டுக்கு உங்கள் பெரியம்மா சமையல் போலத்தான் என் சமையலும் நல்ல காரசாரமாய் சுவையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துடலாம் மதுரைத் தமிழன் - என்ன பாஸ்போர்ட் என்கிட்ட கிடையாது - கள்ளத்தோணி வழி எதும் இருக்கா? ஹாஹா....

      நீக்கு
  4. பொன்மொழி ஸூப்பர் ஜி
    காகம் தந்த பல்பு ஹா.. ஹா..

    2) கஞ்சத்தனம் இல்லாமல் பாராட்ட தெரிந்தவர்.

    இது எனது பதில், மற்றும் பழக்கம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      காகம் தந்த பல்பு - ஹாஹா... எப்படி எல்லாம் சோதிக்கிறாங்க!

      உங்களுடைய பதிலும் பழக்கமும் சிறப்பு. பாராட்டுகள் கில்லர்ஜி.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.
    வாசகம் அருமை. கஸ்டத்திலும் சிரிப்பது உண்மையிலேயே கஸ்டம்தான்.அங்கு தோல்விகள் வரவே அஞ்சும்.

    காகம் தந்த பல்பு சுவாரஸ்யமாக இருந்தது. காகம் அந்த நடு இரவில் கரைய வேண்டுமா?:) ரசித்தேன்.

    இந்த சூழ்நிலையில், நடந்து சென்று அதுவும் விடுமுறை நாட்களிலும், பணிக்கு அழைக்கும் போதெல்லாம் சென்று வருவது மிகவும் சிரமம்தான். உங்களுக்கும் ஒரு சல்யூட். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது. 4வதும், 5தாவதும் அருமை. இதற்கென்ற பதிலை உடன் கூற இயலவில்லை.

    ஜென் கதை நன்றாக உள்ளது. விட்டுக் கொடுத்தலின் முக்கியத்துவம் அங்கே பிரதிபலிக்கிறது.

    பின்னோக்கிப் பார்க்கலாம் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. இது போல் ஒரு பெரியம்மா அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லா பகுதியும் சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    உங்களுடைய நேற்றைய பதிவுக்கு நான் பிறகு வந்து கருத்துரை தருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கஷ்டத்தில் சிரிப்பது கடினமே.

      காகம் - நடு இரவில் கரைய வேண்டுமா - அதே தான்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. காஃபி வித் கிட்டு ரசிக்கும்படி இருந்தது. உங்கள் சமையலுக்குத் தேவையான எல்லாம் கிடைக்கிறதா?

    படுத்ததும் உறக்கம் வருபவர் கவலையில்லாத மனிதர்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      சமையலுக்குத் தேவையானவை கிடைக்கிறது - பிரச்சனை எதுவும் இல்லை! ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடு இருக்கும் Compound- உள்ளேயே காய்கறி கிடைக்கிறது. பால் மற்றும் இதர பொருட்களும் கிடைக்கின்றன. பிரச்சனை இதுவரை இல்லை.

      படுத்ததும் உறக்கம் வருபவர் - கொடுத்து வைத்தவரே.

      நீக்கு
  7. காகம் கரைவது போல அலார்ம் ட்யூன் யாருடைய callக்களனும் வைத்துவிட்டீர்களோ என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அப்படி எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை நெல்லைத் தமிழன். தனித்தனி காலர் ட்யூன் எல்லாம் செட் செய்யவில்லை.

      நீக்கு
  8. ஆமாம், எந்த ஊரில் காகம் கத்தி மக்கள் எழுந்திருக்கிறார்கள்? அந்த காலத்தில் கோழி கூவி தான், மக்கள் எழுந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு.

    என் சாய்ஸ் - படுத்ததும் உறங்கிவிடுபவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கும் கிராமங்களில் சேவல் கூவி மக்கள் எழுந்திருப்பது உண்டு சொக்கன் சுப்ரமணியன்.

      படுத்ததும் உறங்கி விடுபவர் - நல்ல சாய்ஸ்!

      நீக்கு
  9. ஆமாம், எந்த ஊரில் காகம் கத்தி மக்கள் எழுந்திருக்கிறார்கள்? அந்த காலத்தில் கோழி கூவி தான், மக்கள் எழுந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு.

    என் சாய்ஸ் - படுத்ததும் உறங்கிவிடுபவர்

    என்னுடைய பெயர் வரவில்லை என்பதால் மீண்டும் பின்னுட்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடையாரில் இருந்தபோது, வளாகத்தில் இருந்த மரங்களிலிருந்து காகம் மற்ற பறவைகளின் ஒலி 4 1/2 மணியிலிருந்து கேட்க ஆரம்பிக்கும். அதுதான் எனக்கு இயற்கை அலார்ம்.

      நகரங்களில் கோழியாவது கூவுவதாவது.

      நீக்கு
    2. எனக்கு இந்த அனுபவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிடைத்தது.

      நீக்கு
    3. இங்கேயும் காலைப் பொழுதில் பறவைகளின் குரல் ஒலிப்பதில் எழுந்திருக்கிறேன் சில சமயங்களில் சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
    4. இயற்கையான அலார்ம்! இங்கேயும் இப்போது நன்கு கேட்கிறது! பல நாட்களில் பறவைகளின் குரல் கேட்டே எழுந்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தில்லியில், எங்கள் பகுதிகளில் யாரும் கோழி வளர்ப்பதில்லை! :)

      நீக்கு
    5. ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாளின் ஊர் ஆயிற்றே! சிறப்பு தான் ஸ்ரீராம்.

      நீக்கு
  10. வலை ஓலை வலைத் திரட்டி ஊடாக வருகை.

    தங்கள் தொகுப்பு அருமை. படுத்ததும் உறங்குவதும் கவலை இல்லாமல் சுற்றுலா செல்வதும் ஒரு மனிதனுக்கு தேவை. ஜென் கதை சிறப்பு. முட்டாள்களுக்கு வழி விட்டு செல்வது சிறப்பு.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      நீக்கு
  11. ஓயாமல் உழைக்கும் தங்களுக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ இன்றைக்கும் அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா. பிரச்சனைகள் விரைவில் விலக வேண்டும்.

      நீக்கு
  12. ஆரம்பத்தில் அருவி தரும் இனிமையான சத்தத்துடன் காணொளி பாடல் மிகவும் பிடித்தது... இயற்கை அழகை மிஞ்சுவதேது...?

    கேள்வி: பதில்கள் அனைத்தும் அருமை...

    சக மனிதனிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி மகிழ்பவரே மகிழ்ச்சியானவர்... அதில் முதன்மை விவசாயி...

    இன்றைய நிலைக்கு : பதில் 5...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      கேள்விக்கான பதில் நன்று.

      நீக்கு
  13. உங்களுக்கு ஐந்து கிலோமீட்டர். எனக்கு பத்து கிலோமீட்டர். இயல்பான வாழ்க்கைக்கு ஏங்குகிறது மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து கிலோ மீட்டர் - கடினம் தான். இங்கே ஒருவர் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகிறார் - சொன்னாலும் கேட்பதில்லை! தினமும் 50 கிலோ மீட்டர் நடை - Ex-serviceman. வேலை நாட்களில் எல்லாம் வருகிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆகிறதாம் - ஒரு பக்கத்திற்கு! ரொம்பவே சின்சியர்! அதுவும் இந்த கோடை நாட்களில் நடப்பது கடினம் - நேற்று அவரிடம் பேசியபோது மர நிழலில் நடந்து சென்று விடுவேன் என்று சிரித்தபடி சொல்கிறார்!

      நீக்கு
    2. நான் நடப்பதில்லை. என்னால் முடியவும் முடியாது! ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து ஐடி ப்ரூஃப் அலுவலக சர்ட்டிபிகேட் கொடுத்து... செலவு. அடிக்கடி ஐடி காட்டி போலீஸுக்கும் பதில் சொல்கிறேன்.

      நீக்கு
    3. நீங்கள் ஆட்டோவில் சென்று வருவதைச் சொல்லி இருந்தீர்கள் ஸ்ரீராம் - நினைவில் இருக்கிறது. இங்கேயும் அலுவலக வண்டி - ஸ்பெஷல் பர்மிஷன் உடன் இருப்பதால் கேள்விகள் இல்லை - ஆனால் எல்லா நேரமும் அலுவலக ஐடி கழுத்தில் மாலையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது!

      நீக்கு
  14. நீங்கள் மகிழ்ச்சிக்கு மூன்றைத்தான் தெரிவு செய்வீர்கள் என்று நினைத்தேன். சரியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது தான்! ஹாஹா... நமக்கு பயணம் தானே பிடித்த விஷயம் ஸ்ரீராம்!

      நீக்கு
  15. காகத்திற்கு "கை" இல்லை என்பதால் ... நம் பிரதமர் மோடி ஐயாவின் கோரிக்கைக்கு பணிந்து வாயாலேயே "கொரானா"வுக்கு கும்மி அடித்திருக்கும் ... இது புரியாமல் விடிந்து விட்டதாக கருதி அர்த்த ராத்திரியில் எழுந்து வீணாக கண்களை கசக்கி உள்ளங்கையை சொறிந்துகொண்டே மொட்டை மாடியில் உலா வந்திருக்கிறீர்கள் ....ம் ம்ம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரானாவுக்கு கும்மி - :)

      மொட்டை மாடியில் உலா அல்ல! Balcony-இல் சிவா.

      நீக்கு
  16. கேள்வி: மகிழ்ச்சியான நபர் யார்?
    பதில் :- பிறருடைய வேதனைகளை துடைக்க எவரொருவர் தன்னலம் கருதாது பிறர் நலம் பேணி மகிழ்ச்சியாக முன்வருகிறாரோ ... அவரே அவருக்கும், அனைவருக்கும் மகிழ்ச்சியான நபர் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  17. கேள்விக்கான உங்கள் பதில் சிறப்பு. பாராட்டுகள் சிவா.

    பதிலளிநீக்கு
  18. பொன்மொழி அட்டகாசம்! மற்றவர்களுக்காக உழைக்கும் உங்களுக்கும், உங்கள் சகாக்களுக்கும் பாராட்டுகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரட்டும். 'சோடியம் வேப்பர் லாம்பை சூரியன் என்றும் நினைத்து ஏமாறும் காக்கை' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். அப்படி ஏமாந்த காக்கை உங்களையும் ஏமாற்றி விட்டதோ? தன்  வரவுக்குள் செலவை அடக்க முடிகிற   மனிதனே  மகிழ்ச்சியானவன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      சோடியம் வேப்பர் லாம்பை சூரியன் என்று நினைத்து ஏமாறும் காக்கை - :)

      கேள்விக்கான உங்கள் பதில் சிறப்பு.

      நீக்கு
  19. பொன்மொழி படித்தேன் அருமை. காணொளி பார்த்தேன், இயற்கையை அழகு, பாடல் இனிமிய.
    காணொளி இயற்கையை பார்த்து கடைவீதியில் வலம் வந்த உணர்வு கிடைத்தது.
    காகம் இரவு போடும் சத்தம் பகல் மாதிரி இருக்காது, நீங்கள் கூர்ந்து கவனித்தால் வேறுபாடு தெரியும்.

    கவலை உள்ள மனிதனும் படுத்தவுடன் தூங்குவதை பார்த்து இருக்கிறேன் அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொள்வேன். உறங்கும் நேரத்திலாவது கவலை இல்லாமல் இருக்கட்டும் என்று வாழ்த்துவேன் அவர்களை.

    ஜென் கதை அருமை.

    பதிலளிநீக்கு
  20. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

    காணொளி, கதை மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. காக்கா ஏன் நடு ராத்திரில கத்துச்சு?! அதை வச்சு எதாவது ராசிபலன் சொல்லி யூ ட்யூப்ல அப்டேட் செஞ்சிருக்கலாமே!

    தொடர்ந்து 15 நாட்கள் வேலைக்கு போறதுன்னா உடல் என்னத்துக்கு ஆகும்?! சரியான போக்குவரத்து இல்லாததும், கொரோனா பற்றிய பயமும்தான் சீக்கிரத்தில் களைப்படைய காரணம்ன்னு நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கா ஏன் நடு ராத்திரில கத்துச்சு - அதை வைத்து ராசிபலன் - ஹாஹா... நீங்கள் முயற்சித்துப் பாருங்களேன் ராஜி! :)

      தொடர்ந்து வேலை பார்ப்பது சிரமம் தான் - மனதளவிலும் அழுத்தங்கள் இருக்கின்றது. விரைவில் சூழல் சரியாக வேண்டும். நலமே விளையட்டும்.

      நீக்கு
  22. ஒரு கதை, ஓரு சிந்தனை, ஒரு அனுபவம், ஒரு கேள்வி, ஒரு இசை என பலபக்கமாக தந்திருக்கின்றீர்கள். மனிதன் எதற்குமே திருப்திப்படுவது இல்லை. அந்த நிமிட மகிழ்ச்சி கூட போதாது என்று மேலும் தேடுகின்ற பண்புள்ளவன். எனது கணவன் படுத்த உடனே தூங்கிவிடுவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எனக்கு இலக்கியம் வாசிக்கும் போது கேட்கும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் . விளக்க முடியாது. ஆனால் திருப்தியும் ஏற்படாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகளை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.

      நீக்கு
  23. படுத்ததும் தூங்குபவரிடம் மீதமுள்ள அனைத்தும் இருக்கச் சாத்தியம் என்பதால் என் சாய்ஸ் அதுதான்..

    பதிலளிநீக்கு
  24. முதல் படமே ஹா ஹா ஹா காஃபி இல்லாமல் பொழுது விடிவதாவது!!!

    வாசகம் செம!

    காகம் தந்த பல்பு!!! ஹா ஹா ஹா ஹா ஹா...நடு இரவு கூட சில சமயம் கரையும் ஜி. அது என்ன சேவலா என்ன?!! ஹா ஹா இங்கு நம் வீட்டு சைடில் ஒரு பெரிய தோட்டம் காடு போல இருக்கும் அதற்குள் டைல்ஸ் நிறுவனம் ஆகார் என்று இருக்கிறது. இண்டஸ்ட்ரி. அருமையா இருக்கும் தோட்டம் காடு போன்று நம் வீட்டு மாடியில் நின்றால் ஃபுல் வ்யூ கிடைக்கும். அங்கு 7,8 சேவல்கள் உண்டு ஆனால் இதுவரை கரைந்து கேட்டதே இல்லை!!!!!!!

    இங்கு காலை பறவைகளின் ஒலி கேட்கும். ஆனால் 4, 4.30க்கு எழுவதால் அப்போது எந்த சத்தமும் இருக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  25. பாடல் அருமை என்றால் காட்சிகள் ஆஹா..அதுவும் ஹிமாச்சல் சொல்லணுமா?!! அந்த அடர்ந்த மரங்கள் பார்த்ததும் ஹிடும்பா கோயில் நினைவுக்கு வந்தது..

    இரவு பகல்பாராது உழைக்கும் அனைந்து அன்பர்களுக்கும் சல்யூட்!

    போலீஸ் அண்ணாச்சி சொன்னது போல விரைவில் இயல்பு நிலை வர வேண்டும் ஜி.

    மகிழ்ச்சியான நபர்? என் சாய்ஸ் 3 முதலில், அடுத்து 4 வது தவிர மற்றவை எல்லாம்...படுத்ததும் உறக்கம் வந்துவிடும்...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      விரைவில் சூழல் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும்.

      நீக்கு
  26. ஜென் கதை நல்லாருக்கு..

    உங்க பெரியம்மா என் அம்மாவை நினைவுபடுத்துகிறார்.

    சொர்கம் வாசித்தேன் சொர்கமே தான் நோ டவுட்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜென் கதை - கருத்துள்ள கதை. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உங்கள் அம்மாவை நினைவுபடுத்திய எங்கள் பெரியம்மா - இப்போது பெரியம்மாவிற்கு அவ்வளவு முடிவதில்லை கீதாஜி.

      நீக்கு
  27. நடந்து சென்று பணியாற்றி வரும் உங்களுக்குபாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நான்கு ஐந்து நாட்கள் நடை தான். தற்போது வண்டி வருகிறது மாதேவி.

      நீக்கு
  28. சில சமயங்களில் இரவில் ஏதேனும் காக்கைக்கூட்டிற்கோ அல்லது மற்றப் பறவைகளின் கூட்டிற்கோ வந்தால் காக்கை எச்சரிக்கைக் குரல் கொடுக்கும். இது அடிக்கடி நிகழும். நான் நடு இரவில் அடிக்கடி காக்கை கரைவதைக் கேட்டிருக்கேன். பச்சைக்கலரில் எழுதி இருக்கும் அலுவலகச் செய்தியும், ஜென் கதையும் படிக்கச் சிரமமாக இருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டுபடித்தேன். மகிழ்ச்சியான நபர் யார்னு என்னைக் கேட்டால், படுத்ததும் உறங்குபவரைத் தான் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை நிறம் படிக்க சிரமமாக இருந்தது - கவனத்தில் கொள்கிறேன் கீதாம்மா...

      நீக்கு
  29. காக்கை கத்தும் தொனியில் இருக்கும் மாறுதலைக் கவனித்துப் பார்க்கவும். அதோடு காக்கை காலை சீக்கிரம் எழுந்திருக்காது. தாமதமாகத் தான் கரையும். காக்கை கரையும்வரை தூங்கிவிட்டோமேனு சொல்லுவது தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொனியைக் கவனித்துப் பார்க்க அந்த இரவில் தோன்றவில்லை கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. Geetha Sambasivam ... எனனாது காக்கை காலை சீக்கிரம் எழுந்திருக்காதா ? ... புதுசா இருக்கு ... ஒருவேளை உங்க ஊரு காக்கா பாலிமர் டிவியில படம் பாத்துகிட்டு லேட்டா தூங்க போகுதா இருக்குமோ ? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
    3. டிவி பார்த்துட்டு லேட்டா தூங்குமோ? ஹாஹா... இருக்கலாம் சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....