திங்கள், 10 மே, 2021

ஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


YOUR SURROUNDINGS ARE NOT MERELY A MATTER OF YOUR INDIVIDUAL CHOICE; THEY ARE THERE, AS A MATTER OF COURSE; AND YOU SHOULD RISE ABOVE THEM AND NOT GET YOURSELF ENTANGLED IN THEM - SRI RAMANA MAHARSHI.


******இந்த வாரத்தின் முதல் நாளில் எனது மின்னூல்களில் ஒன்றான “ஹனிமூன் தேசம்” என்ற மின்னூலுக்கு கிடைத்த இரண்டு விமர்சனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  சஹானா இணைய இதழ் நடத்தி வரும் மாதாந்திர வாசிப்புப் போட்டிகளில், மார்ச் மாதத்திற்கான போட்டியில் பங்கு பெற்ற எனது இந்த மின்னூலுக்கு விமர்சனங்களை, முகநூலில் எழுதிய நண்பர்களுக்கு நன்றி. 


விமர்சனம் - 1 - தேவேந்திரன் ராமையன்:


ஆசிரியர்  வெங்கட்ராமன் நாகராஜன் அவர்களின் பல பயண நூல்கள் நான் வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில் இந்த “ஹனிமூன் தேசம்” என்ற பயண கட்டுரையுடன் நான் சில்லுனு குலு மணாலி வரை பயணப்பட்டு வந்துள்ளேன். 


நண்பர் அவரின் இந்த கட்டுரையின் வழியே நம்மை “குலு மணாலிக்கு” அழைத்துச் செல்கிறார் வாருங்கள் நாமும் சேர்ந்து பயணிப்போம். இந்த நூலினை வாசத்து முடித்த பின்னர் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலூ மற்றும் மணாலி பகுதிகளுக்குச் சென்று வந்த உணர்வு நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!! ஒரு இடத்திற்குப் பயணிக்க என்ன என்ன தேவைகள் மற்றும் அதற்கான செலவு, வழிகள், கிடைக்கும் உணவுகள், தேவையான உடைகள் மற்றும் அழைத்தும் மிகத் தெளிவாக நமக்கு சொல்லிவிடுவார்.


அந்த இடத்தில் எத்தகைய விளையாட்டுகள், பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், எவ்வாறு போகவேண்டும் எந்த எந்த நேரம் உகந்தது, என எல்லாவற்றையும் சிறப்பாக சொல்வதில் நண்பருக்கு நிகர் நண்பர் மட்டுமே!! பியாஸ் நதிக்கரையோரம் கிடைத்த அனுபவங்களும் நாம் அங்குப் பார்க்க வேண்டியதும் அனுபவிக்க வேண்டியதும் என்று அந்த நதியின் அழகினையும், அதில் தன்மையையும். அந்த நதியில் கிடைத்த ராஃப்டிங்க் அனுபவத்தைச் சொல்லும் போது நாம் அந்த நதியினை வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டும் என்ற ஆவல் மனதில் தோன்றாமல் இருக்கவே முடியாது. ஒரு இடத்தில் கிடைத்தும் நகர முடியாமல் காலினை கைது செய்த பைரவரின் அனுபவம் மிக அழகு...


உணவகங்களில் கிடைத்த உணவுகளும் அதற்காகக் காத்திருந்த நேரமும் அந்த நேரங்களை எவ்வாறு எல்லோரும் பயன்படுத்தினார்கள் என்பதும் அங்கே தனது படக்கருவியில் சிறை பிடித்த சிறப்பான சித்திரங்களை நமக்குக் கொடுப்பதில் வஞ்சனைவைக்காமல் வரிசைகட்டி வைத்திருப்பார். பயணத்தின் போது நண்பர்களிடமும் மற்றும் சக பயணிகளிடமும் ஏற்பட்ட சின்ன சின்ன அனுபவங்கள் எனவும் நண்பர் ஒருவர் பாடிய “காலங்களில் அவள் கோடை” என்ற அழகான வரிகளையும் சொல்லாமல் இல்லை. உடன் கடோலா – “ரோப் கார்”பயணமும் அதன் வழியே மலைச்சிகரத்திற்குச் சென்ற பயணமும் மலர் கிடைத்த மற்றும் பார்த்து அனுபவித்த அந்த தருணங்களைத் தவறாமலும் பனிச்சிகரத்தின் மேல் – Solang Valley  வில் கிடைத்த அனுபவமும் அழகாக வவரித்துள்ளார்.


வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்றின் பயண அனுபவம் மற்றும் அங்கே கிடைக்கும் பிரசாதங்களும், வெந்நீர் ஊற்றில் எப்படி பிரசாதங்கள் வேகவைக்கப்படுகிறது என்பதைச் சொல்லும்போது நாம் நேராகவே காண்பதுபோல் ஒரு உணர்வு. அந்த பயணத்தில் தரிசனம் செய்த ஆலயங்கள் மற்றும் இடத்தின் சிறப்புகளும்  தல வரலாறுகளும், ஹடிம்பா, பீம மற்றும் கடோத்கஜன் ஆகியவற்றின் வரலாறுகளையும் மிக அருமையாக விளக்கியுள்ளார். குருத்துவாராவும் கோவிலும் அங்கே கிடைக்கும் தரிசனம் மற்றும் அனுபவங்களையும் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்ப வரும் போது பெற்ற அனுபவங்கள் சில நேரங்களில் உணவுக்காக உணவகத்தில் காத்திருந்த நிகழ்வுகளையும் மிக அழகாக அனுபவ தொகுப்பினை நமக்குத் தந்துள்ளார்.


தனது அனுபவங்களைப் பகிரும் போது அந்த அனுபவங்களைப் படிப்பவர்களை தன் கூடவே அழைத்து செல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே!! என நம்மையும் கூடவே அழைத்துச் செல்லும் விதமே மிக அழகு !!!


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்

15 மார்ச் 2021


******


விமர்சனம் - 2 - M.Mariyam Fayasha:


இந்த நூலின் ஆசிரியர் வெங்கட்ராமன் நாகராஜன் அவர்களின் பல நூல்கள் நான் வாசித்திருக்கிறேன்.அந்த வரிசையில் 'ஹனிமூன் தேசம்' என்ற பயண நூலை வாசித்ததில் நான் குலூ மணாலி வரை பயணம் மேற்கொண்டு வந்த அனுபவம் கிடைத்தது.


இந்த நூலினை வாசித்து முடித்த பின்னர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலூ மணாலி பகுதிகளுக்குச் சென்று வந்த உணர்வு நம் எல்லோருக்கும் கிடைக்கும்  என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பயணம் செய்வதற்குத் தேவையானவை என்ன, எவ்வளவு செலவாகும், முன்பதிவு செய்ய வேண்டியவை என்ன, தங்குமிடங்களுக்கான வாடகை எவ்வளவு, பயணம் செய்யும் போது கிடைக்கும் உணவு வகை என்னென்ன, எங்கே ஷாப்பிங் போகலாம் என பல்வேறு விஷயங்களை  இந்த புத்தகம் வாயிலாக சொல்லி இருக்கிறார்.


அந்த இடத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், எப்படி போக வேண்டும், எந்த நேரம் போகலாம் என எல்லாவற்றையும்  இந்த புத்தகம் வாயிலாக சொல்லி இருக்கிறார். பியாஸ் நதியின் அழகினை  பற்றியும், ரோஹ்தாங்க்  பாஸ் நதிக்கரை ஓரம் குலூ செல்லும் பாதை ஃபோட்டொ செஷன்,தொங்கு பாலம்,ராஃப்டிங்க் நதியின் அழகினைப் பற்றியும் தன்மையைப் பற்றியும், மற்றும்  இது போன்ற பல  கருத்துகளைக் இந்த புத்தகம் வாயிலாக சொல்லி கொண்டே இருக்கிறார் 


இந்த நூலின் ஆசிரியர் தனது அனுபவங்களைப் புத்தகத்தின் மூலமாக  பகிரும் போது, அந்த அனுபவங்களைப் படிப்பவர்களை தன்கூடவே அழைத்து செல்லும் அருமையான  மொழி நடையில்   புத்தகத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பயணக்கட்டுரையின் சிறப்பை நான் கூறுவதைவிட நீங்கள் படித்து ரசியுங்கள்.அப்பொழுதுதான் பயணம் மேற்கொண்ட அனுபவம் கிடைக்கும் ....


M.Mariyam Fayasha


******


நண்பர்களே, இந்தப்  பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு  பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து....


10 கருத்துகள்:

 1. படிப்பவர்கள் யாவரும் ரசித்துப் பாராட்டுவது போல இருப்பது உங்கள் கட்டுரைகளின் சிறப்பு.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டுரைகள் - பாராட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஆழ்ந்து அனுபவித்த விமர்சனங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. உங்கள் அழகான பயண எழுத்திற்கு வரும் விமர்சனங்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ வெங்கட்ஜி!

  வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சிறப்பான விமர்சனங்கள் ஜி எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....