அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மேலும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதை மாந்தர்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ANYONE CAN FIND THE DIRT IN SOMEONE. BE THE ONE THAT FINDS THE GOLD.
******
சென்ற மாதம் YouTube - Venkat’s Travelogue - A new beginning… என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில் எனது யூட்யூப் தளம் குறித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்கள் நினைவில் இருக்கலாம். எனது குரலுடன் அங்கே இது வரை மூன்று காணொளிகளை பதிவு செய்திருக்கிறேன் - அந்த காணொளிகளுக்கான சுட்டிகள் கீழே!
Let’s go to Garden of Five Senses
இந்த இரண்டாவது காணொளி வெளியிட்ட பின்னர் ஒரு யோசனை. என்னதான் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டாலும், தமிழில் பேசி காணொளி வெளியிட்டால் என்ன என்று தோன்றவே, எனது இன்னுமொரு ஜிமெயில் கணக்கு வழி யூட்யூப் பக்கம் சென்று இன்னுமொரு புதிய சேனலைத் துவக்கி இருக்கிறேன் - அங்கே தமிழில் பேசப் போகிறேன்! அந்த சேனலுக்கான பெயரும் சூட்டி விட்டேன் - பயணக் காதலன் என்ற பெயர் தான்! பொருத்தமாகத் தானே இருக்கிறது? அந்தப் புதிய யூட்யூப் சேனலில் வெளியிட்ட முதல் காணொளி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜோஹ்னா அருவி குறித்த தகவலும் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும், இந்த இரண்டு யூட்யூப் சேனல் வழி காணொளிகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் இருக்கிறது. முடிந்த வரை வாரம் ஒரு காணொளி என்ற கணக்குடன் துவங்கி இருக்கிறேன். சுணக்கம் வராமல் இருக்க வேண்டும், பணிச்சுமையும் இல்லாமல் இருந்தால், இந்த வாரம் ஒரு காணொளி என்பது தொடரும். இல்லை என்றால், முடிந்த போதெல்லாம் ஒரு காணொளி - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல்! பயணக் காதலன் யூட்யூப் சேனலில் வெளியிட்ட இரண்டு காணொளிக்கான சுட்டிகள் கீழே…
லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்பது எல்லா யூட்யூபர்களுக்குமான பொது விதி என்பதால், உங்களிடமும் சொல்லி விடுகிறேன். முடிந்தால், உங்களுக்கு விருப்பமிருந்தால் இதையெல்லாம் செய்து விடுங்கள்! புதிய காணொளி வெளியிடும்போது அவை குறித்த தகவல் உங்களுக்கும் வந்து சேரும் - பார்த்துவிட வசதியாக! அப்படியே உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே!
நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
நேரம் கிடைக்கும்போது நிச்சயம் காண்கிறேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் நெல்லைத் தமிழன். அவசரமில்லை!
நீக்குவாழ்த்தியமைக்கு நன்றி.
லைக், சப்ஸ்க்ரைப் எல்லாம் ஏற்கெனவே செய்திருக்கிறேன். வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குசப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி ஸ்ரீராம்.
நீக்கு"பயணக் காதலன்" பெயர் அருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசேனலின் பெயர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.
நீக்குதமிழிலுமாநல்ல விஷயம் வெங்கட்ஜி. பார்க்கிறேன்...யூட்டுயூபார்ஸ் சொல்வதையும் செய்துவிடுகிறேன் ஜி!!!!!!
பதிலளிநீக்குகீதா
தமிழிலும் தொடங்கி இருக்கிறேன். சப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கு நன்றி கீதாஜி.
நீக்குவாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குஅணைத்து சேனல்களிலும் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.
நூல்களில் சுவாரசியமாக பேசுவது போல, அவ்விடங்கள் குறித்த சுவாரசியமான கதைகளையும் சேர்த்து சுவைபட வரும் பதிவுகளில் பேசுங்கள் பொருத்தமான படங்களோடு .
அது மேலும் சேனலை சுவாரசியம் ஆக்கும்.
வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.
நீக்குசப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கும் தங்களது ஆலோசனைகளைச் சொன்னதற்கும் நன்றி.
காமெண்ட் யூடியூபில் பண்ணியிருக்கிறேன் .
பதிலளிநீக்குயூட்யூபில் கமெண்ட் செய்திருப்பது அறிந்து மகிழ்ச்சி அபயா அருணா ஜி.
நீக்குஅன்பு வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குஉங்கள் பயணங்களைக் காணொளி வழி தொடர்கிறோம் . வெற்றிக்கு வாழ்த்துகள்.
வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா.
நீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குசப்ஸ்கிரைப் செய்துள்ளேன் ஐயா.
வாழ்த்தியமைக்கும் சப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களின் யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதற்கு நீங்கள் வைத்த பெயர் பொருத்தமாக அழகாக உள்ளது. விரைவில் அங்கேயும் சென்று பார்த்து உங்கள் குரல் வழி பயண அனுபவங்களை கேட்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகுரல் வழி பயண அனுபவங்கள் கேட்க இருப்பதில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாழ்த்துக்கள் திரு வெங்கட்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.
நீக்குஇதுவும் காத்திருக்கு.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் கீதாம்மா.
நீக்கு