வெள்ளி, 14 மே, 2021

குறும்படம் - பாதுகாப்பான பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கமலா பெரியம்மா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை - சுவாமி விவேகானந்தர். 


******இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது தலைக்கவசம் எத்தனை அவசியம் என்பதைச் சொல்லும் ஒரு குறும்படம் இது.  மனதைத் தொட்ட குறும்படம்.  நமக்காக வீட்டில் குடும்பத்தினர் காத்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலைக்கவசம் நிச்சயம் அணிந்து கொள்வோம்.   குறும்படம் பாருங்களேன்.நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குறும்படம் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. மனதைத் தொடும் குறும்படம் தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. மனதைத் தொடும் குறும்படம் தான் நாகேந்திர பாரதி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மனதை என்னவோ செய்துவிட்டது வெங்கட்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதைத் தொடும் குறும்படம் தான் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. படம் மனதை மிகவும் வருந்த வைத்துவிட்டது. தலைக்கவசம் எத்தனை முக்கியம். நான் தலைக்கவசம் அணியாது வண்டி ஓட்டியதில்லை அப்படி அணிந்து ஓட்டிய போது இரவு நடந்த விபத்து, தலைக்கவசத்தால் நான் தப்பியதும் இப்போது நினைத்தாலும் சில்லிடும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைக்கவசம் முக்கியம் என்பதை நீங்களும் அனுபவத்திலேயே உணர்ந்து இருக்கிறீர்கள். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கட்டும் துளசிதரன் ஜி. தலைக்கவசம் அவசியமே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நெஞ்சை உருக்கும் இந்த குறும்படம் பார்க்கும்போது கண்கள் பனித்தன.
  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்கள் மனதையும் தொடும் விதத்தில் இருந்தது என்பது அறிந்தேன் - நன்றி கோயில்பிள்ளை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அற்புதமான காணொளி...குறிப்பாக அந்த இறுதிய் காட்சியும் கீழ் பதிந்த வாசகங்களும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மிக மிக அவசியான தலைக் கவசத்துக்கு இப்படி ஒரு
  விளம்பரக் குறும்படம்
  தேவை. சிறுமியின் நடிப்பு மனதைத் தொடுகிறது.
  வாகன ஓட்டிகள் உணர்ந்தால் நன்மை.
  நன்றி அன்பு வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுமியின் நடிப்பு - நல்ல நடிப்பு. தந்தையை இழந்த சோகத்தினை வெளிப்படுத்தும் விதமாக.

   குறும்படம் உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி வல்லிம்மா. ஒரு வாகன ஓட்டியாவது இந்தப் படம் பார்த்து திருந்தினால் நல்லதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. மனம் கனத்துப் போனது - உண்மை தான். குறும்படம் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. என்னுடைய இந்த மாலை நேரத்தை கனமாக்கி விட்டீர்கள் வெங்கட்! மனம் மிகவும் பாதிக்கப்பட்டு, கண்ணீரும் வெளி வந்து விட்டது. இந்த விளம்பரத்தை எல்லா சினிமா தியேட்டர்களிலும் படம் ஆரம்பிக்குமுன்பும் இடைவேளையின் போதும் திரையிட வேண்டும். நிறைய பேர் மனம் மாறுவார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை நேரம் கனமாகிப் போனதா... அடடா... விளம்பரம்/குறும்படம் ஒருவரையாவது மாற்றினால், தலைக்கவசத்தின் அத்தியாவசியத்தினை உணர்ந்து கொள்ள வைத்தால் நல்லது தான். படங்களுக்கு இடையே திரையிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் சிறப்பு மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. குறுபடம் பார்த்து மனம் கனத்து போனது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது கண்களில் கண்ணீர் வந்து விட்டது. விபத்தில் சிறு வயதில் தன் இரண்டு சின்ன குழந்தை சிறு வயது மனைவியை விட்டு விட்டு மரணமடைந்த என் அண்ணனின் நினைவு வந்து கண்ணீரை அடக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விபத்தில் உயிரிழந்த அண்ணனின் நினைவு - வேதனை தான். தலைகவசம் உயிர்க்கவசம் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டால் நல்லது கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. நீங்கள் பகிரும் குறுபடம் அனைத்தும் அருமை வெங்கட் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. இதுவும் கண்ணீரை வர வைச்ச குறும்படம். அந்தக் குழந்தையின் முகபாவம்! அருமை! மனது கனத்துப் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைக்கவசத்தின் அவசியம் சொல்லும் குறும்படம். மக்கள் உணர்ந்தால் நல்லதே கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....