தொகுப்புகள்

வெள்ளி, 4 ஜூன், 2021

குறும்படம் - விதி....


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதை மாந்தர்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE GOOD YOU DO TODAY WILL BE FORGOTTEN TOMORROW. BUT DO GOOD ANYWAY.


*****



குழந்தைகளுடன் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.  சிறு கவனக் குறைவு கூட நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பாதகமாக முடியக் கூடும் என்பதைச் சொல்லும் மிகச் சிறிய குறும்படம் தான் இன்று நாம் பார்க்கப் போகும் குறும்படம்.  இரண்டே இரண்டு நிமிடங்கள் தான் எடுக்கும்! ஆனால் சொல்ல வரும் கருத்து மிகச் சிறந்த ஒன்று. பாருங்களேன்.

 

மேலே இணைத்திருக்கும் காணொளி பார்ப்பதில் பிரச்சனை இருந்தால் கீழேயுள்ள சுட்டி வழி நேரடியாக யூட்யூபில் பார்க்கலாம்! 


Fate  | A Heart Touching Award Winning Short Film | Six Sigma Films


*****


நண்பர்களே, இன்றைய பதிவு/குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

18 கருத்துகள்:

  1. சிறுவன் நடித்திருக்கிறானா?   ஆச்சர்யம்.   மிக இயல்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவனின் இயல்பான நடிப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான காணொளி..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்டிப்பையன் செம இயல்பு. ரொம்ப இயல்பான நடிப்பு. ஓ மை கடவுளே! அழுகை வந்துவிட்டது....அக்குழந்தையைக் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க யாருமில்லையோ என்று தோன்றியது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிப் பையனின் இயல்பான நடிப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. பார்க்கும்போது, நானும் யாராவது காப்பாற்றி பெற்றோரிடம் சேர்த்து விடமாட்டார்களா என்று யோசித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குழந்தைகளுடன் வெளியில் செல்லும் பொழுது அவர்களின் மேல் மிகுந்த கவனம் தேவை. கூட்டமாய் இருக்கும் இடங்களை தவிர்ப்பது நல்லது. முகநூலில் அடிக்கடி குழந்தைகள் காணவில்லை என்று பார்க்கும் பொழுது பயமாக இருக்கும். பால் வடியும் அந்த குழந்தைகளின் முகம் மிகுந்த வலியை கொடுக்கும். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுடன் இருக்கும்போது அவர்கள் மேல் மிகுந்த கவனம் தேவை - உண்மை தான் வானம்பாடி.... காணொளி குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிக மிக யோசிக்க வைத்தது. கண்காட்சி நினைவுகள்.
    ஒலிபெருக்கியில் வரும் விசாரணைகள்.
    குழந்தையின் அழுகைகள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

    சஞ்சலப் படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் சஞ்சலப் படுத்திவிட்டதா? அடடா....

      கண்காட்சி நினைவுகள் - இனிமையானவை தானே வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இந்த சிறுவனை போல் இருக்கும் போது திருவிழாவில் தொலைந்து கிடைத்தேன்.
    அது போல் இந்த குழந்தை பெற்றோர்களுடன் சேர வேண்டும் என்று நினைக்க தோன்றும் குரூம்படம்.
    மிக இயல்பாக நடிப்பு என்று தெரியாமல் நடித்து இருக்கிறான் குழந்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் திருவிழாவில் தொலைந்து கிடைத்தது - மறக்கவே முடியாத நிகழ்வு தான் இது போன்றவை கோமதிம்மா. குறும்படம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இரண்டே நிமிடம்!!! எவ்வளவு strong message!!

      நீக்கு
    3. இரண்டு நிமிடத்தில் சொன்ன விஷயம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மகிழ்நிறை.

      சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....