தொகுப்புகள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

கதம்பம் - இடைஞ்சல் - சினிமா பாடல் - இன்று - இசைத்தமிழர் இருவர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

A MAN WHO IS MASTER OF PATIENCE IS MASTER OF EVERYTHING.

 

******

 

இடைஞ்சல் - 10 மார்ச் 2022



 

காலை வேளை..

.

அண்ணனுக்கு ஜே! காளையனுக்கு ஜே!

 

கண்மணியே காதல் என்பது கற்பனையோ! காவியமோ!

 

மச்சானப் பார்த்தீங்களா! 

 

செந்தூரப் பாண்டிக்கொரு ஜோடிக்கிளி

 

பின்னாடித் தெருவில் அலறும் பாடல்கள்..🙂

 

மாமியார் வீட்டில் இன்று தலையில் சொருகிய சீப்பும், கையில் மகளின் பின்னலுமாக பால்கனியில் நின்றவாறு கேட்டுக் கொண்டிருந்தேன்..🙂

 

அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் தரும்  உரிமையை யார் இவர்களுக்குத் தந்தது என்றாலும் மனதிற்கினிய பாடல்களை அலறவிட்டதால் தப்பித்தார்கள்..🙂

 

******

 

சினிமா பாடல் - ரேடியோ - 11 மார்ச்:

 

இன்றைய காலை..

 

தலைகுளித்து கூந்தலில் சுற்றிய ஈரத்துண்டுடன்..

 

பரபரப்பாக அடுப்பில் ஒருபுறம்  இட்லி! மறுபுறம்  சாதமும் பருப்பும் குக்கரில்! வாழைக்காய்களை நறுக்கிய நிலையில்

 

அடுக்களையில் அலைபேசியில் ஒலித்த..

 

பருவமே புதியப் பாடல் பாடு!

 

புதிய பூவிது பூத்தது!

 

மாலை சூடும் வேளை அந்திமாலை..

 

மெளனமான நேரம் இளம் மனதில்..

 

இன்றைய பொழுதை ரம்மியமாக்க  ஹலோ FMன் Retro Friday ..!

 

நல்லதே நடக்கட்டும்!

 

******

 

இன்றைய நாள் - 12 மார்ச் 2022: 



 

மக்கும் குப்பை! மக்காத குப்பை ! மறுசுழற்சி குப்பைனு தான் தனித்தனியா சேகரிச்சு தான் வெச்சிடுவோம்! ...... தனித்தனியா சேகரிச்சு தான் வெச்சிடுவோம்..! 

 

மாநகராட்சியின் குப்பை எடுக்கும் வண்டியில் பாட்டாகவே மக்களுக்கு அறிவுரை!

 

அதனை அடுத்து

 

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....உவ்வ்வேவேவே..!!!!

 

பின்னாடித் தெருவில் ஒரு வீட்டில் யாரோ ஒருவர் பல்துலக்கும் ஓசை!!  

Zooவுக்குள் சென்று வந்த உணர்வைத் தந்தது..🙂

 

கூடவே… 

 

தமால்ல்..தமால்ல் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை எடுத்து விடும் ஓசை!! வீட்டில் பாத்ரூம் காலியாக இல்லை போலும்!! பால்கனியிலேயே ஒருவர் குளிக்கிறார்..🙂

 

இதற்கிடையே… ”ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா! எதை உருட்டித் தேடலாம்! என்று எட்டிப் பார்க்கும் நம் முன்னோர்கள்...🙂  இன்றைய பொழுதுக்கு பொட்டுக்கடலையை சாப்பிட்டு விட்டு நகர்ந்தனர்!

 

******

 

இசைத் தமிழர் இருவர் - 12 மார்ச் 2022:

 


 

நேற்று மகளின் தமிழ் வகுப்பில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடம்!

 

ஆசிரியர் எல்லோரிடமும்  இசைஞானியின் பாடல் ஒன்றும், இசைப்புயலின் பாடலில் ஒன்றுமாக நாலு வரிகள் எழுதச் சொன்னாராம்.

 

காதல் பாடல்கள் கூடாது! என்று சொல்லி விட்டாராம்.

 

ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்துக் கொண்டு எழுதினார்களாம்.

 

மாலை மொட்டைமாடியில் காற்று வாங்கிக் கொண்டே இந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அம்மா! இளையராஜா பாடல்னு நான் என்ன எழுதித் தந்திருப்பேன்னு சொல்லுப் பார்க்கலாம்! 

 

நான் ராஜா சாரின் பாடல்கள் தான் நிறைய கேட்பேன் என்றாலும் இவளுக்கு எந்தப் பாடல் தெரியும்னு தெரியலையே! என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!

 

மடை திறந்து தாவும் நதியலை தான்!

மனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்!

இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்!

நினைத்தது பலித்தது!

எப்படிடி!!! என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்!

 

நீ தானம்மா சொல்லுவ இந்தப் பாட்டைக் கேட்கும் போது உற்சாகமா இருக்கும்னு! என்றாள்.

 

இன்னும் கூட உனக்கு பிடிச்ச பாட்டுனு

 

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு ..

உன்னால் முடியும் தம்பி தம்பி...

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்!

 

அதெல்லாம் கூட ஞாபகம் வந்தது.. ஆனா இசைஞானியோட பாட்டு தானான்னு தெரியலம்மா..! என்றாள்.

 

இருவருமாக காற்று வாங்கிக் கொண்டே சில பாடல்கள் கேட்டு விட்டு கீழே வந்தோம்..🙂

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. ..நல்ல பாடல்கள்.  

    முன்னோர்கள் அவ்வளவு சுதந்திரமாக கிச்சன் ஜன்னலுக்கு வருகிறார்களே...  குட்டியாக இருந்தால் இடுக்கு வழியாக உள்ளே கூட வந்து விடுமோ?

    மகள் சொன்ன இசைப்புயல் பாடல் என்னவோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர்கள் - இடுக்குகள் வழி வந்து விடுவதுண்டு - பால்கனி மற்றும் சமையல் அறையில். கொஞ்சம் ஏமாந்து விட்டால் உள்ளே இருப்பதை உருட்டி விளையாடுவார்கள் ஸ்ரீராம்.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ரசிக்கக் கூடிய பாடல்கள் அதிகம் தான் தனபாலன். ஒரு சில பாடல்கள் வேதனை தந்தாலும் நல்லதை ரசிப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கதம்பம் அருமை.
    பாடல்கள் கேட்பது மனதுக்கு நிம்மதி.
    மகள் அருமையான பாடலை தேர்வு செய்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. பாடல்கள் கேட்பது மனதுக்கு இதம் தரும் விஷயம் தான்.

      நீக்கு
  5. அன்புள்ள ஆதி, நானும் காலை பொழுதில், சமையலுடன் FM பாட்டுக்கள் கேட்பதுண்டு. வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் இனிமை! இளையராஜா அவர்களின் பாடல்கள் எங்கு ஊர்களுக்கு சென்றாலும் எங்களுக்கு துணையாய். நல்லதொரு பதிவிற்கு நன்றி. "யாரிவள்" தொடருக்காக காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த சிறப்பான கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      நீக்கு
  6. ஹாஹா இந்தப் பாட்டு அலறல் எல்லா ஊர்களிலும் உண்டு போலும்!!! சென்னையைச் சொன்னேன். அதுவும் ஆடி மாசம் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கு அப்படி இதுவரை இல்லை.

    பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்தான்.

    அட!! தில்லியில், ஜியின் ஆஃபீஸ் ஜன்னலிலும் மூதாதையர்.... இங்கும் ஒருவர்!! அழகு! சென்னையில் இருந்தவரை தினமும் ரசிக்கலாம் வீட்டு பால்கனியில் விசிட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குட்டியும் பெரியோருமாய், அடையார், ஐஐடி வளாகம் ஒட்டிய பகுதிகளில்...செல்லங்கள் இருந்தவ்ரை அவர்கள் உஷார் கொடுத்துவிடுவார்கள். இவர்களின் வருகையை. நான் வாழைப்பழம், தக்காளி, அல்லது கடலையை பால்கனியில் போட்டுவிட்டுக் கதவை சாத்திவிடுவேன். ஜன்னல் வழி அவர்களைப் பார்த்து ரசித்ததுண்டு, வீடியொவும் எடுத்திருக்கிறேன். பதிவில் போட்டேனா என்று தெரியவில்லை. நினைவில்லை.

    அட! தமிழ்வகுப்பில் இப்படியும் பாடமா...இசைப்புயலின் பாடல் எதைத்தேர்ந்தெடுத்தாள்?

    தமிழா தமிழா நாளை நம் நாளே ரோஜாப்படப் பாட்லாஅல்லது அச்சம் அச்சம் இல்லை, இந்திராபடப் பாடல் ? இந்த இரண்டுமே அருமையான பாடல்கள் வரிகளூம் சரி இசையும் சரி. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு அலறல் - இல்லாத இடமே இல்லை! ஹாஹா...

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. கதம்பம் அருமை.

    தமிழ் வகுப்பிலான பாடத்திட்டம் வித்தியாசமாக உள்ளது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. இப்போல்லாம் வேலை செய்கையில் பாடல்கள் கேட்கும் வழக்கமே விட்டுப் போயாச்சு. அதெல்லாம் சென்னை/அம்பத்தூரோடு போயாச்சு. இங்கே காலையில் தொலைக்காட்சியோ வானொலியோ போடுவதில்லை. இருந்த 2,3 ட்ரான்சிஸ்டர்களையும் செக்யூரிடிக்குக் கொடுத்துட்டோம். அவங்க பாட்டுக் கேட்ட வண்ணம் வேலை பார்க்க வசதியாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம். தில்லியில் நான் இப்போது பெரும்பாலும் பாடல்களைக் கேட்பதே இல்லை.

      பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் உளம் கனிந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. இளையராஜா பாடல் மேல் ரோஷ்ணிக்கு இவ்வளவு ஆர்வம் இருப்பதை இன்றே அறிந்தேன். நம்ம முன்னோர் நம்ம வீட்டிலும் வடக்குப் பக்க ஜன்னலில் வந்து உட்காருவார். சமையலறைப்பக்கத்து ஜன்னலுக்கு வரமுடியாதபடி அவர் தலையைக் கண்டாலே கண்ணாடிக் கதவைப் போட்டு மூடிடுவேன். அப்படியும் பால்கனியில் வந்து உட்காருவார். நல்லவேளையா அங்கேயும் வலைக்கதவு இருக்கோ, பிழைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர் வருகை - இங்கே அலுவலகத்தில் நிறையவே உண்டு. விதம் விதமான காட்சிகளை பார்க்க முடியும் கீதாம்மா. தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. அழகான கதம்பம் பதிவு. ரோஷ்ணிக்கு
    அம்மா அப்பாவின் இசை ஆர்வம்
    கலந்திருக்கிறது. அருமையான பாடல் தேர்வுகள்.

    ரஹ்மான் பாடலில் எதைத் தேந்தெடுத்தார் என்பதை
    சொல்லுங்கள்.

    பாடல்வரிகள் எப்படி இதுபோலக் கச்சிதமாகச் சொல்கிறார்.!!!!

    பள்ளியில் இதைப் போல பாடம் கேட்பதை
    முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன்.
    அருமையான பள்ளி. நானும் சேர்ந்து கொள்ளலாமா என்று யோசிக்கிறேன்.:)
    வாழ்த்துகள் ஆதி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துப் பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....