அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பித்தளை - சில தகவல்கள் பதிவினையும், கல்யாண வைபோகமே பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
WE ARE NOT STUCK AT HOME, WE ARE SAFE AT HOME. WHEN WE CHANGE OUR THINKING, EVERYTHING CHANGES. THE WORLD IS CLOSED FOR RENOVATION, GRAND REOPENING SOON!
******
ஆதியின் அடுக்களையிலிருந்து - அரிசி உப்புமா - 16 மே 2021:
இன்றைய டின்னர்! வாங்க சாப்பிடலாம்.
******
Venkat's Travelogue! - காணொளி - 17 மே 2021:
பயணக் காதலனான நம்ம 'தல'யிடம் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டே இருந்த விஷயம் இன்று நனவாகியுள்ளது 🙂 இரண்டு வருடங்களாகவே பயணம் செய்த அனுபவங்களை குரல் கொடுத்து காணொளியாக பகிர சொல்லிக் கொண்டிருந்தேன். அதை சரியாகக் கூட காதில் வாங்கியதில்லை 🙂
ஆஃபீஸ்ல வேலை இருக்கு! நேரமே இல்லை! நீ நினைக்கிற மாதிரி சுலபமான வேலையில்ல! என்று ஏதேனும் ஒரு சாக்கு போக்கு 🙂 ஏழெட்டு வருடங்களாக ப்ளாகுக்காக காணொளிகளை சேமித்து வைத்திருந்த ஐடியில் இன்று பெயரை மாற்றி குரல் கொடுத்து வெளியிட்டிருக்கிறார். வீடியோ எடிட்டிங் செய்து தந்தது மகள்.
பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் நம்ம 'தல' மகிழ்வார் 🙂 காணொளிக்கான சுட்டி கீழே!
Outing of birds in the Ganges | First time with my voice | Venkat's Travelogue
******
மருத்துவர் சரஸ்சந்திர பாஸ், Senior Medical Oncologist - 19 மே 2021:
என்னுடைய பதினைந்து வயதிலிருந்து இவரை பார்த்திருக்கிறேன். அம்மாவுக்கு ஏழு வருடங்கள் இவரிடம் தான் சிகிச்சை பெற்று வந்தோம். அம்மாவுக்கு Breast cancer என்று தெரிந்தது முதல் சர்ஜரி, தொடர்ந்து 6 மாதங்களுக்கு 21 நாட்களுக்கு ஒருமுறை கீமோதெரபி, ஐந்து வருடங்கள் மாத்திரைகள் மூலம் சிகிச்சை, வருடாவருடம் செக்கப், 5 வருடங்களுக்குப் பின் உடல் முழுவதும் கேன்சர் செல்கள் பரவியதால் மீண்டும் கீமோதெரபி, தலையிலிருந்து முதுகுத்தண்டு வரை ரேடியோ தெரபி என்று அம்மாவின் இறுதி மூச்சு இருக்கும் வரை சிகிச்சை தந்திருக்கிறார். கனிவான மருத்துவர்!
அப்பாவோ, நானோ, என் திருமணத்திற்குப் பிறகு என் தோழியோ இவரிடம் அம்மாவை அழைத்துச் சென்று எத்தனையோ நாட்கள் காத்திருந்திருக்கிறோம். அம்மாவுக்கு இருந்ததால் எனக்கும் 100 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லி அம்மாவின் மறைவுக்குப் பின் என்னையும் சோதனை செய்தார். வருடாவருடம் இரத்த பரிசோதனையும், எக்ஸ்ரேவும் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார். 35 வயதுக்குப் பிறகு மேமோகிராம் டெஸ்ட்டும் எடுக்கச் சொன்னார்.
என் அம்மாவைப் போல் எத்தனையோ உயிர்களை தன்னுடைய சிகிச்சை மூலம் காப்பாற்றிய கடவுள். இவரின் மறைவு செய்தி மனம் கலங்க வைக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
******
ஒரு காலை நேர உரையாடல் - 22 மே 2021:
என்னவர்: எனக்கு இவ இல்லைன்னா என்ன!! அவ காத்துண்டு இருக்கா???
பெரியம்மா: என்னடா! இப்படிச் சொல்ற! புவனா கோபப்பட போறாடா!!
நான்: இதில கோபப்பட என்ன இருக்கு!! யார் கூட வேணாலும் போகட்டும்! அவளே பார்த்துக்கட்டுமே..🙂
பெரியம்மா: என்னடி! இப்படிச் சொல்ற!
நான்: அப்படியெல்லாம் போக மாட்டார்னு நம்பிக்கை தான் பெரிம்மா...🙂 இவருக்கு என்ன மாதிரி லூஸா யார் கிடைப்பான்னு சொல்லுங்கோ...:))
ஹா..ஹா..ஹா..!
*****
கோடை விடுமுறை நினைவுகள் - 22 மே 2021:
இந்த மாத சஹானா இணைய இதழில் என்னுடைய சிறுவயது கோடை விடுமுறை நாட்களைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளேன்.. வாசித்துப் பாருங்களேன்.
ஆதியின் அடுக்களையிலிருந்து - ஆலு சப்ஜி - 22 மே 2021:
டெல்லியில் இருந்தவரை நான் நிறைய சப்ஜி வெரைட்டிகளை செய்யக் கற்றுக் கொண்டேன். என்னவர் அலுவலகத்துக்கு ரொட்டி, சப்ஜி தான் எடுத்துச் செல்வார் என்பதால் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு ஏதேனும் ஒரு வகை சப்ஜியை செய்து கொடுத்து விடுவேன். அதில் ஒருவகை சப்ஜியைத் தான் Adhi's kitchen சேனலில் இந்த வாரம் செய்து காண்பித்துள்ளேன்.
*****
நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...
நட்புடன்
ஆதி வெங்கட்
'அவ காத்துண்டிருக்கா' என்று வெங்கட் சொன்னது அலுவலகத்தைத்தானே!!! மற்ற பகுதிகளை பேஸ்புக்கிலும் படித்தேன்!
பதிலளிநீக்குஅலுவலகத்தைத் தானே! - ஹாஹா...
நீக்குகதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மருத்துவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமருத்துவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குமற்ற பகுதிகள் அருமை...
தல காணொளியும் அருமை...
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மருத்துவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! நல்ல மருத்துவர் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஆதி! பெரியம்மா ஈருப்பது டைம் போவதே தெரியலைன்னு சொல்லுங்க...பெரியம்மா செம கன்ஃப்யூஸ் ஆகிட்டாங்க போல உங்க உரையாடலை கேட்டு ஹா ஹா ஹா.. ரசித்தேன்....
//இவருக்கு என்ன மாதிரி லூஸா யார் கிடைப்பான்னு சொல்லுங்கோ...:))// இந்த டயலாக் வீட்டுக்கு வீடு வாசப்படியோ?!!! ஹா ஹா ஹா
"தல" வீடியோ பார்த்து கமென்ட் போட்டாச்சு. சப்ஸ்க்ரைபும் பண்ணியாச்சு...உங்க அரிசி உப்புமா பார்த்த நினைவு.
இன்னும் பெண்டிங்க் வீடியோஸ் இருக்கு பார்க்கிறேன். ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வெங்கட்ஜி சாப்பிட வாங்க பகுதியில போட்டிருக்கறதை வெங்கட்ஜியையே செய்யச் சொல்லி ரோஷினிய போடச் சொல்லுங்க ஆதி! நான் அந்தப் பகுதில வெங்கட்ஜி ரெசிப்பிஸ் செஞ்சுருக்கேன் சுக் - ஹிமாச்சல் மிளகாய் சட்னி செஞ்சு வீட்டுக்கு வந்த பஞ்சாபி ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லிக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.
கீதா
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குவெங்கட் ஜியையே சமைக்கச் சொல்லி! ஹாஹா... செய்து விடலாம்!
சுக் நீங்களும் செய்து பார்த்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சஹானாவில் உங்கள் சம்மர் நினைவுகள் வாசித்துவிட்டேன்.
பதிலளிநீக்குஆலு சப்ஜி பார்க்கிறேன். சஹானாவில் தவலை அடை யும் பார்த்தேன் எனக்கு ஒரே சந்தோஷம் அப்படியே என் பாட்டி ஒருவர் செய்வது அவரிடம் நான் கற்றுக் கொண்டது...நல்லா வந்திருந்துச்சு. வீடியோ போட்டிருக்கீங்களோ?
அனைத்தும் ரசித்தேன்...ஆதி. யுட்யூப்ல கலக்கறீங்க...
கீதா
சஹானாவில் சம்மர் நினைவுகள் - வாசித்ததில் மகிழ்ச்சி.
நீக்குயூட்யூப் - மகிழ்ச்சி கீதாஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மருத்துவரின் மறைவிற்கு இரங்கல்கள்
பதிலளிநீக்குவெங்கட்ஜி யின் யுட்யூப் பார்த்தேன் ரசித்தேன். சப்ஸ்க்ரைபும் செய்திருக்கிறேன்.
காலை நேர உரையாடல் பார்த்ததும் வெங்கட்ஜியா அட இப்படியும் பேசுவாரா என்று நினைத்துச் சிரித்தேன்
கதம்பம் மணக்கிறது
துளசிதரன்
யூட்யூப் சேனல் பார்த்து ரசித்தமைக்கு நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஉரையாடல் - இப்படியும் சில சமயம் பேசுவதுண்டு - நகைச்சுவை தான்.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முகநூலில் படித்தேன்.
பதிலளிநீக்குபெரியம்மா, ஆதி உரையாடலை ரசித்தேன்.
யூட்யூப் சேனல் பார்த்தேன், வாழ்த்துக்கள்.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மருத்துவர் பற்றிய செய்தி தவிர்த்து மற்றவை படித்தேன். மருத்துவர்களும் மறைந்து கொண்டிருக்கின்றனர். செவிலிகள்/உதவியாளர்கள் என சுகாதாரப் பணியாளர்கள் அனைவருமே தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை புரிகின்றார்கள். அவர்கள் சேவை பற்றியும் அவர்களுக்கு இருக்கும் ஆபத்துகள் குறித்தும் என்ன சொல்ல! மனதுக்கு வேதனை மேல் வேதனை தான்!
பதிலளிநீக்குவேதனையான நிகழ்வுகள் தான். மருத்துவர்கள்/செவிலியர்கள்/உதவியாளர்கள் என மருத்துவத் துறையில் இருக்கும் பலருடைய சேவை இன்னமும் நம்மில் சிலருக்கு புரியவே இல்லை என்பது வேதனை கீதாம்மா. அவர்களிலும் சில கருப்பாடுகள் இருக்கலாம் - எங்கே தான் இல்லை கருப்பாடுகள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.