அனைத்து நண்பர்களுக்கும்
இனிய மாலை வணக்கம். இன்றைய பொழுதின் இரண்டாம் பதிவுடன் உங்களைச்
சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுவாகவே ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதுவதே வழக்கம். இன்றைக்கு
ஒரு மாறுதலாக இரண்டாவது ஒரு பதிவு.
ஒரு சந்தோஷச்
செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் தான் இந்நாளின் இந்த இரண்டாவது பதிவு.
வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக
பயணக் கட்டுரைகள். அப்படி
எழுதிய பயணக் கட்டுரைகளை தொகுத்து www.freetamilebooks.com
தளம் வாயிலாக சில மின்புத்தகங்களும் வெளி வந்ததுண்டு. இதுவரை வெளிவந்த புத்தகங்களின் சுட்டி
எனது வலைப்பூவில் வலப் பக்க ஓரத்தில் ”தொகுப்புகள்” என்ற தலைப்பின் கீழே மின்புத்தகங்கள்
என்ற ஒரு பக்கம் உண்டு. அந்தப் பக்கத்தினைச் சுட்டினால் இது வரை வெளிவந்த எனது மின்புத்தகங்கள்
அனைத்திற்குமான சுட்டிகள் உண்டு. படிக்காதவர்கள் அங்கே எனது மின்னூல்களைப் பற்றித்
தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு அப்படி இன்னும் ஒரு மின்புத்தகம் வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த முறை அமேசான் தளம் வாயிலாக, கிண்டில்
பதிப்பாக வெளி வந்திருக்கிறது. குஜராத் மற்றும் தியு ஆகிய இரண்டு இந்திய பிரதேசங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்து “இரு மாநில பயணம் - குஜராத் தியு பயணக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை
தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...
கிண்டில் அன்லிமிட்டட்
கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்த விடுமுறை நாட்களில் செய்த பணிகளில் இந்த மின்புத்தக தரவேற்றமும் ஒன்று. இன்னும்
இருக்கும் நாட்களில் முடிந்தால் வேறு சில பயணத் தொகுப்புகளும் மின்னூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உண்டு. இந்தக்
கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ
அல்லது அலைபேசியிலோ/கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும். அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும். கிண்டில் அன்லிமிட்டட்
கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி
படிக்க வேண்டியிருக்கும். இலவசமாக வெளியிட
இங்கே வாய்ப்பில்லை – சில நாட்கள் மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும்படிச்
செய்யும் Promotions வழிகள் உண்டு. அதை செய்த பிறகும் இங்கே தகவல் தருகிறேன்.
தங்கள் தொடர்ந்த
ஆதரவிற்கும் வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி. இந்த
மின்புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடர்ந்து சந்திப்போம்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குதொடரட்டும் இன்னும்...
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குதொடரவே ஆசை. இரண்டாவது புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளை வெளியிடலாம் என இருக்கிறேன். இந்த விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள ஒரு விழைவு.
ஆகா... கிண்டிலுக்கு வந்தாச்சா... நல்லது...
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
முன்னரே ஒரு புத்தகம் இங்கே இருக்கிறது - புஸ்தகா வழியாக வெளியிட்டது. இப்போது இரண்டாவது மின்னூல் - நேரடியாக நானே வெளியிட்டு இருக்கிறேன் தனபாலன்.
நீக்குவாழ்த்திய உங்கள் நல்லுள்ளத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
அனைத்து மின்னூல்களையும் இது போல் மாற்றிடுங்கள் ஜி...
பதிலளிநீக்குஒவ்வொன்றாக செய்ய வேண்டும். இந்த கட்டாய விடுமுறை நாட்களில் இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கிறேன் தனபாலன். நாளை இன்னுமொரு மின்னூல் வெளியிட எண்ணம் இருக்கிறது.
நீக்குமுகநூலில் "அமேசான் கிண்டில் தமிழ் புத்தகங்கள்" உள்ளீர்களா...? இல்லையெனில் சேர்ந்து விடுங்கள்...
பதிலளிநீக்குஇணைப்பு → அமேசான் கிண்டில் தமிழ் புத்தகங்கள் ←
நம் வலைப்பூ நண்பர் துரை ராஜ் விஜயன் அவர்கள் ஆரம்பித்த முகநூல் குழுமம்...
முகநூல் குழுமம் - இதில் இல்லை தனபாலன்.
நீக்குதகவல் அளித்தமைக்கு நன்றி. பார்த்து அதில் சேர்ந்து கொள்ள விண்ணப்பித்து இருக்கிறேன் தனபாலன்.
வாழ்த்துகளும், பாராட்டுகளும் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்துகள். பயணக் கட்டுரைகள் மின் புத்தகங்களாக வெளிவருவது பலருக்கும் பயனாகும். தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஆஹா இது 2 வது புத்தகமோ.. நானும் கிண்டிலில் சிலதை இறக்கி வச்சிருக்கிறேன், மனதில இன்னும் ஏற்றவில்லை ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஅமேசான் தளத்தில் இரண்டாவது புத்தகம் அதிரா. வேறொரு தளத்தில் சில ஆறு மின்புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறேன் - மனைவியின் ஒரு புத்தகமும் சேர்த்து!
நீக்குமுடிந்த போது தரவிறக்கம் செய்து வைத்த புத்தகங்களை படியுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குவாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குபதிவிறக்கிப் படிக்கிறேன்.
தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி யாழ்பாவாணன் ஐயா.
நீக்குவாழ்த்துக்கள் வெங்கட் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமேலும் நிறைய பயணதொடர்கள் மின் புத்தகமாக வாழ்த்துக்கள்.
தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா...
நீக்குபயணக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து மின்புத்தகமாக வெளியிடும் எண்ணம் உண்டு. விரைவில் வெளியிடுவேன்.
இனிய வாழ்த்துகள் . தொடர்க பணி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குமகிழ்ச்சி ! இனிய வாழ்த்துகளோடு எங்கள் அன்பும் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.
நீக்கு