சனி, 19 மார்ச், 2022

காஃபி வித் கிட்டு - 145 - ஸ்டார்ட்டர் - கச்சா பாதாம் - Wall Art - மண்டலா - அந்திமம் - செல்லக்குட்டி - புத்தகம் படிப்பவர்கள் கவனத்திற்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு எந்த அதிசயமும் நடக்கத் தேவையில்லை. நாம் எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டும் சரியானதாக இருந்தால் மட்டும் போதுமானது!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த உணவு - ஸ்டார்ட்டர்:



ஆலு டிக்கி மற்றும் ஃபிங்கர் சிப்ஸ்...


பனீர்...


Bபல்லே Pபாப்டி...

சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு அழைப்பு வந்திருந்தது.  தலைநகர் தில்லியில் திருமணம். இங்கே திருமணங்களில் அதுவும் குறிப்பாக தமிழர்களின் திருமணங்களில் உணவு வடக்கு தெற்கு என இரண்டும் கலந்தே ஏற்பாடு செய்வார்கள். நம் ஊரிலேயே இப்படித் தான் ஆகிவிட்டது பல திருமணங்களில் எனும்போது வடக்கில் கேட்க வேண்டுமா? இங்கே திருமண நிகழ்வுகளில் பிரதான உணவு தவிர நிறைய விஷயங்கள் உண்டு - ஸ்டார்ட்டர் என்ற பெயரில் பல வித சிற்றுண்டிகளைச் சுமந்தபடி வலம் வருவார்கள்.  பனீர் ஃப்ரை, பகோடா என பல சிற்றுண்டி வகைகள் பனீர் அல்லது ஆலு எனும் உருளை சம்பந்தப்பட்ட சிற்றுண்டியாக இருக்கும்.  அப்படியான சில சிற்றுண்டிகளின் படங்கள் மேலே!

  

******

 

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - கச்சா பதாம்  :

 

பூபன் பட்யாகர் எனும் ஒரு வேர்க்கடலை வியாபாரி - கடலை விற்பனை செய்யும் போது பாடிய பாடலை ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட, அப்பாடல் பிரபலம் அடைய சில பிரபலங்கள் அவற்றைப் பார்த்து Remix செய்ய பூபன் பட்யாகர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.  வறுமையில் இருந்தவர் இப்போது கொஞ்சம் சம்பாதிக்கிறார் என்றாலும் சமீபத்தில் அவர் வாங்கிய வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. மிகவும் பிரபலமான அந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் பாருங்களேன்! 


 


 

பாடல் மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் இந்தச் சுட்டி வழி பார்க்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் ரசனை- Wall Art in Public Buildings:





 

தலைநகர் தில்லியில் இருக்கும் தில்லி மெட்ரோ, அரசுக் கட்டிடங்கள், பொது நிறுவனங்கள் என பல இடங்களில் கட்டிடங்களின் வெளிப்பக்கத்தில் அழகழகாக ஓவியங்கள் வரைவதைச் செய்யும் நிறுவனங்கள் சில உண்டு.   THE NEW ART என்ற நிறுவனமும் அவற்றில் ஒன்று.  தில்லியின் பல இடங்களில் இப்படியான ஓவியங்களை வரைந்து இருக்கிறார்கள்.  சில ஓவியங்கள் மிகவும் அழகாகவும் ரசிக்கத்தக்கதாகவும் அமைந்திருக்கின்றன.  அப்படியான சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு! 

 

******

 

இந்த வாரத்தின் ஓவியம் - மண்டலா ஆர்ட் :



 

எனது மூத்த சகோதரியின் மகள் சமீப நாட்களாக ஓவியத்தில் ஈடுபாடு காண்பித்து வருகிறார்.  அவர் வரைந்த மண்டலா ஆர்ட் ஒன்று உங்கள் பார்வைக்கு! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - அந்திமம் :

 

சொல்வனம் இதழில் படித்து ரசித்த ஒரு கவிதை - இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக - கு. அழகர்சாமி அவர்கள் எழுதிய கவிதை.  அதற்கான படமும் சிறப்பு.  கவிதை ரசிக்கலாமே! 



 

உண்ண வெறுமையும்

தின்னத் தனிமையும்

கேட்க மவுனமும்

நோக்க அத்துவானமும்

நினைக்க நோய்மையும்

சுகிக்க சூன்யமும்

தகிக்கத் தணியா மோகமும்

தியானிக்க அநித்தியமும்

திரும்பிப் பார்க்க மண் மூடிப் போன

கால நடைவழியும்

தவிக்க, தவிர்க்க முடியா அந்திமமும்

நெருங்கும் காலத்தில்,

சிரிக்காமல் நொந்து என் செய்ய என்

ஏழை நெஞ்சே?

சிரி!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - செல்லக் குட்டி :



 

அழகான செல்லக்குட்டி! எத்தனை அழகு!

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த செய்தி - புத்தகம் படிப்பவர்கள் கவனத்திற்கு




ஒரு நூலகர் படிப்பவர்களுக்குச் சொல்லும் செய்தி - சிறப்பானதாக இருக்கிறது! நீங்களும் பார்க்கலாமே!

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

22 கருத்துகள்:

  1. பதிவு மொத்தமும் அழகு.. அருமை..

    புதுவித சிற்றுண்டிகள், கடலைப் பாடல், தனிமையின் வேதனை, ஓவியங்கள் - அனைத்தும் சொல்லத் தக்கவை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஸ்டார்ட்டர் படங்கள் கவருகின்றன.

    கச்சா பதாம் -  சமீபத்தில் கட்டிடத்தழிலாளி மாடல் ஆனதும், பூ விற்கும் பெண்மணி மாடல் ஆனதும் செய்தியில் படித்தேன்.  அந்த வகையில் சேர்ந்தது இது.

    சுவரில் ஓவியங்கள், மண்டலா ஆர்ட்  அருமை.

    கவிதை - கு அழகர்சாமியா, அழகிரிசாமியா?  கவிதை மனதை பாரமாக்குகிறது.

    ரசித்த படமும், செய்தியும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். கவிதை கு. அழகர்சாமி அவர்கள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உணவு வகைகள் படங்கள், ஓவியம், கவிதை அனைத்தும் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் ,பதிவில் வழங்கிய அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆஹா யம்மி!! டிக்கி, ஃபிங்கர் சிப்ஸ் பாப்டி ஈர்க்கிறது. சாப்பிட்டு நாளாகிவிட்டது. சாப்பிடும் ஆவல்!

    கச்சா பதாம் ஃபேமஸ் ஆகியிருக்கு விஷயமும் சமீபத்தில் தெரிந்தது ஆனால் பாடல் கேட்காமல் விட்டிருந்தேன் உங்கள் பதிவின் மூலம் கேட்டுவிட்டேன். நல்லாருக்கு...ரசித்தேன், ஜி. பின் வரும், அவரைப் பற்றிய தகவல் வாகனவிபத்து இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டார்ட்டர் சிலவற்றை சுவைத்தேன். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் கீதா ஜி.

      கச்சா பதாம் பிரபலம் அடைந்து விட்டது தான். One Song Wonder ஆக வாய்ப்பு அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கச்சா - என்றாலும் கச்சாவாக இல்லாமல் நன்றாக ரைஃபின்ட் ஆகவே இருக்கு பாட்டும் ரீமிக்ஸும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இங்கும் சில இடங்களில் வால் ஆர்ட் வந்திருக்கிறது ஜி. ரயில் நிலையத்தில் ரொம்ப அழகாகச் செய்திருக்கிறார்கள்.

    மூன்றாவது படம் செம 3 டி எஃப்க்ட்!!

    எல்லாப்படங்களையும் ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வால் ஆர்ட் தில்லி தவிர வேறு சில நகரங்களிலும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். நல்ல விஷயம் தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ரசித்த செய்தியை நானும் ரசித்தேன் ஜி. புத்தகங்களைப் பராமரிக்கக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்த செய்தி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கவிதை நன்று. ரசனையான செய்தி.இறுதி படம் க்யூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை, செய்தி மற்றும் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அழகிரிசாமியின் கவிதை,
    பெரியவர் ராஜ நாராயணன் எழுத்தில்
    படித்திருக்கிறேன்.
    மிக சோகம். புதுமைப் பித்தனும் இதே போல
    எழுதி இருப்பார்.

    நல்ல தமிழ் எழுத்துப் பிரபலங்கள் சோபிக்காமல் போனது
    வருத்தம் தான். நன்றி வெங்கட்.

    சிற்றுண்டி மிக இனிமை.
    கச்சா பாதாம் பாடல் தாளத்தோடு இசை
    சிறப்பு. நான் இதுவரை கேட்டதில்லை மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகர்சாமி கவிதை, பதிவின் மற்ற பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பெண் குழந்தையும் , லைப்ரரியனின் கவலையும் மிக
    ரசிக்கவைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் குழந்தை, நூலகர் கவலை ரசித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....