திங்கள், 31 மே, 2021

கதம்பம் - மாம்பழக் கேசரி - ரோஷ்ணி கார்னர் - காணொளி - பெரியம்மா - பாத்திரம் தேய்க்க மெஷின் - புளிப்பொங்கல்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்கள் பார்வையில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது - கார்ல் மார்க்ஸ்


******
ஆதியின் அடுக்களையிலிருந்து - மாம்பழக் கேசரி - 24 மே 2021: 

எங்களது திருமண நாளில் வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் எல்லோரின் வாழ்த்துகளால் இ(அ)ன்றைய நாள் சிறப்பானது. நேரமின்மையால் எல்லோருக்கும் தனித்தனியே பதில்கள் எழுத முடியவில்லை. 


காலையில் ஆரம்பிக்கின்ற வேலைகள் மதியம் உணவுக்குப் பின் ஒருமணி நேர இடைவேளை. பின்பு மாலையில் துவங்கும் வேலைகள் இரவு தான் முடிவடைகிறது. இரவு கண் மூடிப் படுத்தால், விழிப்பது காலையில் தான் 🙂


வழக்கமான சமையலுடன் இனிப்புக்காக இன்று மாம்பழக் கேசரி செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்தேன். பெரியம்மாவிடம் இருவரும் நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றோம். வேறொன்றும் விசேஷமில்லை 🙂


அலைபேசி வழியே இருவரிடமும் வாழ்த்து தெரிவித்த 'ரிஷபன்' சார், ஏதாவது ஜில் ஜில்! குல் குல்னு ஸ்பெஷலா பண்ணுவீங்களே!! பண்ணினா ஃபோட்டோ எடுத்து அனுப்புங்க! என்றார் 🙂 அவருக்கு மட்டும் மதியமே சுடச்சுட அனுப்பிட்டேன் 🙂 ஃபோட்டோ வழியா தான் 🙂


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் மற்றும் காணொளி - 25 மே 2021: 


மகளின் சில முயற்சிகள் - ஓவியங்கள் - அதற்கான சுட்டிகள்…


மே மாத சஹானா இதழில் மகள் வரைந்த ஓவியம் வெளியாகியுள்ளது.


அம்மா பிள்ளை வாத்துகள் - 👩‍🎨பள்ளி மாணவி ரோஷினி வெங்கட் - மே 2021 போட்டிக்கான பதிவு - www.sahanamag.com


சுட்டி உலகம்!


மகள் வரைந்த ஓவியம் சுட்டி உலகம் பக்கத்திலும் வெளியாகியுள்ளது.


ஓவியம் - சுட்டி உலகம்


Roshni's creative corner - காணொளி குறித்த தகவல்:


மகளின் சேனலில் ஃப்ரிட்ஜின் மேல் ஒட்டும் மேக்னெட்டை செய்து காண்பித்துள்ளாள்.

DIY Fridge magnets | Easy to make | Roshni's Creative Corner |


எல்லாவற்றையும் பார்த்து விட்டு கருத்துக்களை தெரிவியுங்களேன்.


******


பத்து தேய்க்கிற மிஷின் - அம்பா பெரியம்மா At her best - 27 மே 2021:

மாமியார் - கிட்டு மத்யானத்துல செத்த படுத்துக்க மாட்டானா அம்பா??

பெரிய மாமியார் - அவனா!! அவன் பத்தெல்லாம்(பாத்திரம்) தேச்சுட்டு தாண்டி படுப்பான்!!

என்னது?????...:))

அதே போல் ஏதோ ஒரு உரையாடலில் 'டேய் கிட்டு! பத்து தேய்க்கிற மிஷின் வாங்கிடுடா!' என்று சொல்லவும் தான் இந்த ட்யூப்லைட்டுக்கு புரிந்தது..🙂

ஓஹோ! இது தானா கதை..🙂

ஹா..ஹா..ஹா..!!

எனக்கு ஒத்தாசையாக அவ்வப்போது என்னவர் பாத்திரம் தேய்த்து குடுக்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா...:))

******

ஆதியின் அடுக்களையிலிருந்து - புளிப்பொங்கல் - காணொளி - 29 மே 2021: 


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் பாட்டிம்மா பலகாரம்.. 

புளிப்பொங்கல்


*****


Roshni’s Creative Corner - காணொளி - 29 மே 2021:


மகளின் சேனலில் இந்த வாரம்…


Bullet Journal - Planner for June


*****


தம்பதியர் தினம் -  அம்பா பெரியம்மா At her best - 29 மே 2021:


பெரியம்மா: அவ முடிவு பண்ணிட்டாடா!  இனி நீ எதுவும் சொல்ல முடியாது!!! உங்க ரெண்டு பேருக்குள்ள understanding-ஏ இல்லையே!


என்னவர்: யாரு எங்களுக்கா!! அதனால தான் இவ்வளவு வருஷமா  இப்படியிருக்கோம்...:))


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

 1. புளிப்பொங்கல் கண்ணைக் கவர்கிறது.  அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. உரையாடல்கள் அருமை... புளிப்பொங்கல் (நாங்க அரிசி உப்புமா மாதிரி புளி உப்புமான்னு சொல்வோம்)...

  கதம்பம் நன்று. மாம்பழம் நிறைய இருக்கிறது. கேசரி செய்து தீர்க்க முடியுமான்னு தெரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புளி உப்புமா - வேறு! அரிசி மாவில் செய்வார்கள். அதன் செய்முறை வேறு நெல்லைத் தமிழன்.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. படங்கள் ஸூப்பர்....

  கதம்பம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும், கதம்பமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கார்ல் மார்க்ஸ் சொன்னது நன்றாக இருக்கிறது.
  கதம்பம் நன்றாக இருக்கிறது, அனைத்தும் முகநூலில் படித்தேன். உரையாடல் ரசித்தேன்.
  படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும், கதம்பம் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அம்பா பெரியம்மா இப்ப என் ஃபேவரைட் ஆகிட்டாங்க!!! எங்க வீட்டுலயும் இப்படி என் வயதான பாட்டி பேசிட நாங்க ரொம்ப கலாய்ப்போம்...
  ரொம்ப ரசித்தேன்..உரையாடல்களை...ஸோ கிட்டு இப்ப டிஷ் வாஷர்!!! ஹா ஹா ஹா....

  மாம்பழக் கேசரியும் புளிப்பொங்கலும் ஸ்பாஆஆ. புளிப்பொங்கல் பார்த்து லைக் பண்ணி கமென்டிட்டேன்.

  ரோஷினி கலக்குகிறார்!!! சஹானால பார்த்துவிட்டேன். சுட்டி உலகம்ல நான் பார்த்த போது இருக்கலைனு நினைக்கிறேன் இல்லை சரியாகப் பார்க்கலை போல...அந்தச் சுட்டி பார்த்ததும் நம்ம ரோஷினிகிட்ட சொல்லணும் வரைஞ்சு அனுப்ப ஆனால் இப்ப ரோஷிணி வளர்ந்த பெண் ஆச்சே அதனால அங்கு வருமான்னும் யோசித்தேன். பார்க்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பா பெரியம்மா உங்கள் ஃபேவரைட்! ஹாஹா... அவரை பலருக்கும் பிடிக்கும் - சிலருக்குப் பிடிக்காது கீதா ஜி.

   கதம்பம் பதிவின் மற்ற பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. சுட்டி உலகம் தளத்தில் ரோஷிணியின் ஒவியம் அருமை

  அங்கு கவின் என்று வருவது நம் கோமதி அக்காவின் பேரன் என்று நினைக்கிறேன். கோமதிக்கா சொல்லுங்க..

  ரோஷிணி சானல் பார்க்கிறேன்.

  அனைத்தும் ரசித்தேன்...கதம்பம் புளிபொங்கல் மணத்துடன் கம கம

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுட்டி உலகம் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   அதில் வரும் கவின் கோமதி அக்காவின் பேரன் இல்லை. ஞா. கலையரசி அவர்களின் பேரன் (6 வயது என்று ஓவியத்திலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்).

   புளிப்பொங்கல் கமகம! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. கதம்பம் கலையும், சுவையுமாய் அருமை.

  உரையாடல்கள் ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. ரோஷிணியின் ஒவியம் சூப்பர்.
  புளிப்பொங்கல் இது வரை செய்ததில்லை . ட்ரை பண்ணனும் மாம்பழக் கேசரி நானும் பண்ணியிருக்கிறேன் . சுட்டி உலகம் யு டியூப்பில் உள்ளதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளின் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

   புளிப்பொங்கல் - செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்.

   சுட்டி உலகம் - இணைய இதழ் தான். சுட்டி கொடுத்திருக்கிறேன் - அதைக் க்ளிக் செய்தால் இணையதளம் திறக்கும். காணொளி அல்ல.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. கதம்பம் பதிவினை ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. கதம்பமும் ரோஷிணியின் ஓவியமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளின் ஓவியத்தினை ரசித்தமைக்கு நன்றி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. கதம்ப மணத்தை இரசித்தோம்.புளிப் பொங்கல் என் பேவரிட்...ரோஷிணி நிச்சயம் சிறந்த ஓவியராக பரிமளிப்பார்.அண்டர்ஸ்டேண்டிங் அண்டர்ஸ்டேங்க் .ஆனதால் மிகவும் இரசித்தேன்..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. கதம்பம் கண்ணையும் கருத்தையும் நிறைக்கிறது. ரோஷ்ணி, ஆதி இருவரின் பல்வேறு திறமைகளும் அழகாக வெளிப்படுகின்றன. அம்பா பெரியம்மாவும் கலக்குறாங்க. அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....