திங்கள், 11 ஏப்ரல், 2022

வாசிப்பனுபவம் - பிள்ளை பிடிப்பவள் - அகிலாண்ட பாரதி S


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இதயம் ஒரு விநோதமான சிறை - இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை; பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள். 

 

******



 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் அகிலாண்ட பாரதி S அவர்கள் எழுதிய பிள்ளை பிடிப்பவள்எனும் சிறுகதைத் தொகுப்பு. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 59

விலை: ரூபாய் 200/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

பிள்ளை பிடிப்பவள்: சிறுகதைகள் (Tamil Edition) eBook : S, அகிலாண்ட பாரதி: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய ஜூன் மாத வாசிப்புப் போட்டியில் இருந்த பதினைந்து நூல்களில் எனது ஏழாவது வாசிப்பு - அகிலாண்ட பாரதி  அவர்கள் எழுதிய பிள்ளை பிடிப்பவள் எனும் நூல். போட்டிகளில் பங்கு கொண்டு பரிசு பெற்ற சில சிறுகதைகளைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார்.  

 

மொத்தம் ஏழு சிறுகதைகள் - நூலின் தலைப்பாக இருக்கும் பிரதான சிறுகதை - நான்காவது சிறுகதையாக இருந்தாலும், குழந்தைகள் மீது, தனது குழந்தைகள் மட்டுமல்ல, யாருடைய குழந்தையாக இருந்தாலும், அவர்கள் மீது பாசத்துடன் இருக்கும் ஒரு பெண்மணியின் கதையைச் சொல்லும் கதை பிள்ளைப் பிடிப்பவள்.  ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களனைக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் சிறப்பு.  அதில் வரும் பிரதான கதா பாத்திரங்களின் வழி சிறப்பான விஷயங்களையும் சொல்ல முயன்று இருக்கிறார் ஆசிரியர் என்றே சொல்ல வேண்டும்.

 

மனசு மாறிடுச்சு எனும் முதல் கதையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் - அதுவும் நோயாளிகளை தூக்கி, Stretcher-இல் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் இருப்பவர் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் நோயாளிகள், அவரது பணி என சொல்லி இருப்பது நன்று - வித்தியாசமான கதாபாத்திரம் தான். நோயாளிகள் அவர்களாகவே தரும் பணத்தினை தனது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்ளாத, அந்தப் பணத்தினை யாரும் இல்லாத மனிதர்களுக்கு உணவு வாங்கச் செலவு செய்யும் நல்ல மனம் கொண்டவராக சித்தரித்ததோடு கதை வழியே அந்த நல்ல மனிதருக்கும் மனைவியை, அவள் போன்ற பெண்கள் படும் கஷ்டங்களை புரிய வைக்கும் விதமாக கதையை எழுதி இருக்கிறார். அதன் மூலம் நமக்கும்!

 

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் இளைஞர் பற்றி ஒரு சிறுகதை சொல்கிறது என்றால், டைம் மெஷினில் ஏறி உலகக் கோப்பையைப் பார்க்கச் செல்லும் ஒரு கிரிக்கெட் மோகம் கொண்ட இளைஞர் பற்றி ஒரு சிறுகதை சொல்கிறது.  தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுமே நல்ல கதைகளே.  நீங்களும் மின்னூலை தரவிறக்கம் செய்து போட்டிகளில் பங்குபெற்ற/பரிசு பெற்ற கதைகளை வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கும்,  மேலும் பல நூல்களை சிறப்பாக எழுதி வெளியிட நூலாசிரியருக்கும் எனது வாழ்த்துகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. இதயச்சிறையில் பாசவலை! வாசகம்!


    புத்தகம் நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கதை விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி

    பக்கங்கள்: 59 விலை: ரூபாய் 200/-
    சிறிய நூலின் விலைதான் அதிகம் போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வாசகம் வித்தியாசம்! யோசிக்கவும் வைக்கிறதே!

    புத்தக அறிமுகம் நன்று ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் மற்றும் வாசகம் குறித்த தங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. வாசகமும் நூல் அறிமுகமும் அருமை சார்.
    நூலை வாங்கிவிட்டேன்.
    விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூலை வாங்கியது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  6. வாசகமும் அதற்கு ஶ்ரீராம் சொன்ன தலைப்பும் அருமை. புத்தகம் வாசிக்கச் சுவையாக ரசிக்கக் கூடியதாக இருக்கும்போல. ஆனால் நான் தான் கின்டிலுக்கு எல்லாம் போகவே முடியலையே! விடுங்க! புத்தகம் 60 பக்கங்களுக்குள் இருக்கு. ஆனால் விலை 200 ரூபாய்? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் நூல் அறிமுகம் குறித்த தங்களது கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதாம்மா. சில புத்தகங்களில் விலை அதிகமாகவே குறிப்பிடுகிறார்கள் - அமேசான் தளத்தில்! ஆசிரியர் வைக்கும் விலை தான்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....