புதன், 6 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினான்கு – பேப்பரை எப்படி கிழிக்கலாம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய யாரிவள் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எதுவாயினும் கவனத்துடன், தேவைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய தேவை, நாளைக்கு தேவையற்றதாக மாறி விடுகிறது - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி பதினான்கு - பேப்பரை எப்படி கிழிக்கலாம்!
 

ஒவ்வொரு நாளும் அப்பா அதிகாலையில் எழுந்ததும் முதலில்  வானொலியை உயிர்ப்பித்தவுடன் அதில் வைக்கும் மங்கள் வாத்தியமும் அதைத் தொடர்ந்து  வந்தே மாதரம், திரையிசைப் பாடல்கள் என ஆரம்பிக்கும் அன்றைய நாளின்  பொழுது! வானொலியின் பாடல்களோடு தான் வளர்ந்தாள்!

 

இரவு உணவை  எல்லோரும் சாப்பிட்ட பின் அம்மா சாப்பிட்டு முடித்து அந்த இடத்தை எச்சலிட்டு துடைத்து காயும் முன்னர் ஓரமாக இவள் தூங்கி விடுவதோடு அன்றைய நாள் நிறைவடைந்து விடும்..🙂 அப்பா இவளை எழுப்பி தன் மேல் சாய்த்துக் கொண்டு இவளுடைய இடத்தில் படுக்க வைப்பார்! இடியே விழுந்தாலும் 'எனக்கென்ன' என்று இவள் தூங்கி விடுவதாக அம்மா புகார் சொல்வாள்..🙂

 

சுட்டிப்பெண் இப்போது ஐந்தாம் வகுப்புக்குச் சென்றிருந்தாள்! அவளுக்கான பொறுப்புகளும் கூடுதலாக ஆனது!  வகுப்புத் தலைமையிலிருந்து பள்ளி மொத்தத்துக்கும் தலைமையாக மாறிப் போனாள்! காலை பிரார்த்தனையை ஏற்பாடு செய்வது முதல் வருகைப் பதிவேடு, விழா ஏற்பாடு என்று தொடர்ந்து இவளுக்கான வேலைகள் ஒதுக்கப்பட்டன! 

 

வகுப்பில் எந்தக் கேள்வி கேக்கப்பட்டாலும் கையை தூக்கிக் கொண்டு முந்திரிக்கொட்டையாக பதிலும் சொல்வாள்! இந்தப் பள்ளியில் அவள் சுற்றுலாவாகச் சென்றது குருவாயூர், சாவக்காடு, திருமூர்த்தி மலை போன்ற இடங்களுக்கு!   

 

ஆண்டு விழாவில் இவளும், இவளின் வகுப்புத் தோழரும் மேடையில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஒரு நேர்க்காணல் நிகழ்ச்சிப் போல்  நகைச்சுவையாக நடித்துக் காட்டினர்! தோழரிடம் பேப்பரை எப்படியெல்லாம் கிழிக்கலாம்! என்பதாக இவள் கேட்பாள்! 

 

அந்த நண்பனும் அதை சீரியசாக செய்து காண்பிப்பதாக  இருக்கும்..🙂 தூர்தர்ஷனில் அப்போது வெளிவந்த எதிரெதிர் நிகழ்ச்சியை இமிடேட் செய்வது போல் பத்து நிமிடங்களுக்கும் குறையாத ட்ராமாக அது இருந்தது..🙂 அதே விழாவில் ஆங்கிலத்தில் ஒரு உரையும் கொடுத்தாள்! 

 

இப்படியாக அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்தாள். இனி ஆறாம் வகுப்பு அதே அவினாசி சாலையில் உள்ள வேறு ஒரு பள்ளியில் இவளை சேர்க்கலாம் என அப்பா நினைத்தார்!

 

இன்னும் என்னெல்லாம் செய்தாள் இவள்!!! வரும் பகுதிகளில் சொல்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

 1. வாசகம் உண்மையைச் சொல்கிறது.  

  SPL ஆக இருந்தது சிறப்பு.  எதிரெதிர் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அப்போதே நடத்தியதும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. வாசகம் சூப்பர்.

  அட! அப்பவே ஆளுமைத் திறன் இருந்தது சிறப்பு. நிகழ்ச்சி சுவாரசியம்.! ரொம்பவே சிறப்பாக இருந்திருக்கீங்க பல திறமைகளுடன் அதான் இப்பவும் அழகா எழுத வருகிறது! பாராட்டுகள் ஆதி!

  இடியே விழுந்தாலும்// ஹாஹாஹா எனக்கும் பொருந்திப் போகிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பதிவு குறித்த பாராட்டுதல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. மிகச் சிறப்பான இளம் வயது. அத வயதில் தலைமை வகித்து விழாக்கள் ஏற்பாடு செய்வது எல்லாம் மிகச் சிறந்த திரமைகள்

  வாழ்த்துகள்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 5. வாசகம் அருமை.

  ஆதியின் திறமைகள் படிக்கும் போது நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவு குறித்த தங்களது எண்ணங்கள் கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 6. சிறுவயதிலேயே ஆளுமையும் தொடங்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....