ஞாயிறு, 13 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - நிழற்பட உலா - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்; இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்.

 

******

 

கேதார் தால் பகுதியில் அலுவலக நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த நிழற்படங்களை சென்ற இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  அந்தப் பயணம் குறித்த பயணக் கட்டுரை தொடரும் இங்கே வெளி வந்து கொண்டிருக்கிறது. நிழற்படங்களின் வரிசையில் இந்த வாரமும் கண்ணுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் சில படங்கள் இந்த ஞாயிறிலும் தொடர்கிறது.  கேதார் தால் - நிழற்பட உலா - முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! வாருங்கள் படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.






















 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

26 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாய்...   ஜில்லென்று இருக்கின்றன.  ஆறேமுக்கால் வருடங்களுக்கு முன்னர் சென்று வந்த பயணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம். ஆறே முக்கால் வருடங்களுக்கு முன்னர் சென்று பயணம்தான். இன்னும் பல பயணங்கள் குறித்த படங்களும் தகவல்களும் அவரிடத்தில் உண்டு. முதலாக இந்தப் பயணம் குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் இங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு!
    ஆரம்ப வாசகம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி மனோம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. இன்றைய வாசகம் அருமை ஜி
    படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது கடைசி படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. படங்கள் கொள்ளை அழகு. 3D effect கிடைக்கிறது. ஏதாவது polariser filter உபயோகித்தாரா? அல்லது ஐபோன் காமெராவா? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. சோனி டிஜிட்டல் கேமரா கொண்டு எடுத்த படங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. //யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்; இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்.//
    அதற்கு மதிப்பீடு செய்யும் திறமையும் வேண்டுமே? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. படங்கள் பார்க்க கொள்ளை அழகு. இயற்கை அன்னையின் தரிசனம் கிடைத்தது! வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எண்ணம் மேலிடுகிறது! படங்களுக்கு நன்றி! இன்றைய வாசகமும் அருமை வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்கள் மனதினை கொள்ளை கொண்டது அறிந்து மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி நான், Stunned! பனி போர்த்திய மலைச்சிகரங்கள் மலை....என்ன சொல்ல! வார்த்தைகள் இல்லை வர்ணித்திட. மலைகளுக்கு நடுவில் நதி. எல்லாமே மனதிற்கும் கண்ணிற்கும் விருந்து. பார்த்து முடியவில்லை. இதுவரை போகும் வாய்ப்பு கிடைக்காமல் போனதே என்றும் கூடவே....மிக மிக மிக ரசித்தேன் ஜி. உங்கள் நண்பருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள். உங்களுக்கும் நன்றி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தையும் நீங்களும் ரசிக்க முடிந்தது அறிந்து எனக்கும் மகிழ்ச்சி கீதா ஜி. செல்லும் வாய்ப்பு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உள்ளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  8. படங்களை அத்தனையும் அழகு . நன்றி

    பதிலளிநீக்கு
  9. படங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் சூப்பர். அழகிய காட்சிகள நேரடியாக பார்த்ததுபோல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் படங்கள் வழி பார்த்த காட்சிகளும் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி.

      நீக்கு
  11. வாசகமும் , படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்துகொண்ட படங்களும் உங்களுக்கு பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  12. பார்க்கவே பரவசம் தரும் இடமும் ..படங்களும் ..மிக சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. பரவசமான காட்சிகள். அற்புதம். மெய்சிலிர்க்க வைக்கிறது. மிகவும் அழகான படங்கள். எடுத்த விதமும் அருமை. மிகவும் ரசித்துப் பார்த்தேன். போகும் வாய்ப்பு கிடைப்பது அரிது.

    மிக்க நன்றி வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. இதை எல்லாம் பார்க்கத்தான் முடியும். இப்போல்லாம் படிகளில் ஏறுவதே இமயச்சாரலில் உலாவுவது போல இருக்கே! :)))) வாசகம் உண்மையாக இருந்தாலும் நம்மால் அது இயலாத ஒன்றாக இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா.

      வாசகம் - எல்லா வாசகங்களையும் நம்மால் தொடர இயல்வதில்லைதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....