தொகுப்புகள்

திங்கள், 28 மார்ச், 2022

வாசிப்பனுபவம் - மௌனம் - ப. பிடல் ஹாஸ்ட்ரோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சிக்கல் என்றாலும் சரி, சிக்னல் என்றாலும் சரி, சிறிது நேரம் காத்திருந்தால், வழி தானாக பிறக்கும். 

 

******



 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் வாசிப்பனுபவம் . பிடல் ஹாஸ்ட்ரோ அவர்கள் எழுதிய மௌனம்எனும் குறுநாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 21

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

https://www.amazon.in/dp/B083RF5SMJ

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய ஜூன் மாத வாசிப்புப் போட்டியில் இருந்த பதினைந்து நூல்களில் எனது ஆறாவது வாசிப்பு - . பிடல் ஹாஸ்ட்ரோ அவர்கள் எழுதிய மௌனம் எனும் நூல். குறைவான பக்கங்களே, கொண்டு, இனியா எனும் பெண்ணின் வாழ்வில் நடந்த சில விஷயங்களைச் சொல்லும் ஒரு குறுநாவல்.  

 

கல்லூரி சமயத்தில் சந்தித்த ஒருவரை, அவரது எண்ணத்தினை பிறகு ஒரு கடிதம் வழி தெரிந்து கொண்டால்!  அதுவும் திருமணத்திற்குப் பிறகு! அந்த நபர் என்ன செய்வார் என்பதைச் சொல்லி இருக்கிறார்.  நூலின் அறிமுகத்திலேயே இந்தக் கால சோசியல் மீடியாக்களில் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால், இந்த மின்னூலையும் அப்படியே நடுநடுவே தமிழை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்.  புதிய முயற்சி என்று அவர்கள் சொன்னாலும், படிக்கும்போது கொஞ்சம் நெருடல் ஏற்படுவது நிஜம்.  பலருக்கும் புரியும் என்றாலும், ஏனோ தமிழில் படிக்கும் அந்த மகிழ்ச்சி இப்படி மாற்றிப் படிப்பதில் இருப்பதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து!  இதை ஒரு குறையாகச் சொல்ல வில்லை என்பதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன். 

 

ஆங்காங்கே இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களைச் சேர்த்திருப்பது நன்று.  மனதில் இளையராஜாவின் இசையை ரசித்தபடியே இந்தக் குறுநாவலை படித்து முடித்தேன்.  மேலும் பல நூல்களை சிறப்பாக எழுதி வெளியிட நூலாசிரியருக்கு வாழ்த்துகள். நூலாசிரியரின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. வாசகம் புன்னகைக்க வைத்தது.


    கதையின் கரு புதுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் வாசிப்பனுபவமும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  3. வாசகம் சூப்பர் ஜி
    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. வாசகம் யாரோ தற்போதைய அல்லது தற்போதைய காலகட்டத்தவர் எழுதியிருப்பாரோ!! அல்லது உங்கள் வாசகமேவோ!!! ரசித்தேன். சிக்கல் சிக்னல்.....கருத்தும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. நான் எழுதியது அல்ல! :)

      நீக்கு
  6. உங்கள் விமர்சனம் கதை எப்படிப் போகும் என்று அறியும் ஆவல் எழுகிறது.

    குறித்துக் கொண்டுள்ளேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  7. அருமையான வாசகம். விமர்சனம் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. வாசகம் அருமை.
    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  9. நல்லதொரு வாசகம். எல்லாவற்றுக்கும் ஓர் வழி/தீர்வு உண்டு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....