திங்கள், 21 மார்ச், 2022

வாசிப்பனுபவம் - கதை பேசலாமா? - கற்பகாம்பாள் கண்ணதாசன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உங்களை சோம்பேறி ஆக்கும். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், உங்களை சுறுசுறுப்பாக்கும். ஆகவே சிந்தித்து செயல்படுங்கள். 

 

******



 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் கற்பகாம்பாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கதை பேசலாமா?எனும் சிறுவர் கதைகள் தொகுப்பு. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: சிறுவர் கதைகள்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 26

விலை: ரூபாய் 50/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

கதை பேசலாமா..?: சிறுவர் கதைகள் (Tamil Edition) eBook : KANNATHASAN, KARPAGAMBAL: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய ஜூன் மாத வாசிப்புப் போட்டியில் இருந்த பதினைந்து நூல்களில் எனது ஐந்தாவது வாசிப்பு - கற்பகாம்பாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கதை பேசலாமா சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்பு தான். குறைவான பக்கங்களே, கொண்டு, ஐந்தே ஐந்து கதைகள் கொண்ட மின்னூல் - ஆனாலும் சொல்ல வரும் விஷயங்கள் மிகச் சிறந்த பாடம்.  

 

ஒரு காடு. அந்தக் காட்டில் வசிக்கும் பல மிருகங்கள் - சிங்கராஜா, முயல், மான், ஆமை என எல்லா மிருகங்களையும் பேச வைத்து, அவை மூலம் சிறுவர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும் விதமாக நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார் நூலாசிரியர்.  ஒவ்வொரு கதையின் முடிவிலும், அந்தக் கதை வழி என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுவர்களுக்குத் தனியாகச் சொன்னதோடு, பெற்றோர்களுக்கும் தனியாகச் சொல்லி இருப்பது சிறப்பு.  பல பெற்றோர்கள் செய்யும் தவறே சிறுவர்களை பாதை தவறி நடக்க வழி வகுத்து விடுகிறது என்பதை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  

 

ஐந்தே ஐந்து கதைகள் என்றாலும், ஒவ்வொரு கதை வழியாகவும் நல்ல சிந்தனைகளை சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சொல்லி இருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுகள். நூலாசிரியரின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிறுவர்களுக்கான நூல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஆஹா! சிறுவர் கதைகள்..ஆசிரியர் எழுதியிருக்கும் விதத்தை நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது, வெங்கட்ஜி. வாசிக்கவும் பிடிக்கும்.

    ..மகனுக்குச் அவனது சிறு வயதில் இப்படி காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகள் கேரக்டராக்கி இட்டுக்கட்டி நல்ல விஷயங்கள் சொன்னது எல்லாம் நினைவில் வருகிறது. என் மருமாளுக்கும் என் கற்பனையில் சொன்னது..அதில் டைனாசரும் என் மருமாளும் அவள் ஃப்ரென்ட்ஸ் என்று..சிலர் என்னிடம், அதை எல்லாம் எழுதி வைச்சு புஸ்தகமா போட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே என்று அப்போது சொல்லுவார்கள். ஆனால் அதற்கான சூழல் இல்லை.

    இதைப் பார்த்ததும் மனம் ரொம்ப மகிழ்ந்தது. சிறுவர்களுக்கான நூல்கள் நிறைய வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவர்களுக்கான நூல்கள் நிறைய வரவேண்டும் என்பதே எனது ஆசையும் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. சிறுவர்களுக்கு நூல் அருமை.
    உங்கள் விமர்சனமும் அருமை.
    இப்போது சிறுவர்கள் புத்தகம் வாசிப்பது அதிகமாகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவர்கள் நூல் அதிகமானால் மகிழ்ச்சி தான் கோமதிம்மா. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....