தொகுப்புகள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

சோட்டி சி ஈகோ - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

அகந்தை என்பது சண்டிக்குதிரைக்குச் சமம்; அது உங்களை ஒரு முறையேனும் கீழே தள்ளாமல் விடாது.

இந்த கட்டாய விடுமுறை நாட்களில் சில மணி நேரம் குறும்படங்கள் பார்க்கவே செல்கின்றன.  எனக்குத் தெரிந்த தெரியாத மொழிகளில் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  சென்ற வாரத்தில் அப்படி பார்த்த ஒரு குறும்படம் – மனதைத் தொட்ட குறும்படம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாரமும் குறும்படம் ஹிந்தி மொழியில் தான் – ஹிந்தி தெரியாதவர்கள் கவலை கொள்ள வேண்டாம் – ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு! படத்தினைப் பார்க்கும் முன்னர் சில வார்த்தைகள்…

கணவன் – மனைவி. தங்களுக்குள் இருக்கும் ஈகோவினால் பிரிந்து போகிறார்கள்.   மூன்று வருடங்களுக்குப் பிறகு ஏதேச்சையாக சந்திக்கிறார்கள். அப்படிச் சந்திக்கும் போது தேநீர் அருந்த அழைக்கிறார் கணவர்.  If you insist… என்ற படியே மனைவியும் தேநீர் அருந்தச் செல்கிறார்.  அந்த நிமிடங்களில் இருவரும் தங்கள் மனதுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள் – தங்களில் வந்த மாற்றங்கள் பற்றி, மூன்று வருடங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்திருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் காதல் பற்றி, என நிறைய தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.  வெளியே சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்துக் கொண்டே இருக்கிறது.  கடைசியில் எனக்கு நேரமாகி விட்டது எனச் சொல்லி அங்கிருந்து புறப்படுகிறார் மனைவி – “கல்லுளிமங்கன், ஒரு தடவை என்னை போகாதே என்று சொன்னால் என்ன… ஒரு முறை சொல்லி விட்டால் போதும், இப்போதே அவன் கூடவே இருந்து விடுவேனே” என நினைக்கிறார் மனைவி.  கணவனோ, “ஒரே முறை திரும்பிப் பார்த்து விடு, இப்போதே உன்னை என்னுடன் இருந்து விடு” என்று சொல்லிவிடுவேன் என நினைக்கிறார். அவர்களை பேச விடாமல் தடுப்பது ஒரு சிறு ஈகோவா?  இருவரில் யாராவது பேசினார்களா? அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.




காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, chசோட்டி சி ஈகோ என்ற தலைப்பில் நமக்கு பாடம் சொல்லும் இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. நல்ல வாசகம். அனைவருக்கும் பொருந்தும் வாசகம்.

    குறும்படக்கதை நம்மூர் S J சூர்யாவின்குஷி படத்தை நினைவுபடுத்துகிறது..... அப்புறம் மௌனராகம் க்ளைமேக்ஸ். அப்புளம் ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்து விட்டாள் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆமாம் ஸ்ரீராம் அதே ...ஆனால் குஷியில் அவர்கள் கல்யாணத்திற்கு முன்பு காதலைச் சொல்வதில்...இதில் கல்யாணத்திற்குப் பின்பு...அது ஒன்னுதான் வித்தியாசம் படம் பார்க்கலை அதனால க்ளைமேக்ஸ் பார்க்கலை பார்த்துவிட்டு வருகிறேன்...கணினில பார்க்க முடியாது.. ஸோ மொபைல்ல..

      கீதா

      நீக்கு
    2. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      குறும்படம் உங்களுக்கு நினைவூட்டியவை பட்டியல் நன்று - எனக்கு அதெல்லாம் தோன்றவில்லை - இருவரில் ஒருவராவது தங்கள் எண்ணங்களை சொல்லி விட மாட்டார்களா என்பதே கேள்வியாக இருந்து.

      நீக்கு
    3. குஷி - நான் சில காட்சிகள் மட்டுமே பார்த்த நினைவு கீதா ஜி.. :)

      குறும்படம் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்

      நீக்கு
  2. காலை வணக்கம்.
    இதோ பார்த்து விடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரிஷபன் ஜி. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  3. பொன்மொழி ஸூப்பர் ஜி
    படம் பிறகு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      குறும்படம் முடிந்த போது பாருங்கள்.

      நீக்கு
  4. பலருடைய வாழ்வில் ஏற்றம் எடுப்பதும்போது இதுபோல சில குணங்கள் அவர்களைப் பின்னுக்கு இழுத்துவிடும். இதனை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. இந்த குணம் பின்னுக்கே தள்ள்விடுகிறது.

      நீக்கு
  5. அருமையான வாசகம் வெங்கட்ஜி.

    படம் சுத்திக்கிட்டே இருக்கு ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் கதை வாசித்துவிட்டேன்...இதோ மொபைலில் பார்த்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  7. படம் அருமையா எடுத்துருக்காங்க இயல்பான நடிப்பு..இருவருக்குள்ளும் அன்பு இருக்கு மாறிட்டேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறாங்க..ஆனால் அதை யார் முதலில் சொல்வது எனும் வெட்டி ஈகோ. மற்றவர் சொல்லணும்னு எதிர்பார்ப்பு..முடிவு பார்ப்பவர்களிடம் ...

    மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டியான ஈகோ - அதனால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள் இல்லையா கீதாஜி. மீண்டும் சேர்ந்தால் நலமே!

      படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. அருமையான ஒரு குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  10. அருமையான படம்.காலதாமதம் செய்யாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி விடலாம்.

    காலம் நிறை மாற்றி இருக்கிறது, இன்னும் மாறும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      சொல்லி இருக்கலாம் - லாம்! அப்படிச் சொல்லி இருந்தால் நலமே!

      நீக்கு
  11. காலம் இருவரையும் நிறைய மாற்றி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. சிறந்த குட்டித் திரை அறிமுகம்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ்பாவாணன்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை.
    படக்கதை நன்றாக உள்ளது. இந்த ஈகோவினால்தான் சில குடும்பங்கள் பெரும் இழப்பையே சில சமயங்களில் சந்தித்து விடுகின்றன. விட்டுக் கொடுத்தல் பெரும்பாலும் நன்மையிலேயே முடியும்.என்ன செய்வது.? சிலரைத்தான் திருத்தவே முடிவதில்லையே.. ! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹர்ன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      விட்டுக் கொடுத்தல் பெரும்பாலும் நன்மையிலேயே முடியும் என்பது உண்மை.

      நீக்கு
  14. பல இளம் குடும்பங்களில் இந்த ஈகோ படுத்தும் பாட்டால் இவ்வாறாகிறது. காலம் கடந்தால் உணர்வார்களோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்று பல குடும்பங்களில் இந்த ஈகோ ரொம்பவே படுத்துகிறது.

      காலம் கடந்து உணர்ந்து பலன் என்ன? பலன் இருந்தால் நலமே மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....