தொகுப்புகள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

முதல் காதல் - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மனதுக்குள் பிடித்தவர்களை பார்க்காமல், பேசாமல் கூட இருந்து விடலாம். ஆனால்… நினைக்காமல் ஒருபோதும்  இருக்க முடியாது.





இந்த வாரம் ஒரு வெளிநாட்டு குறும்படம். சீன மொழியில் எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும், ஆங்கிலத்தில் சப் டைடில் உண்டு என்பதால் தைரியமாக பார்க்கலாம்.  ஒரு சிறுமி… அவளுடைய முகத்தில் ஒரு சிவப்பு மச்சம் – சற்றே பெரிய மச்சம்.  அதனாலேயே அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை.  தனியாகவே இருக்கிறாள்.  வளர்ந்த பின்னும் தனிமையே அவளுக்கு பிடித்திருக்கிறது. அவ்வப்போது சில இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும், அவளது சிவப்பு மச்சம் அவளை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது. எல்லா சமயங்களிலும், அவளுடைய துக்கம், சந்தோஷம் என அனைத்து நேரங்களிலும் அவளுடைய கூடவே இருப்பது அவளிடம் இருக்கும் ஒரு பொம்மை. அந்த பொம்மை கூட ஒரு சிறுவன், அவள் சிறுமியாக இருந்தபோது கொடுத்தது தான்.  அந்த சிறுவனை, இளைஞனாக பார்க்க நேர்ந்தாலும் ஏதோ ஒரு தடுமாற்றம்.  அந்த இளைஞரின் நோட்டுப் புத்தகம் ஒன்றில் இவளது ஓவியம். சிறு வயதில் கொடுத்த பொம்மையுடன்.  அந்த இளைஞரை மீண்டும் பார்க்க நேர்ந்த சமயத்தில் அவர்கள் இருவரும் பேசுகிறார்கள். அவர்கள் மேற்கொண்டு என்ன முடிவு செய்தார்கள் என்பதை குறும்படத்தில் காணுங்கள்!



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, An Unconventional Love Story என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.


    சீனக் குறும்படமா? ஆ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      சீனக் குறும்படம் - ஹாஹா... பயம் வேண்டாம் - படம் நன்றாகவே இருக்கிறது.

      நீக்கு
  2. பொன்மொழி உண்மையான வார்த்தை ஜி

    சீன படம்.... கொரோனா தாக்காது என்றால் பார்க்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      கொரோனா தாக்காது என்றால் பார்க்கிறேன் - ஹாஹா... பயம் வேண்டாம் கில்லர்ஜி. இணைய வழி இந்த வைரஸ் தாக்காது!

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    அருமையான வாசகம். அதை விட அழகான
    குறும்படம்.
    ஏன் அவர்கள் ஒன்று சேரக் கூடாது. ஏமார்ரிவிட்டார் படம் எடுத்தவர். குழந்தைப் பெண் ,பெரிய பெண், அந்த ஷான் எல்லோரும் இனிமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
    இதுதான் யதார்த்தமோ.
    மிக மிக நன்றி வெங்கட். இனிய ஞாயிறுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. அவர்கள் சேர்ந்து இருக்கலாம் - அப்படி இருந்திருந்தால் நல்ல முடிவாக இருந்திருக்கும். எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  4. நான் உனை நினைக்காத நேரமுண்டோ பாடல் நினைவுக்குக் கொண்டு வருகிறது அந்த வாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ? பழைய பாடலா வல்லிம்மா?

      நீக்கு
  5. அருமையான ஒரு குறும்படம். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன். ஒன்று சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - அதுவே தான் என் எண்ணமும்.

      நீக்கு
  6. இது மச்சமா அல்லது தேம்பல் என்று சொல்வார்களே அதுவா ?? பார்த்தல் தேம்பல் போல் இருக்கிறதே . இது என் பள்ளி நினைவை தூண்டுகிறது. கிட்டதட்ட இதே போன்று இடது கண்னுக்கு கீழே தேம்பல் இருந்த பெண் நினைவுக்கு வருகிறாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ஊரிலும் ஒரு பெண்ணிற்கு இப்படி இருந்தது கார்த்திக்.

      மச்சமோ, தேமலோ - அதுவும் பெரிய அளவில் இருந்து விட்டால் கொஞ்சம் கஷ்டம் தான்.

      நீக்கு
  7. மனதுக்குள் பிடித்தவர்களை பார்க்காமல், பேசாமல் கூட இருந்து விடலாம். ஆனால்… நினைக்காமல் ஒருபோதும் இருக்க முடியாது.////









    unmaiyaana varikal sir.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  9. // மனதுக்குள் பிடித்தவர்களை பார்க்காமல், பேசாமல் கூட இருந்து விடலாம். ஆனால்… நினைக்காமல் ஒருபோதும் இருக்க முடியாது.//

    உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. //மனதுக்குள் பிடித்தவர்களை பார்க்காமல், பேசாமல் கூட இருந்து விடலாம். ஆனால்… நினைக்காமல் ஒருபோதும்  இருக்க முடியாது.//தங்களின் தற்போதைய நிலை?

    குறும்படத்தின் தலைப்பே "An unconventional love story" தானே. அதனால் தான் முடிவு எதிர்பார்த்தது போல் இல்லை.  ஆனாலும் இயல்பான நடிப்பு பாராட்டிற்குரியது. 
    20 தேதி முதல் தினம் அலுவலகம் செல்ல வேண்டும். நல்ல நடைப்பயிற்சி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது தற்போதைய நிலை இல்லை. வாசகம் தேடி எடுப்பதைப் பொறுத்து மட்டுமே தவிர என் நிலை பொறுத்து அல்ல ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      அலுவலகத்திலிருந்து இப்போது வண்டி வருகிறது. அதனால் நடை இல்லை!

      நீக்கு
  11. இந்த குறும்படைத்தையும் பாருங்களேன். 
    https://www.youtube.com/watch?v=IP8psM4LWXk

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன குறும்படம் பார்க்க முயல்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  14. வாசகம் உண்மை.
    காணொளி அருமை.

    ஆனால் சினிமாவில்தான் நடக்கும் உண்மையில் அது நடக்காது என்பது போல் இருக்கிறது.
    நடித்தவர்கள் எல்லோரும் நன்றாக நடித்து இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      காணொளி - உண்மையில் அது நடக்காது என்பது போல இருக்கிறது - ஆமாம் கோமதிம்மா...

      நீக்கு
  15. வாசகம் அருமை உண்மை.

    குறும்படம் செம...நல்லா எடுத்துருக்கங்க...என்ன முடிவு மட்டும் யதார்த்தம்னு சொன்னாலும் முடிவு சேர்வது போல காற்றியிருல்லாமோனு தோன்றியது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      குறும்படம் - முடிவு சேர்வது போல காண்பித்து இருக்கலாம்! லாம்!

      நீக்கு
  16. வாசகம் அருமை! உண்மையும் கூட!

    குறும்படம் பார்த்தேன். நெகிழ்வான கதை..இருவரின் வலியும் புரிகிறது..பாவம்.பிறகு சேர்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொள்ளலாமோ! பகிர்விற்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      குறும்படம் - இருவரின் வலி - உண்மை. சேர்ந்திருக்கட்டும் என நினைத்துக் கொள்ளலாம்! அதே தான் கிரேஸ்.

      நீக்கு
  17. குறும்படம் திறக்கலை. யூ ட்யூபில் தான் பார்க்கணும் போல. ஆனால் இந்தக் கதையின் சாயலில் ராஜம் கிருஷ்ணன் ஓர் கதை/நாவல் எழுதி ஆனந்த விகடனில் வந்தது. கழுத்தில் இதே போல் நீண்ட மச்சம். அதனால் உயர்ந்த கழுத்துடன் கூடிய ப்ளவுஸையே அணிவாள். அதோடு வலுக்கட்டாயமாக ஆண்களுடன், திருமணம் ஆனவர்களுடன் வலுவில் சென்று பேசுவாள். அவள் தாழ்வு மனப்பான்மை வெளிப்படும்போது தான் நமக்கே உண்மை புரியும். கதையின் பெயர் "புன்னகைப் பூங்கொத்து!" மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பெண்களை வைத்துப் புனையப்பட்ட நாவல்! விகடனில் 40 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்ததுனு நினைக்கிறேன். பள்ளிக்காலத்தில் தொடராக வந்தப்போப் படித்தது. கிட்டத்தட்ட இந்தக் குறும்படக் கதாநாயகியும் அதே போல்! ஆனால் இருவரும் சேரவில்லை என்பது எல்லோரும் சொல்லி இருப்பதில் இருந்து தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூவில் பாருங்கள் கீதாம்மா...

      ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கதை பற்றிய மேலதிகத் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  18. சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களைப்போல காதலும் உறுதியாக இல்லையே... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலும் உறுதியாக இல்லை! நிஜத்தில் அவர்கள் சேர்ந்திருப்பார்கள் என்றே நம்புவோம் சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....