திங்கள், 17 மே, 2021

அபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WE NEED STRENGTH WHILE DOING THE POSSIBLE.  BUT WE NEED FAITH WHILE DOING THE IMPOSSIBLE. 


******அன்பின் நண்பர்களுக்கு, மீண்டும் ஒரு மின்னூல் வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று பார்க்கப் போகும் மின்னூல்….


#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி- ஜனவரி 2021

#பென்_டு_பப்ளிஷ்4

வாசிப்பனுபவம்:  6/2021

நூல்: அபினி ஆரண்யம்

வகை:  க்ரைம் நாவல்

ஆசிரியர்: புவனா சந்திரசேகரன்

வெளியீடு:  அமேசான் கிண்டில்

விலை:  ரூபாய் 50/- மட்டும்

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: அபினி ஆரண்யம்


பிரதான கதாபாத்திரங்கள்: இலக்கியன், இமயவரம்பன், அமரன், மதுநிஷா, காவ்யா, ஓவியா, திருப்பதி, அனழேந்தி, கனலேந்தி, ராஜராஜன்


இலக்கியன் மற்றும் இமயவரம்பன் NCB என அழைக்கப்படும் போதை மருந்து தடுப்பு இயக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகள்.  அமரன் காவல்துறை அதிகாரி.  அனழேந்தி, கனலேந்தி - சகோதரர்கள் - ஜவுளிக்கடை, நகைக்கடை வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் - வெளிப்பார்வைக்கு இந்தக் கடைகள் இருந்தாலும் பலருக்கும் தெரியாத அவர்களது பிரதான, பணம் கொழிக்கும் தொழில் போதை மருந்து விற்பனை.  அனழேந்தியின் ஒரே மகன் கல்லூரியில் படிக்கும் ராஜராஜன்.  பண முதலைகளிடம் வேலை பார்க்கும் திருப்பதி - முதலாளிகளின் நம்பிக்கையைப் பெற்ற உழைப்பாளி - குறிப்பாக போதைப் பொருட்கள் விற்பனையில். அவரது இரண்டு மகள்கள் - ஓவியா மற்றும் காவ்யா.  மனைவியை இழந்த திருப்பதி தான் இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார்.  


கல்லூரியில் படிக்கும் ஓவியா - கல்லூரிக்குச் செல்லும் முன்னர் வீட்டு வேலைகளையும் சமையலையும் முடித்து, ஆட்டிசம் பிரச்சனைகளில் ஒன்று இருக்கும் காவ்யாவினை அவளுக்கான சிறப்புப் பள்ளியில் விடுவதற்கு தயார் செய்து செல்வது வழக்கம்.  சிறப்புக் குழந்தையான காவ்யா பார்க்கும் விஷயங்களை உடனே வரைந்து விடும் திறமையும், பார்த்த எண்களையும் கணக்குகளையும் ஒரே ஒரு பார்வையில் திரும்பி எழுதிவிடும் திறமையும் கொண்ட பெண்ணாக இருக்கிறார் - இவர் இந்தக் கதையில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் என்பதை வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர்.  சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் மதுநிஷா.  அவரது அப்பாவும் திருப்பதியும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் - குஜ்ராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  மதுநிஷாவின் அப்பா இறந்த சில மாதங்களிலேயே அம்மாவும் இறந்து விட, தனியாக இருந்து தன்னை கவனித்துக் கொள்பவர்.  


போதை ராஜ்ஜியத்தினை முறியடிப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் இலக்குவனும் இமயவரம்பனும்.  அனழேந்தி - கனலேந்தி போதை சாம்ராஜ்யத்தினை ஆட்டுவிக்கும் செயல்களைச் செய்ய, இவர்கள் புதிய புதிய யுக்திகளை - போதைப் பொருட்களின் வடிவங்களை மாற்றியும், இடத்தை மாற்றியும் விற்பனை செய்து வருகிறார்கள்.  போதை பொருட்கள் வைக்கும் இடத்திலிருந்து விற்பனைக்குச் செல்லும் முன்னர், அப்பாவுக்கு தெரியாமல் சிறிது எடுத்துச் செல்கிறார் அனழேந்தியின் மகன் ராஜராஜன்.  அவனும் மூன்று நண்பர்களும் அதைப் பயன்படுத்த போதையின் உச்சத்தில் - வாகனத்தில் செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் தனியாகக் காத்திருக்கிறார் ஒரு பெண் - அவரை இந்த நான்கு இளைஞர்களும் நயவஞ்சமாக காரில் ஏற்றிக் கொள்கிறார்கள் - அப்பெண்ணை நான்கு இளைஞர்களுமாக சேர்ந்து, கதறக் கதற அலங்கோலம் செய்து விடுகிறார்கள்.  அப்பெண் இறந்து விட, அவளது உடலை சாலையோரத்தில் வீசிச் செல்கிறார்கள்.  போதையின் வீரியம் அதிகம் என்பதால் காரை ஓட்டும்போதே விபத்துக்குள்ளாகிறார்கள்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 


பணத்தைக் கொண்டு இந்த விஷயத்தினை மூடி மறைக்கிறார்கள் பண முதலைகள் - ஆனால் அப்படி கொலை செய்யப்பட்ட பெண் - திருப்பதியின் மகள் ஓவியா!  தான் செய்யும் வேலை தனது மகளையே பலி வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார்.  பழி வாங்க திட்டமிடுகிறார்.  அவர் திட்டமிட்டமிட்டபடி பழி வாங்க முடிந்ததா?  அவர் அந்த நான்கு பேருக்கும் கொடுத்த தண்டனை என்ன, இலக்கியனும், இமயவரம்பனும், அமரனும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்கள்.  சிறிய நூல் தான்!  விறுவிறுப்பாக இருப்பதால் கீழே வைக்காமல் படித்து விட முடியும்.  


நூலில் சிறப்புக் குழந்தைகள் பற்றிய தகவல்கள், அவர்களின் திறமைகள், போதைப் பொருட்கள் பற்றிய தகவல்கள் என பல விஷயங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு.  நூலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.  மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகள்.  பென் டு பப்ளிஷ்4 போட்டியிலும் இந்த நூல் பங்கு பெறுகிறது.  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். 


மீண்டும் வேறொரு மின்னூல் வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…


24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இன்றைய பெரும் போதை பிரச்சனையை பற்றி பேசும் நூல்.
  வாசிக்கத் தூண்டுகிறது.
  விரைவில் வாசிக்கிறேன் ஐய்யா.
  நல்லதொரு விமர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதை பிரச்சனை - பெரும் பிரச்சனை தான் அரவிந்த். ஒரு சிலரின் பண ஆசையால் பல இளம் சமுதாயத்தினரின் அழிவு நடந்து கொண்டிருக்கிறது. முடிந்த போது வாசியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 5. எனக்குக் க்ரைம் கதைகள் மிகவும் பிடிக்கும். உங்கள் விமர்சனம் அருமை வெங்கட்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ரைம் கதைகள் எனக்கும் பிடித்தவை தான் கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சுருக்கமாக எனினும் சுவாரஸ்யமான விமர்சனம்...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஆவலை தூண்டுகிறீர்கள் நண்பரே. நல்லதொரு விமர்சனம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ஆவலை தூண்டும் விமர்சனம் நண்பரே. அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. எந்த போதையும் பேராபத்து. நூல் விமர்சனமும் எழுத்தாளர் அறிமுகமும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனம்/பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. நன்றாகப் படித்து அதை விமரிசனம் செய்ய நல்ல திறமை வேண்டும்.
  அன்பு வெங்கட் நன்றி மா.
  போதை இல்லாத வாழ்வு என்று கிட்டுமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும்/நூல் குறித்த வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   போதை இல்லாத வாழ்வு - அமைந்தால் நல்லதே. அமையும் நாள் வரட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....