தொகுப்புகள்

வெள்ளி, 2 ஜூலை, 2021

தந்தையர் தினம் - விளம்பரம் - குறும்படம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணம் செய்ய ஆசை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SMILING DOESN’T MEAN YOU’RE HAPPY.  SOMETIMES IT MEANS YOU’RE STRONG.


******




ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினம், மகளிர் தினம் என ஏதாவது ஒரு தினம் குறித்த கொண்டாட்டங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. வருடத்தின் எல்லா நாட்களும் ஏதோ ஒரு தினம் என கொண்டாட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்குப் பின்னே வியாபார நோக்கமும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறோம்.  இந்தச் சமயத்தில் வரும் விளம்பரங்களும் உங்களை அந்த தினம் கொண்டாடுவதற்கு உங்களை ஊக்குவிக்கும் படி அமைந்து விடுகிறது. அதிலும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் விளம்பரங்கள் ஒரு குறும்படம் போலவே அமைந்து விடுவதும் இயல்பாக நடந்து விடுகிறது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட தந்தையர் தினம் சமயத்தில் வெளிவந்த இரண்டு விளம்பரம்/குறும்படம் தான் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 


முதல் விளம்பரம் - Health OK விளம்பரம்: 




எப்போதும் முறைத்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருக்கும் அப்பாவிற்கு தன் மீது அன்பே இல்லையோ என நினைக்கும் மகன்! நீண்ட நாட்கள் பிரிந்து இருக்கப் போகும் சூழலில் என்ன நடக்கிறது என்பதை அழகாகச் சொல்லும் விளம்பரம் இது! பாருங்களேன்.

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில், யூட்யூபில் நேரடியாக கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Father's Day Film | Health Ok| Featuring Zakir Hussain #ExpressTheToughLove - YouTube


இரண்டாம் விளம்பரம் - ACKO INSURANCE விளம்பரம்: 


மகிழுந்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் தந்தை, அவரது மகன், கற்றுக் கொடுத்த பெயர்த்தி என்ற மூன்றே மூன்று கதாபாத்திரங்களுடன் எடுத்திருக்கும் இந்த விளம்பரமும் நன்றாகவே இருக்கிறது.  பார்த்து ரசிக்கலாமே!


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில், யூட்யூபில் நேரடியாக கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


ACKO Insurance | Happy Father’s Day - YouTube


இரண்டு விளம்பரங்களும் ஆங்கில சப்டைட்டில்களுடன் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் - ஹிந்தி தெரியாதவர்களும் புரிந்து கொள்ளலாம்!  மொழி தெரியாவிடிலும் அவர்களது செய்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. பாருங்களேன். 


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட விளம்பரம்/குறும்படங்கள் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

 

15 கருத்துகள்:

  1. இரண்டுமே நன்று. முதல் விளம்பரம் இன்னும் நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு விளம்பரங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இரண்டு விளம்பர குறும்படங்களும் மிக அருமை.
    ரசித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு விளம்பர குறும்படங்களும் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  3. இரண்டு அரும்படங்களும் கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு படங்களும் கண்டு ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. இரு விளம்பர காணொளிகளையும் ரசித்துப் பார்த்தேன். முதலாவதில் தந்தை மகன் இருவருமே நெகிழ்ச்சியூட்டும்படியாக நடித்துள்ளனர். இரண்டாவதில் தந்தைக்கு மகிழ்வூட்டுவதும் சிறப்பாக இருக்கிறது. தந்தையர் தினத்திற்காக வந்த இரு விளம்பர காணொளிகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இரண்டு விளம்பரங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. இரண்டு விளம்பரங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. காணொளிகள் அருமை.. மகிழ்ச்சி..
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அன்பின் வெங்கட் ,
    இனிய காலை வணக்கம்.
    வாசகம் அறிவுரை சொல்கிறது.
    நன்மை.

    இரண்டு குறும்படங்களுமே மிக மிக இனிமை.
    அப்பாக்களின் அருமை மிகத் திறமையாகப்
    படமெடுக்கப் பட்டிருக்கிறது.
    இரண்டாம் படத்தின் தாத்தாவை பழைய தூர்தர்ஷனில்
    நிறையப் பார்த்திருக்கிறேன்.
    முதலாம் பட அப்பா நன்றாக நடித்திருக்கிறார்.
    அம்மாவும் அருமை.
    உள்ளத்தைத் தொட்டன. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....