அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை ரசித்த சில வரிகளுடன் தொடங்கலாம் வாருங்கள்.
எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம், இனி உங்கள் மனைவியை காப்பாற்ற முடியாது என்றனர் மருத்துவர்கள்… நான் பசியில் இருக்கிறேன் என்று கூறுங்கள், என் அம்மா எழுந்து விடுவார் என்றான் ஏழு வயது மகன்.
******
பக்குவம் - 25 மார்ச் 2022:
கரம் பற்றிய நாள்முதலாய் இவள் என்னுடையவள் என்ற உரிமையை யாருக்கும் விட்டுத் தராத என்னவரின் வாழ்த்தே முதல் வாழ்த்தாக….!
நேற்று காலை எழுந்தது முதலாக பிறந்தநாள் பதிவாக மனதுக்குள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன்! வருடாவருடம் இப்படித்தான் எழுதறேன்..🙂 இந்த முறை வேற மாதிரி ஏதாவது எழுதுவோமே!!
ஒன்பது மணி இருக்கும்!!
Happy birthday டா!!
Happy birthday டா!
அழுத்தமாக இரண்டு தரம் வாழ்த்து சொன்னார்…:)
இப்பல்லாம் எனக்கு மறந்து போயிடுத்துன்னு நீங்க சொன்ன விஷயங்கள்ல இதுவும் சேந்துடுத்து!! என்றேன் புன்னகையுடன்..!
மறக்கலம்மா! என்றார்.
இல்ல, இந்த இருபது வருஷத்துல இப்படி ஒரு நாளாவது வருமான்னு நினைச்சேன்!
பக்கத்துல படுத்துண்டிருக்கிற குழந்தை கூட அப்புறம் தான் வாழ்த்து சொல்வா! நீங்க தான் எந்த ஊர்ல இருந்தாலும் முதல்ல வாழ்த்து சொல்வீங்க!
ம்ம்ம்..! மெட்ரோல வரும் போது…. கண்ணாடி போட்டுக்கல…! அதான்..!
எப்படியோ வாழ்த்து சொன்னேன்ல..! (மீசையில் மண் ஒட்டலை!)
பரவாயில்ல..! இதெல்லாம் பெரிய விஷயமாக நான் எடுத்துக்க மாட்டேன்..🙂 சொன்னா சந்தோஷம்! என்றேன்.
முகநூலோ, வாட்ஸப்போ ஏதோ ஒன்று என் பிறந்தநாளை அவருக்கு நினைவூட்டிய போது பதறியடித்துக் கொண்டு எனக்கு கால் செய்து இரண்டு தரம் வாழ்த்து சொன்னதை நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டேன்..🙂
ஒரே மாதிரியாக வாழ்க்கை நகர்வதிலும் சுவாரசியம் இல்லையே..🙂
சமாளிக்கவும், கலாய்க்கவும், நினைவு வைத்துக் கொள்ளவும் விஷயங்கள் இருந்தால் தானே சுவாரசியம்…:)
முகநூலிலும், வாட்ஸப்பிலும் வாழ்த்து மழையில் என்னை நனைய வைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துகளால் இன்றைய நாள் சிறப்பானது.
******
இம்முறை மகள் என் பிறந்தநாளுக்குத் தந்த பரிசு வித்தியாசமாக இருந்தது. பொதுவாக ஓவியம் வரைந்து, வாழ்த்து அட்டை தயார் செய்து அல்லது கவிதையாக எழுதி இப்படித்தான் தருவாள்!
இம்முறை அவளின் ப்ரியமான கணேஷாவுடன் என்னைப் பற்றியும் என் பிறந்தநாளைப் பற்றியும் உரையாடுவதாக Script ஆக எழுதி தந்திருந்தாள். அவ்வளவு அழகாக இருந்தது. கண்கள் நிறைந்தது!
இந்த அன்பிற்கு ஈடு இணையேது! அவளின் திறமைகள் மிளிர்ந்து ஆல் போல் பரவி செழிக்கணும்! அம்மாவாக பெருமையாக உணர்ந்த தருணம்! அவள் பென்சிலில் எழுதி இருந்தது இங்கே படங்களாக!
நேற்றைய எனது பிறந்த நாள் இனிதே கழிந்தது. முகநூல் வாழ்த்துகளும், மகளின் வாழ்த்தும் எனை மகிழ்ச்சியாக்கியது. இந்த மகிழ்ச்சி தொடரட்டும்.
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ரொம்ப சீரியல் பார்ப்பாங்களோ. ஸ்க்ரிப்ட் மெகா சீரியல் வசனம் போல் இருக்கிறது.
பதிலளிநீக்குJayakumar
எப்போதும் குதர்க்கமாகவே யோசனை செய்வீர்கள் போலும்! :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
What more do you need??? You are super vlessed. Happy birthday. God bless.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி Su.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குரோஷ்ணியின் வித்தியாசமான வாழ்த்துகள் உரையாடல் அருமை.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திருமதி வெங்கட். மகளின் அழகான வாழ்த்து உங்கள் பிறந்தநாளை சிறப்பாக்கி இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம். மகளின் வாழ்த்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குகையெழுத்து மிக அழகு. அதைவிட கற்பனைத்திறன் அழகு. பாராட்டுகள்
பதிலளிநீக்குமகளின் கையெழுத்து மற்றும் கற்பனைத் திறன் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குஅன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஎன்றென்றும் நலங்கொண்டு வாழ்க..
ரோஷ்ணியின் உரையாடல் அழகு.. அழகு..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா. ரோஷ்ணியின் உரையாடல் குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நீக்குஆதி ஸாரி. ஸாரிப்பா...பதிவை மிஸ் செய்துவிட்டேன் . தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! எல்லா நாளும் பிறந்தநாள் தானே ஆதி!!!!!!ஹிஹிஹி
பதிலளிநீக்குவாவ்!! என்ன தவம் செய்தனை! அன்பான குழந்தை! அழகா எக்ஸ்ப்ரஸ் பண்ணிருக்கா. காட் ப்ளெஸ்! உங்கள் எல்லோரையும். வெங்கட்ஜி வாழ்த்தை நினைத்து உரையாடல் செம சிரிப்பு!!! சிரித்துவிட்டேன்.
மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் ஆதி! காட் ப்ளெஸ்
கீதா
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கீதா ஜி. வாழ்த்தியமைக்கும் நன்றி.
நீக்குவாழ்த்துகள் முகநூலில் வாழ்த்தியதால் இங்கும் வாழ்த்தி விட்டேன் என்று நினைத்து விட்டேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஆதி. ரோஷ்ணியின் கையெழுத்து மிக அழகு அவள் சொன்ன விதம் மிக அருமை.
வெங்கட்டை பற்றி சொன்னதை ரசித்தேன்.
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கும், மகளை பாராட்டியமைக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குவாசகம் ஏற்கெனவே பல முறைகள் சுற்றிக் கொண்டிருந்தது. :)))) ரோஷ்ணியின் வாழ்த்துகளை முகநூலிலும் ஆதி போட்டிருக்கார். அங்கேயும் படிச்சேன். ரோஷ்ணியின் கையெழுத்து மிக அழகாக உள்ளது. வாழ்த்துகள் மீண்டும் ஆதிக்கும், ரோஷ்ணிக்கும்.
பதிலளிநீக்குவாசகம், பதிவு மற்றும் மகளின் கையெழுத்து குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.
நீக்கு