அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட சாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
SOMETIMES PRAYER DOES NOT CHANGE THE SITUATION, BUT IT CHANGES OUR ATTITUDE TOWARDS THE SITUATION AND GIVES US HOPE WHICH CHANGES OUR ENTIRE LIFE.
******
ரோஷ்ணி கார்னர் - குடியரசு தின ஓவியம் - 26 ஜனவரி 2021:
குடியரசு தினம் அன்று மகள் வரைந்த ஓவியம் உங்கள் பார்வைக்கு!
சிலிண்டர் பாதுகாப்பு - LPG - கூட்டம் - 30 ஜனவரி 2021:
வீடுகளில் சமையல் எரிவாயுவை சிக்கனமாகவும், அதேசமயம் பாதுகாப்பாகவும் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து எங்கள் குடியிருப்பில் ஒரு கூட்டம் நடந்தது.
Indane-இல் இருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் பயன்படுத்துவது தான் என்றாலும் நமக்கே தெரியாமல் ஒரு சில விஷயங்களில் கவனக்குறைவாக இருக்கலாம் அல்லவா?
எங்களிடம் கேள்விகளும் கேட்டனர். நானும் சில கேள்விகளை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சிலிண்டர் தொடர்பாக என்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டேன். உபயோகமான கூட்டமாக இருந்தது!
பொக்கிஷம் - 30 ஜனவரி 2021:
நேற்று துணி அலமாரியை கொஞ்சம் சரி செய்த போது இது கண்ணில் தட்டுபட்டது! சற்றே அழுக்கடைந்தது போல இருக்கவே, கீறல் விழாத வண்ணம் சோப்பால் சுத்தம் செய்து துடைத்து வைத்தேன். 33 வருடங்களுக்கு முன்னால் கிடைத்த பரிசு! இவ்வளவு வருடங்களாக என்னிடம் பத்திரமாக உள்ளது.
அப்பா, அம்மா மறைவுக்குப் பின் கால ஒட்டத்தில் எல்லாமே மாறிப் போக இது என்னிடம் இன்னமும் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்! அம்மாவிடம் இருந்த போது இதில் அம்மன் முகத்தை வைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார். எதற்காக கிடைத்த பரிசு?
ஒரு சுதந்திர தின நாளில், என் பள்ளியில் நடைபெற்ற ஊசியில் நூல் கோர்க்கும் போட்டியில் முதல் ஆளாய் ஓடி வாங்கிய முதல் பரிசு இது. நான் அப்போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குட்டிப்பெண்!!
இந்த வாரத்தின் காணொளி - வெங்காய பக்கோடா - 30 ஜனவரி 2021:
என் அம்மாவும் சரி! என் மாமியாரும் சரி! திடீரென்று வீட்டிற்கு விருந்தினர் வந்தாலோ அல்லது பிள்ளைகளுக்கு மாலைநேரத்தில் ஏதேனும் சாப்பிட ஏதாவது பண்ண வேண்டும் என்றாலோ உடனே செய்வது இதைத் தான் 🙂
அம்மா பக்கோடா செய்யப் போகிறார் என்றால் அப்பா தான் பொடிப்பொடியாக வெங்காயத்தை நறுக்கித் தருவார். 🙂 அப்பா தி கிரேட்!! நான் என் கணவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்🙂
இந்த வாரம் Adhi's kitchen சேனலில் சுடச்சுட வெங்காய பக்கோடா செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். காணொளியை கீழேயுள்ள சுட்டி வழி பார்த்து ரசிக்கலாம்!
பார்த்து விட்டு, உங்க வீட்டு செய்முறை என்ன என்பதை சொல்லுங்களேன்.
மின்னூல் - லாக்டவுன் ரெசிபீஸ் - விமர்சனம் - சிவசங்கர் ஜெகதீசன்
எனது மின்னூல்களில் ஒன்றான லாக்டவுன் ரெசிபீஸ்-க்கு திரு சிவசங்கர் ஜெகதீசன் என்பவர், முகநூல் குழுமத்தில் அளித்த விமர்சனத்திலிருந்து சில வரிகள் இங்கேயும்.
மாலை நேரங்களில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வீட்டிலேயே செய்து மகள், மகன்களுக்கு பரிமாறும் திண்பண்டங்களை எளிய செய்முறை விளக்கம் மூலம் விளக்கியிருக்கிறார் ஆதி வெங்கட்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் வைத்துக் கொண்டு கொரிப்பது குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த விஷயம். ஆனால் வெளியிலிருந்து வாங்கும் திண்பண்டங்களில் உள்ள சிக்கல் வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த ஸ்நாக்ஸ் ஒத்துக் கொள்ளுமா? அந்த திண்பண்டங்கள் எப்போது செய்யப்பட்டது, எந்த எண்ணெயில் பொரிக்கப்பட்டது என நமக்கு எதுவுமே தெரியாதது தான். மொத்தம் 25 ரெசிபீஸ் பற்றிய செய்முறை விளக்கங்கள்.
இதில் சிறுதானிய முருங்கை பக்கோடா, உக்காரை, வாழைப்பூ வடை, தவலை வடை, பலாக்கொட்டை கட்லட், கமன் டோக்ளா வீட்டில் செய்து சாப்பிட ஆசை.
ஒவ்வொரு ரெசிபி செய்யும் முறை, பதம், அதற்கு ஊறவைப்பது, எந்த மாற்று பொருளை பயன்படுத்தியும் இந்த ரெசிபியை செய்யலாம் என்று தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆதி வெங்கட். ரெசிபி படங்கள் ரசிக்கும்படி உடனே இவற்றை செய்யும் ஆவலை தூண்டியது.
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததா என்பதை பின்னூட்டம் மூலம் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ஓவியம் - ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇன்டேன் காரர்களுடன் பேசியதில் கிடைத்த முக்கிய சில குறிப்புகளை பாகிர்ந்து கொள்ளலாம்.
பொக்கிஷம் அருமை. மனதை எழுதியது. கொடு விழாமல் சுத்தம் செய்வது - ஆம். சிலசமயங்களில் இதுமாதிரி சில பொருட்களை சுத்தம் செய்தபின் பார்த்தால் கோடுகோடாகத் தெரியும். அப்போது தோன்றும்.
வெங்காய பகோடா ஸூப்பர். காணொளி பார்க்கிறேன்.
ஓவியம் - பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குஇண்டேன் - குறிப்புகள் பகிர்ந்து கொள்ளப்படலாம் - என்று தோன்றுகிறது எனக்கும்!
பொக்கிஷம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
காணொளி - முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய கதம்பம் அருமை. பகோடா செய்யவேண்டி சில வாரங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் நேரம் அமையவில்லை. வெங்காய பகோடா செய்முறை பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். செய்முறை முடிந்த போது பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிலிண்டர் பற்றிய விளக்கங்கள் பலருக்கும் தெரிவதில்லை இது அவசியமான ஒன்று.
மகளை வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குசிலிண்டர் குறித்த விளக்கங்கள் பலருக்கும் தெரிவதில்லை என்பதே சூழல்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மகளின் ஓவியத் திறமை மிகவும் சிறப்பு. இதை விட்டு விடாமல் தொடர வேண்டும். சிலிண்டர் பாதுகாப்பு பற்றி முகநூலிலும் படித்தேன். //எங்களிடம் கேள்விகளும் கேட்டனர். நானும் சில கேள்விகளை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.// நீங்கள் என்ன கேட்டீர்கள், அவர்கள் என்ன பாதி சொன்னார்கள் என்பதை எழுதியிருந்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
பதிலளிநீக்குகேஸ் சிலிண்டர் பாதுகாப்பு குறித்த தகவல்கள் எழுதுவார் என்றே நானும் நினைத்திருந்தேன்.
நீக்குஓவியத் திறமை - தொடர்ந்தால் மகிழ்ச்சியே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.
ஓவியம் அழகு... அருமை... பாராட்டுகள்...
பதிலளிநீக்கு33 வருடங்களுக்கு முந்தைய பரிசு...! பொக்கிசம்...
ஓவியம் - பாராட்டியமைக்கு நன்றி தனபாலன்.
நீக்குபொக்கிஷம் - உண்மை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை மேடம்.
பதிலளிநீக்குவெங்காயப்பக்கொடா எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதுவும் சொந்த ஊரான சிவகாசியில் செய்வார்களே! அது வேர லெவல்.
போன வார கடைசியில் சென்று சாப்பிட்டேன்.
உங்கள் மின்னூல் படம் என்னவோ கூகுள் இமேஜ் டிஸ்கிரிப்ஷ்ஷன் அதை "Chicken 65" என டீ கோட் செய்து எனக்கு படிக்கிறது.
வெஜிட்டேரியன் நூலை கூகுள் செயற்கை நுட்பம் இன்னும் தவறாகவே டீ கோடிஹ் செய்கிறது.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குகூகுள் டிஸ்க்ரிப்ஷன் - டீ கோட் செய்த விஷயம் - ஹாஹா!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓவியம் அழகு
பதிலளிநீக்குதங்கள் மகளுக்கு வாழ்த்துகள்
ஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்ப செய்திகள் முகநூலில் படித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்களுக்கும், ரோஷ்ணிக்கும் ஆதி.
பொக்கிஷ பாதுகாப்பு அருமை.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Roshini ஓவியம் அருமை. சிலிண்டர் கேள்வி பதில் அறிய ஆவல். இங்கு piped gas தான். Chennai ல் சிலிண்டர் உபயோகித்து ஆக வேண்டும். Onion pakoda மிகவும் பிடிக்கும். Steps Follow செய்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
நீக்கு