ஞாயிறு, 23 மே, 2021

YouTube - Venkat’s Travelogue - A new beginning...


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை. முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை. முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை. 


******




YouTube பக்கத்தில் பல காணொளிகள் காண்பது வழக்கம் தான்.  எனக்கென்று தனியாக ஒரு YouTube Channel துவங்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை.  பொதுவாக நான் ரசித்த சில காணொளிகளை எனது வலைப்பூவில் பகிர அவசியம் ஏற்படும்போது எனது YouTube பக்கத்தில் அந்தக் காணொளியைச் சேமித்து அதன் குறியீடுகளை (Script) Blogger பக்கத்தில் சேர்ப்பதோடு சரி. அப்படிச் சேர்க்க ஆரம்பித்தது செப்டம்பர் 2010-ல்! சில சமயங்களில் என் பயணத்தில் எடுத்த சிறு காணொளிகளையும் அப்படி YouTube பக்கத்தில் சேமித்து அதனை எனது பதிவில் பகிர்ந்து கொள்வதோடு சரி.  Venkataraman Nagarajan என்ற பெயரிலேயே அந்தக் கணக்கு இருந்தது.  பெயர் மாற்றம் செய்யவோ, அந்தத் தளம் குறித்து எங்கேயும் பகிர்ந்து கொள்வதோ இல்லை என்றே சொல்லலாம்.  ஆனாலும் அந்தப் பக்கத்திற்கான தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது.  பக்கப் பார்வைகளும் ஓரளவுக்கு அதிகமாகவே இருந்தது.  


2010-ல் அங்கே சில காணொளிகளை பகிர ஆரம்பித்திருந்தாலும், இதுவரை அங்கே பதிந்த காணொளிகள் (96 மட்டுமே - சில வெளியிடப்படாத காணொளிகளும் சேர்த்து!) ஒரே ஒரு காணொளி மட்டும் (சபேரா எனும் பாம்பாட்டி குறித்த காணொளி) இதுவரை 7.72 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. சில ஆண்டுகளாகவே அந்தப் பக்கத்தினைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை (2521 - இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும் வரை) பார்த்து, அந்தப் பக்கத்தினை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, புதிய காணொளிகளை குரலோடும், இசையோடும் பகிர்ந்து கொள்ள மகளும் மனைவியும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  ஆனாலும் எனக்கு ஏனோ அப்படிச் செய்ய இஷ்டமே இல்லை - என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது, நேரம் இருக்காது இப்படி பல காரணங்களைச் சொல்லியே தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு ஏனோ இதில் விருப்பமே இல்லை.  பதிவுகள் எழுதவே நேரம் கிடைக்காத போது இப்படி காணொளிகளும் எப்படிப் பதிவு செய்வது என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.  


இந்த முறை தமிழகம் வந்திருக்கும் போதும் காணொளிகள் குறித்த பேச்சு வந்த வண்ணமே இருந்தது.  கடந்த வாரத்தில் சில படங்களைச் சேர்த்து மகள் ஒரு காணொளி தயாரித்ததோடு, Title Card தயாரித்து, பின்னணி இசையும் சேர்த்தார்.  தொடர்ந்து குரல் கொடுக்கச் சொல்ல, அலைபேசி வழி கொஞ்சம் பேசித் தந்தேன்.  அதனையும் இணைத்து காணொளியாக மாற்றியதோடு YouTube பக்கத்தின் பெயரையும் மாற்றி பதிவேற்றியிருக்கிறார்.  வாரம் ஒரு காணொளியாவது இங்கே பதிவிட வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் வந்திருக்கிறது.  முதல் காணொளி சேர்ப்பதற்கே இத்தனை பிகு பண்ணிக்கொண்ட நான், தொடர்ந்து பதிவிடுவேனா என்பதை பொறுத்திருந்து தான் நீங்கள் பார்க்க வேண்டும்!  முதல் காணொளியாக மார்ச் 2019 மாதம் அலஹாபாத் (ப்ரயாக்ராஜ்) நகரின் கங்கையில் பயணித்த படியே அங்கே பறந்து கொண்டிருந்த பறவைகளை எடுத்த படங்களைச் சேர்த்து தயாரித்து இருக்கிறார்.  இது எனது பக்கத்தில் குரலுடன் இருக்கும் முதல் காணொளி!  குரல் கேட்டு பயந்து விடாதீர்கள் - கொஞ்சம் மிரட்டுவது போல இருக்கலாம்! :)  


அடுத்த காணொளி தயாரிக்கும்போது இன்னும் சிறப்பாகக் கொண்டு வர முயற்சிக்கலாம்! முயற்சியில் தானே இருக்கிறது வெற்றிக்கான பாதையும்!  காணொளியை நீங்கள் காண வசதியாக எனது YouTube பக்கத்தின் சுட்டி கீழே தந்திருக்கிறேன்.  பாருங்களேன். 


Outing of birds in the Ganges | First time with my voice | Venkat's Travelogue


எல்லா YouTube பதிவர்களும் சொல்வது போல, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்பது ஒரு பொது விதி என்பதால், உங்களிடமும் சொல்லி விடுகிறேன்.  முடிந்தால், உங்களுக்கு விருப்பமிருந்தால் இதையெல்லாம் செய்து விடுங்கள்! புதிய காணொளி வெளியிடும்போது அவை குறித்த தகவல் உங்களுக்கும் வந்து சேரும் - பார்த்துவிட வசதியாக! அப்படியே உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே!


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


20 கருத்துகள்:

  1. நான் முதலிலேயே அறிந்திருந்தேன் என்பதையும், ஏற்கெனவே லைக் செய்திருக்கிறேன் என்பதையும் கண்டிருப்பீர்கள்!!!   வாழ்த்துக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைக் - நன்றி ஸ்ரீராம். வாழ்த்தியமைக்கு நன்றி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்று தோன்றுகிறது..இப்ப சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு...லைக் பண்ணியாச்சு!! நல்ல தொடக்கம் வெங்கட்ஜி. பாராட்டுகள், வாழ்த்துகள்!

    ஸ்ரீராம் ஒரு பதிவின் கருத்தில் சொல்லியிருந்தார்....மூன்று பேருமே தனி தனி யுட்யூப்...என்று..

    வாய்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் பின்னணி இசையை பின்னணியிலேயே வைத்துவிட்டு ஹாஹாஹா...வந்தால் என்னைப் போன்றவர்களுக்கு உதவும்!

    எங்கள் வீட்டிலும் என் தங்கைகள் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்னை யுட்யூப் சானல் தொடங்கச் சொல்லி சில வருடங்களாகவே....சமையல், நான் எடுத்த சுற்றுலா வீடியோக்கள் படங்கள், கோலம் டிசைன்ஸ் எல்லாம் பகிரச் சொல்லி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேனல் இருந்தது. சில காணொளிகளும் உண்டு. ஆனால் எந்தவித வாய்ஸும் இல்லாமல். எனது குரலுடன் இது ஒரு புது முயற்சி கீதாஜி.

      பின்னணி இசையை பின்னணியில்... வரும் காணொளிகளில் கவனிக்கிறேன்.

      நீங்களும் விரைவில் யூட்யூப் சேனல் ஆரம்பிக்க வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்கள் சானல் தொடக்கம் அருமை வெங்கட்ஜி. தொடருங்கள். நான் சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன். லைக்கும் செய்துள்ளேன்.

    வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன். வாழ்த்தியமைக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உங்கள் காணொளியை பார்த்து விட்டேன், நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ஆதி முகநூலில் பகிர்ந்து இருந்தார்கள். படித்தேன். அப்போதே பார்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமை..அதிலும் சாதனையாளராகவே திகழ்வீர்கள்...இணைந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய முயற்சி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உங்களது வாய்ஸ் அருமை முதன் முதலாக கேட்கின்றேன்.. இணைத்து கொண்டேன் மிகப் பெரிய யூடியுப்பராக வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ஸ் அருமை - ஹாஹா... கிண்டலா மதுரைத் தமிழன்!

      வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. யூடியூப் வருகைக்கு வாழ்த்துகள் வெங்கட் ஜி. முதல் முயற்சியே சிறப்பாக இருக்கின்றது. சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கும், சப்ஸ்க்ரைப் செய்து கொண்டதற்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. Adsense உண்டு என்றால்...

    TV Mega serial நுட்பம் தெரிந்தால்...
    (அடுத்த நாள் பார்த்தே ஆக வேண்டும்)

    லட்சக் கணக்கில் பார்வையாளர்கள் எண்ணிக்கை இருந்தால்...

    AdWords போன்றவற்றை சிறிது அறிந்து கொண்டால்...

    திகைக்கும் வருமானம் உண்டு ஜி...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Adsense இல்லை தனபாலன். திகைக்கும் வருமானம் - ஹாஹா.. திகைக்க நான் தயாரில்லை தனபாலன். பொழுதுபோக்கும் மட்டுமே! வரும் காலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. புது சேனலுக்கு வாழ்த்துக்கள் சார்.
    அமெரிக்கா பயணங்களுக்கு 'way to go' என்றால், இனி இந்தியப்ப பயணங்களுக்கு உங்கள் சேனல் என்று சொல்லலாம்.
    புத்தகத்தில் வராத சில படங்களும் இங்கு வரும் என்ற ஆவல் இருக்கிறது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது சேனல் - வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த். மேலும் ஒரு தகவலும் உண்டு! வரும் நாட்களில் பதிவு செய்கிறேன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....