அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நண்பர்களின் பார்வையில் பகுதி ஒன்று பதிவையும் இன்று காலை வெளியிட்ட நண்பர்களின் பார்வையில் பகுதி இரண்டு பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
MAKING EVERYBODY HAPPY IS NOT IN OUR HANDS BUT BEING HAPPY WITH EVERYONE IS DEFINITELY IN OUR HANDS.
*****
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், HR-ல் இருப்பவர்கள் குறித்து எப்போதுமே ஒரு விதமான எதிர்ப்பு உணர்வு இருக்கும். அவர்கள் செய்வதெல்லாம் தமக்கு எதிராக இருப்பதாக ஒரு உணர்வு மனதில் இருந்து கொண்டே இருக்கும். அங்கே இருப்பவர்களும் பல சமயங்களில் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதையும் சொல்ல வேண்டும் - அங்கே இருப்பவர்களுக்கு தங்களுக்கு இரண்டு கொம்புகள் இருப்பது போல ஒரு உணர்வு உண்டு! நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருமே தங்களுக்குக் கீழே பணிபுரியும் அடிமைகள் போல நடத்தும் சிலரை அறிவேன். நான் சில மாதங்கள் அரசுத் துறையின் HR எனச் சொல்லக் கூடிய Establishment Section-ல் பணி புரிந்திருக்கிறேன். முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்திருக்கிறேன். இன்றைக்கும் அது குறித்து நண்பர்கள் ஸ்லாகிப்பதுண்டு! சரி சுய புராணம் போதும்! இன்று நாம் பார்க்கப் போகும் குறும்படம் கூட இப்படியான HR குறித்த குறும்படம் தான். பாருங்களேன்!
மேலே இணைத்திருக்கும் காணொளி பார்ப்பதில் பிரச்சனை இருந்தால் கீழேயுள்ள சுட்டி வழி நேரடியாக யூட்யூபில் பார்க்கலாம்!
https://www.youtube.com/watch?v=jo2CPHIdLvE
*****
நண்பர்களே, இன்றைய பதிவு/குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம். அது வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
குறும்படம் மிக அருமை.சக பணியாளர்களை அரவணைத்து செல்லும் மேல் அதிகாரி .
பதிலளிநீக்குநடித்தவர்கள் எல்லாம் மிக அருமையாக இயல்பாக நடித்தார்கள். முதியவர் மனதை கவர்ந்தார்.
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ரசித்தேன்.
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குர்சித்தேன் வெங்கட்ஜி! அருமையான படம். இப்படி இருந்துவிட்டால் தொழிலாளர் பிரச்சனையே இல்லாமல் எத்தனை சுகமாக இருக்கும்! மனித நேயம்! வின் வின் சிச்சுவேஷன்!!
பதிலளிநீக்குகீதா
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காணொளி அருமை ஜி...
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குறும்படம் அருமை ஐயா
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.