அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
பணத்தை செலவு செய்யும் முன், அந்த பணத்தை எவ்வாறு வேறு வழியில் சம்பாதிப்பது என்பது பற்றி யோசித்து விட்டு செலவு செய் - வாரன் பஃபெட்.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் ரகு ராமன் (ஆர்.ஆர்) அவர்கள் எழுதிய “செவ்வாய் கிரகத்தில் ஷேர் ஆட்டோ” எனும் குறுநாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!
வகை: குறுநாவல்
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: 99
விலை: ரூபாய் 49/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
*******
ஜூன்மாத வாசிப்புப் போட்டியில் (சஹானா இணைய இதழ் நடத்திய) இருந்த பதினைந்து நூல்களில் எனது மூன்றாவது வாசிப்பு - ஆர்.ஆர். எனும் ரகுராமன் அவர்கள் எழுதிய ”செவ்வாய் கிரகத்தில் ஷேர் ஆட்டோ” குறுநாவல் தான். சந்திராயண் போன்ற விண்கலங்களை தான் வேற்று கிரகங்களுக்கு அனுப்ப வேண்டுமா என்ன? நம் ஷேர் ஆட்டோவையே விண்வெளிக்கு/செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினால்! இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது விஞ்ஞானி ஜாசன் என்பவருக்கு! அப்படி அவர் அனுப்பும் ஷேர் ஆட்டோவில் பயணிக்கப் போவது யார்? நம்ம பொதுஜனங்களில் சிலர் தான்!
கற்பனை செய்யும் போது எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம் என்கிற சுதந்திரம் கதாசிரியர்களுக்கு இருக்கிறது! அந்த கற்பனை கதாபாத்திரங்கள் தற்போது இருக்கும் மனிதர்களைப் போலவே இருக்கலாம்! அது மட்டுமா, கற்பனை கதாபாத்திரங்களுக்கு இருக்கும் மனிதர்களின் Identical பெயர் கூட - சற்றே மாற்றத்துடன் கூட வைத்துக் கொள்ளலாம் - நமிதா என்பதற்கு பதில் சுமிதா என்பது போல! எல்லாம் கதாசிரியருக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம்! அந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி நாவலில் வரும் பல பெயர்களை வைத்திருக்கிறார் நூலாசிரியர். மேலும் கதைக்கு முன்னரே இப்படி ஒரு சில வரிகள் சேர்த்து விட்டால் போதும்! “இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல! தற்செயலாக யாருடைய வாழ்க்கையுடனும் ஒத்துப் போனால் அதற்கு நாம் பொறுப்பல்ல!” என்ற வரிகள் தான் அவை!
செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் ஐந்து பேரை தேர்ந்தெடுக்க ரியாலிட்டி ஷோ வைக்கச் சொல்லும் கஜினி, பயணத்திற்கான ஸ்பான்ஸர்கள், பிரதமர், அதை நடத்தும் விருமாண்டி என அடித்து விளையாடி இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் மனிதர்களும் வித்தியாசமானவர்களே - ஒரு நடிகை, ஒரு அரசியல்வாதி, ஒரு முடிதிருத்துபவர், ஒரு நாட்டாமை, ஒரு முதிய பெண்மணி என தேர்ந்தெடுத்து, விஞ்ஞானியுடன் செவ்வாய் கிரஹத்திற்கு ஷேர் ஆட்டோவில் (அதன் பெயர் கூட Identical தான் - பொங்கல்யாண்) பயணிக்க தயாராகிறார்கள். ஷேர் ஆட்டோவைச் செலுத்தப்போவது விஞ்ஞானி கண்டுபிடித்த ரோபோ கிட்டி! இந்தச் சம்பவங்களை எல்லாம் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதிலும் நாட்டாமையும், அரசியல்வாதியும் செய்யும் சேட்டைகள் நல்ல நகைச்சுவை - கொஞ்சம் சினிமாத் தனமும்!
ஷேர் ஆட்டோவில் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றார்களா இல்லையா, வழியில் என்ன நடந்தது போன்றவற்றை குறுநாவலாக எழுதி, மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார். நல்லதொரு முயற்சி. அடுத்து வரும் நூல்களை மேலும் சிறப்பாக எழுத நூலாசிரியருக்கு வாழ்த்துகள்! நூலாசிரியரின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துகள். மின்னூலை வெளியிட்ட நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
குறுநாவலின் தலைப்பே அட்டகாசமாக இருக்கிறது இது நகைச்சுவை நாவல் என்பதில் சந்தேகமே இல்லை.
பதிலளிநீக்குதலைப்பு நல்ல தலைப்பு தான் கில்லர்ஜி. முடிந்தால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஈர்க்கும் தலைப்பு. பாராட்டுகள் அவருக்கு.
பதிலளிநீக்குதலைப்பும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நல்லதொரு விமரிசனத்திற்கு நன்றி. நல்ல நகைச்சுவையான சம்பவங்கள் நிறைந்திருக்கும் என்பது உங்கள் விமரிசனத்திலிருந்து புரிகிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபுத்தக அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அன்பின் வெங்கட் ,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
புத்தகத்தின் தலைப்பே சுவையாக இருக்கிறது.
எழுதும் அனைவருக்கும் அனைத்து நலங்களும்
கிடைக்க வேண்டும்.
புத்தகத்தின் தலைப்பும், பதிவு வழி பகிர்ந்த விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நன்றாக கலக்கி இருக்கிறார் என்று உங்களின் விமர்சனம் சொல்கிறது...
பதிலளிநீக்குபுத்தக அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
முன்னாள் ரிசர்வ் பாங்க் கவர்னர் எழுதியதா!! :)))
பதிலளிநீக்குஹாஹா... இல்லை கௌதமன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நல்லதொரு விமரிசனம்.. இனிமேல் புத்தகங்களில் மூழ்குவதற்கு யோசிக்க வேண்டும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
பதிவும் புத்தக அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வித்தியாசமான முயற்சி ...
பதிலளிநீக்குநல்ல நூல் அறிமுகம் ..
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்குதலைப்பே நகைச்சுவை என்று சொல்கிறது...கூடவே ஜாலி ரைட் என்று புத்தகத்தின் அட்டையில் இருப்பது தெளிவாக்குகிறது!
பதிலளிநீக்குஉங்கள் விம்ரசனமும் அதைச் சொல்கிறது.
மூன்று வருடம் இருக்குமா? இருக்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்வோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒரு விளம்பரம் வேறு கொடுத்திருந்தார்கள் டிக்கெட் ரேட் என்றும். அதை வைத்து ஒரு பதிவு கூட எழுதிய நினைவு. தலைப்பு என்ன வைத்தேன் என்று நினைவில்லை.
வாழ்த்துகள் நூலாசிரியருக்கு. அறிமுகத்திற்கும் நன்றி வெங்கட்ஜி.
கீதா
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீக்குவாரன் பஃஃபெட்டின் பல வாசகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்படி தொழில் துறையில் சாதித்தார் என்பது அவரது அனுபவம், இம்மாதிரியான வாசகங்களில் விளங்கிவிடும்.
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் நல்ல ஒரு உதாரணம். இது எல்லாருக்கும் அவசியமான ஒன்று. நம் சாதாரண வாழ்க்கைக்கும் பொருந்தும்
கீதா
சிறப்பான வாசகம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குவாரன் பஃபெட் பற்றி வாசிக்க நேர்ந்தால் உடன் எனக்கு நினைவு வருபவர் நம் Ratan Tata
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நீக்குகலகலப்பான புதினம் போலும்.
பதிலளிநீக்குவிரைவில் வாசிக்கிறேன் சார்.
நூல் அறிமுகத்திற்கு நன்றி.
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குஷேர் ஆட்டோவைச் செலுத்தப்போவது விஞ்ஞானி கண்டுபிடித்த ரோபோ கிட்டி! //
பதிலளிநீக்குஅருமை.
நூல் விமர்சனம் நன்றாக இருக்கிறது.
வாசகம் அருமை.
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தலையங்கமே சொல்கிறது இப்படி ஒரு ரசனையான சிந்தனை வந்து எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் .
பதிலளிநீக்குஸ்வாரஸ்யமான நூல் தான். முடிந்தால் படித்துப் பாருங்கள் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.