தொகுப்புகள்

வியாழன், 24 பிப்ரவரி, 2022

மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி! வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட்

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஆதாயம் இல்லாதபோது தூக்கி எறியப்படுவதை விடுதலையாக நினைத்துக் கொள்! இப்போது நீ அடிமை இல்லையென பெருமை கொள்.

 

******



 

பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இவை மூன்றும் மனிதனை உயர்த்தியதாக எந்த சரித்திரமும் இல்லை! இப்படியிருக்க பெரும் சாம்ராஜ்யங்களும், சமஸ்தானங்களும்  கூட சரிந்து போன வரலாறின் பின்னணியில் இவை மூன்றும் தான் உள்ளன.

 

'காலச்சக்கரம்' நரசிம்மா சாரின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் நம் சரித்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாய் அமைந்திருக்கும். உடனிருந்து பார்த்தது போல்  அத்தனை நுணுக்கமான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்! அந்த வரிசையில் மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டியை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்தால் இடையில் நிறுத்த இயலாத வண்ணம் அவ்வளவு சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்.

 

மயிலங்கி சமஸ்தானத்தின் இளவரசியான அலர் மேல் மங்காவின் தந்தை தங்களுக்குச் சொந்தமான பொக்கிஷங்களை அன்னிய  படையெடுப்பிலிருந்து காப்பதற்காக  ஓரிடத்தில் பத்திரப்படுத்துகிறார். அதை ஓலைச்சுவடியில் குறிப்பாக எழுதியும் வைக்கிறார். அதன் பின் அவர் மறைந்தும் விடுகிறார்.

 

பொக்கிஷத்தைப் பற்றிய குறிப்புகள் புரிபடாத சூழலில் அந்த பொக்கிஷத்தை அடைவதற்காக நாலாப் புறமிருந்தும் பல வித முயற்சிகளும், சூழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இத்தனை போராட்டங்களுக்குப் பின்னும் மங்காவால் பொக்கிஷத்தை காப்பாற்ற முடிகிறதா! என்பது தான் கதை.

 

மங்காவின் வீரமும், மதிநுட்பமும், திடமும் வியக்க வைக்கிறது! ஒவ்வொரு பெண்ணும் இவளைப் போல இருந்து விட்டால் நிச்சயமாக பெண்ணுக்கு எந்த கெடுதலும் வராது என்பது உறுதி! எதற்குமே அஞ்சவில்லை இவள்! இவளைப் போல இன்னும் சிலரும் இந்த சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இக்கால பெண்களுக்கு இவர்கள் அனைவரும் உதாரணமாக விளங்குகின்றனர்.

 

புதையலுக்கும், பொக்கிஷத்திற்கும் உள்ள வேறுபாடு! பெண்கள் அணிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் என்னென்ன குணாதிசயங்கள்! மைசூர் தசரா விழா உருவானதன் பின்னணி என்று பல தகவல்கள் இந்த சரித்திரத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

 

#Bynge App ல் வாசித்த இந்த சரித்திரம் இப்போது வானதி பதிப்பகம் அச்சு நூலாகவும் வெளியிட்டு இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் வாசித்துப் பாருங்களேன்.


 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

  1. படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம்,அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பைரங்கியில் வந்தபோது சில பகுதிகள் படித்தேன்.  முழுவதும் படிக்கவில்லை.  நரசிம்மா நூல்கள் என்றுமே சுவாரஸ்யமானவை.  அவற்றைப் படைத்த அவர் உழைப்பு அபாரமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் நூல்கள் ஸ்வாரஸ்யமானவை தான். அவரது நூல்களில் பெரும்பாலானவை நானும் படித்து விட்டேன் ஸ்ரீராம். அவரது உழைப்பு பிரமிக்க வைப்பதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதைக்குள் இன்னும் கொஞசம் உள் நுழைந்து எழுதியிருக்கலாமோ என்ற நினைப்பு வந்தாலும்
    காலத்தின் லோலம் இந்த அளவே போதுமானது என்று அந்த நினைப்பை அழித்தது.

    //ஆதாயம் இல்லாரத பொழுது....
    பெருமை கொள்.. //

    அற்புதங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் விரிவான விமர்சனம் செய்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது - எனக்கும்! விமர்சனம் என்று சொல்வதை விட இந்தப் பதிவு நூல் அறிமுகம் என்று வேண்டுமானால் சொல்லலாம் ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல குறிப்புகளுடன் பதிவு..
    அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. நல்லதொரு நூல் அறிமுகம் சார்.
    விரைவில் வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது வாசித்துப் பாருங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி, வாசகம் செம....நிகழ்வுகள் சிலவற்றிற்குப் பொருந்திப் போகிறதே!!!

    //'காலச்சக்கரம்' நரசிம்மா சாரின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் நம் சரித்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாய் அமைந்திருக்கும். உடனிருந்து பார்த்தது போல் அத்தனை நுணுக்கமான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்!//

    ஆமாம் அதே. காலக்கசக்கரா நரசிம்மா அவர்களின் புத்தகங்கள் சுவாரசியமானவை. அவருடையது 8 வாசித்திருக்கிறேன்.

    இந்தப் புத்தக அறிமுகத்திற்கு நன்றி ஆதி. க்ரிஸ்பா சொல்லியிருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. காலச்சக்கரம் நரசிம்மா சார் அவர்களின் புத்தகங்களை படிக்கும் போது நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போலவே இருக்கும். இன்று தங்களின் பதிவினை படித்ததும் உடனே 'மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி' படிக்க ஆர்வம் எழுந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படித்துப் பாருங்கள் நிர்மலா ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  9. புத்தகம் படிப்பது ஒன்று, படித்ததும் அதைப்பற்றி எழுதுவது இன்னொரு மகத்தான விஷயம். இரண்டையும் தொடர்ந்து செய்யும் உங்களுக்கு பிரத்யேக பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா.

      பாராட்டியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. புத்தக அறிமுகம் முகநூலிலும் பார்த்தேன். நான் இந்தப் பக்கங்களுக்கு எல்லாம் சென்று பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை. ஆனால் ஆதி எழுதி இருப்பதில் இருந்து சுவாரசியமானவை எனப் புரிகிறது. அதோடு காலச்சக்கரம் நரசிம்மா தென்னாட்டு வரலாற்றை அக்கு வேறு ஆணி வேறாக விவரித்துச் சொல்லுகிறார். எல்லாமே தர்க்க ரீதியாகச் சரியாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சுவாரசியம்.அறிமுகம் படிக்கும் ஆவலை மிகவும் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது வாசித்துப் பாருங்கள் மாதேவி.

      தங்களது வருகைக்கும் தொடரும் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....