புதன், 9 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் பயணம் பகுதி மூன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மனதை திடமாக வைத்திருங்கள். சிறு சிறு கற்களாக எடுத்துப் போட்டாலும், காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும்.  காலம் அனைத்தையும் மாற்ற வல்லது

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!

 

யாரிவள்! பகுதி மூன்று:


 

குழந்தைகள் அழும் போது அப்பாவும், அம்மாவும் சிரிக்கிறார்கள்! தாங்கள் பெற்று வளர்த்த குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அது அப்பாவையும் அம்மாவையும் வருத்தப்படத் தானே வைக்கும்?? எப்படி சிரித்துக் கொண்டிருப்பார்கள்?? ஆமாம்! சிரிக்கிறார்கள்! மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! 

 

பிறந்ததும் குழந்தை வீறிட்டு  தான் அழும்! அதைப் பார்த்து பெற்றோரும், உற்றோரும் சிரித்து சந்தோஷப்படுவார்கள் தானே! அடுத்து பள்ளியில் கொண்டு விட்டதும் குழந்தை அழும்! அதைப் பார்த்தும் அந்த அப்பாவும் அம்மாவும் சிரித்துக் கொண்டே சமாதானம் செய்து அங்கேயே விட்டுட்டு தான் வருவார்கள்! 

 

இது விந்தையான உலகம் தான்!

 

அழுகை என்றதும் நினைவுக்கு வருவது நம்ம  குட்டிப்பொண்ணு பிறந்ததும் அழவே இல்லையாம்! மருத்துவர் பின்புறம் ஒரு அடி வைத்ததும் தான் அழுதாளாம்..🙂 அம்மா சொல்வார்! வேடிக்கை தான்! பிறந்த போது அழவில்லை என்றால் என்ன! அதன் பிறகு அவளின் உணர்வுகளோடு போட்டியிட்ட போதெல்லாம் கண்கள் கரையை உடைத்துக் கொண்டு பொங்கி வந்த காட்டாற்று வெள்ளம் போல் ஆனதே! பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலமும் அது தான்! பலவீனமும் அது தான்!

 

திருமணக்கூடம் போலிருந்த அந்த பெரிய மழலையர் வகுப்பறையில் எல்கேஜிக்கும் யூகேஜிக்குமாக இரண்டிரண்டு பிரிவுகள் கொண்ட வகுப்புகள் இருந்தன! அம்மாவையும், அப்பாவையும் விட்டுட்டு வந்த குழந்தைகள் பெரும்பாலும் அங்கே அழுது கொண்டு தான் இருக்கும்! அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள் ஆசிரியர்கள்!

 

இவளும் 'அம்மா இதோ வந்துடுவா'ன்னு அப்பா சொன்னாரே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருப்பாள்! எவ்வளவு நேரம் என்பதெல்லாம் தெரியாது! ஆனால் அந்தக் காத்திருத்தல் என்பது மிகவும் நீண்டதாக இருந்தது! பின்னாளில் அந்த அம்மா இவளை விட்டு நிரந்தரமாகவே பிரிவாள் என்று அப்போது அவளுக்கு தெரியாமல் போனது தான் இவளின் வாழ்க்கையில் பொதிந்திருந்த முதல் புதிர்!

 

அந்த மழலையர் பள்ளியின் ஆசிரியர்களின் ஆடலும், பாடலுடன் சேர்ந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவளுக்குள் ஆரம்பக்கல்வியை துவக்கியது. மதியம் வரையிலான வகுப்பும் அதன் பிறகான தூக்கமும், எழுந்ததும் தந்த பாலும் , பிஸ்கட்டுமாக சென்று கொண்டிருந்தது அந்த இனிமையான நாட்கள்! 

 

அப்புறம் என்னென்ன செய்தாள்!!  யாரிவள் தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

  1. தொடர்கிறேன். எல் கே ஜி காலங்களின் நினைவுகள் இருப்பது சிறப்பு. எனக்கு மூன்றாம் வகுப்புக்கு முன் என்ன நடந்தது என்று நினைவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்னமோ ஓரளவு எல்லாமே நினைவிலிருக்கிறது. தொடர்ந்து வாசித்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. நினைவலைகள் அருமை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. உங்களுடைய நினைவு ஆற்றலை கண்டு வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  5. நல்ல நினைவுகள்.

    எனக்கும் என் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கு. பெஞ்சில் உட்கார்ந்து அழுதது நன்றாக நினைவு இருக்கிறது. என் அத்தைதான் என்னைக் கொண்டு விட வருவாங்க என் அத்தையும் என்னோடு உட்கார வேண்டும் என்று அழுதிருக்கிறேன்!!

    சுவாரசியமான அழகான தமிழ் நடை. அழகா சொல்றீங்க. தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..உங்கள் அனுபவங்கள் அழகா இருக்கு.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. நீங்கள் மிகவும் சிறுவயதில் சென்று இருக்கிறீர்கள்.

    அப்போது நாங்கள் நான்கு வயதில்தான் சென்றோம் 12மணியுடன் விட்டுவிடுவார்கள். வீட்டில் அண்ணா அவர்கள் பாடசாலை செல்வதால் மகிழ்ச்சியாகவே சென்று வந்திருக்கிறேன்.அம்மாவின் நண்பிதான் ஆசிரியர் என்றதும் காரணமாக இருக்கலாம். அப்பா கட்டுப்பாட்டுடன் முன்பாகவே வளர்த்திருந்தார் ஆசிரியர்களுக்கும் பிடித்த ஒழுக்கமான குழந்தையாகவே இருந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் சிறுவயது நினைவுகள் அழகாக இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....