திங்கள், 24 மே, 2021

கல்யாண வைபோகமே - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினையும் இன்று காலை வெளியிட்ட பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BEHIND YOU, ALL YOUR MEMORIES; BEFORE YOU, ALL YOUR DREAMS; AROUND YOU, ALL WHO LOVE YOU; WITHIN YOU - ALL YOU NEED!!!


******
இருபதாம் வருடத்தில் அடியெடுத்து!!


கிட்டு புவனா கல்யாண வைபோகமே!!


20 வயதில் திருமணமாகி டெல்லிக்கு பயணப்பட்ட போது அப்பா, அம்மா, தம்பியே உலகமாக நினைத்தேன். பின்பு கணவரால் ஈர்க்கப்பட்டு அவரே எனக்கு எல்லாமுமாக நினைக்கத் துவங்கினேன்..அவரிடம் இப்போது வரை சிறுபிள்ளையாகத் தான் நடந்து கொள்வேன். அவர் பேச்சை மீறியதும் இல்லை.  


பொறுப்பு உள்ளவளாக இருந்தாலும் ஏனோ எதுவும் அறியாத அப்பாவி புவனாவாகவும், ஆதியாகவும் தான் இருந்தேன். அப்போதெல்லாம் பயமும், மிரட்சியும் தான் என்னிடம் இருந்தது. 


ஆனால் 19 வருட இல்லறம் அனைத்தையும் மாற்றிவிட்டது. அதுவும் இந்த 9 வருட அஞ்ஞாத வாசம் நிறைய நிறைய அனுபவங்களையும், புரிதல்களையும், தனித்து செயல்படுவதற்கான தைரியத்தையும், பக்குவப்படுவதற்கும் கற்றுத் தந்திருக்கிறது. 


எப்போதுமே பணம் என்னைக் கவர்ந்ததில்லை. எனக்கான தேவைகளும் பெரிதாக ஒன்றுமே இல்லை.. எப்படியிருந்தாலும் என்னால் இயங்க முடியும். 


அன்றைக்கு கைவசம் இருப்பதை வைத்து குடித்தனம் செய்திடும் பக்குவம் எப்போதுமே உண்டு. இதையெல்லாம் கற்றுக் கொடுத்த என்னவருக்கு தான் நான் நன்றி சொல்லிட வேண்டும். என்னை பக்குவப்பட வைத்திருக்கிறார். 


சுயசார்பு ஆதியாக செயல்பட வைத்திருக்கிறார். நம்மை தாங்குவதற்கோ, ஆதரவு காட்டவும் யாரும் இல்லையே என்பதை விட 'நமக்கு நாமே' போதும் என்பதான எண்ணங்கள் தான் இப்போது மேலோங்கி உள்ளது. 


அன்பு, பாசம், அரவணைப்பு, புரிதல், விட்டுக் கொடுத்தல், சின்ன சின்ன அர்த்தமில்லாத ஊடல் என்று எல்லாம் கலந்ததே இல்லறம். 


இந்த சிறப்பான நாளில் பெரியோர்களின் ஆசிகளும், நட்புகளின் வாழ்த்துகளும் கிடைத்தால் மகிழ்வோம்.


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. பல்லாண்டு வாழ்க...
  அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 3. குழந்தைகளாக இருக்கும் நாம் வாழ்க்கை தரும் பாடங்களால் அனுபவம் பெற்று பெரியவர்களாகிறோம்.  நம் குழந்தைகளுக்கு பெரியவர்களாகிக் கற்றுக் கொடுக்கிறோம்.  அனுவங்களே ஆசான்.

  இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவங்களே ஆசான் - உண்மை தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதிவு மிக அருமை.

  //அன்பு, பாசம், அரவணைப்பு, புரிதல், விட்டுக் கொடுத்தல், சின்ன சின்ன அர்த்தமில்லாத ஊடல் என்று எல்லாம் கலந்ததே இல்லறம். //

  ஆமாம்.

  பல்லாண்டு வாழ்க! ஆசிகள் என்றும் உண்டு ஆதி.
  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆதி , வெங்கட் வாழ்க வளமுடன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. ஆரம்ப வாசகம் மிகவும் அழகு, அருமை!
  இந்த வாசகம்கூட பத்தொன்பது ஆண்டு தாம்பத்தியத்திற்கு கட்டியம் கூறுகிறது என்று தோன்றுகிறது ஆதி!
  திருமண வாழ்க்கையின் இருபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் இருவரும் என்றென்றும் இதே அந்நியோன்யத்துடனும் புரிதலுடனும் மனம் நிறைந்த அன்புடனும் அனைத்து வளங்களுடனும் வாழ்வாங்கு வாழ மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. திருமணத்திற்குப் பிறகுதான் பெண்கள் எல்லோருமே வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். கணவரின் அநுசரணை நம்மை நடத்திச் செல்லகிறது. மிகப்பெரிய கொடுப்பினை இது.

  புரிதலுடன் இனிய இல்லறம் தொடர்ந்து நடக்க ஆசிகள் உங்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ரஞ்சனிம்மா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அகிலா வைகுந்தம் ஜி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Bandhu ji.

   நீக்கு
 10. திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. மனங்கனிந்த மண நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....