சனி, 12 மார்ச், 2022

காஃபி வித் கிட்டு - 144 - இருள் (சிறுகதை) - மூன்று விஷயங்கள் - கொய்யாவும் குரங்கும் - கரடி பொம்மை - மலையேற்றம் - டோக்ரி சாட் - சினிமா

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே; வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை - இருள் :



 

சொல்வனம் பக்கத்தில் சமீபத்தில் படித்து ரசித்த கதை - இருள்ஸிந்துஜா என்பவர் எழுதிய கதை - மனதைத் தொட்ட கதையாக இருந்தது. முதிர் கன்னிகளும் அவர்களின் நிலையும் சொல்லும் கதை. கடைசி வரிகள் மிகவும் சிறப்பு - கதையின் முடிவினை வாசகரின் எண்ணத்திற்கே விட்டுவிட்டதும் சிறப்பு.  படித்துப் பாருங்களேன். 

  

******

 

இந்த வாரத்தின் WhatsApp நிலைத்தகவல் - மூன்று விஷயங்கள்:

 

மூன்று விஷயங்கள் உங்களது நேரத்தை வீணடித்துவிடும் 



  • தவறிப்போனதைப் பற்றி கவலைப்படுவது - அது திரும்ப வராது.
  • பிறரோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது - அது பயனளிக்காது. 
  • எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த நினைவ்ப்பது - அது நடக்காது.

 

******

 

இந்த வாரத்தின் காணொளி - கொய்யா சாப்பிடும் செல்லம் :

 

எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதியில் நிறைய முன்னோர்கள் (குரங்குகள்) உண்டு.  அத்தனை கட்டிடங்களிலும் வெளிப்பக்கத்தில் நிறைய சுற்றிக் கொண்டு இருக்கும்.  அலுவலகத்தில் ஜன்னல்களுக்கு வெளியே இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு ஜன்னல்களைத் தட்டி உணவு கேட்பதுண்டு. அதுவும் ஒரு முறை கொடுத்துவிட்டால் தினம் தினம் வந்து விடும்.  எங்கள் பிரிவில் சிலர் ஒரு பெரிய குரங்கிற்கு தினமும் சப்பாத்தி, வேர்க்கடலை, பழங்கள் என ஏதோ ஒன்றை தருவதுண்டு.  சமீபத்தில் அந்த பெரிய குரங்கு வந்து ஜன்னலைத் தட்ட, கொய்யா ஒன்றை நறுக்கி ஒவ்வொன்றாகக் கொடுக்க, அழகாகச் சாப்பிட்டது அந்தக் குரங்கு. அதிலும் பின்னங்கால்களால் முகத்தை சொறிந்து கொள்வது பார்க்கும்போதே அழகு! அது சாப்பிடும்போது எடுத்த காணொளி - இந்த வாரத்தின் காணொளியாக - கீழே!



 

******

 

இந்த வாரத்தின் தகவல் - பொம்மை விற்பனை :


 

தலைநகரின் பஞ்ச்குயான் சாலை (Panchkuan Road) - அந்தப் பகுதியில் ஐந்து கிணறுகள் இருந்ததால் இந்தச் சாலைக்கு இப்படி ஒரு பெயர் - ஆனால் இப்போது ஐந்து கிணறுகளில் ஒன்று கூட இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்!  பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதில் நாம் கவனம் கொள்வதில்லை என்பதற்கு இது போன்று பல எடுத்துக்காட்டுகளை நாம் காண முடியும்.  சில வருடங்கள் முன்பு வரை இங்கே ஒரு பிரபல Furniture Market செயல்பட்டு வந்தது! அதுவும் சில வருடங்கள் முன்னர் மூடப்பட்டு, அருகில் இருக்கும் ஷாஹீத் பகத் சிங் சாலைக்கு மாற்றப் பட்டு விட்டதுசில நாட்கள் முன்னர் இங்கே பகிர்ந்து கொண்ட ஜெய் ஆஞ்சநேயா பதிவில் குறிப்பிட்ட ஆஞ்சநேயர் கோவிலும் இதே சாலையில் தான் இருக்கிறது.  இந்தச் சாலை இப்போது வேறு ஒரு விஷயத்திற்காக பிரபலமாக இருக்கிறது.  சாலையில் ஒரு புறம் ஹெல்மெட் விற்பனை நடக்கிறது என்றால், மற்றோரு பக்கம் பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மைகள் விற்பனை இன்னோரு பக்கம்!  ஆளுர பொம்மைகள் முதல் சிறிய பொம்மைகள் வரை அங்கே விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் நிறையவே இருக்கின்றன.  வாங்கப் போவதில்லை என்பதால் விலை கேட்கவில்லை. பெரிய கடைகளில் விற்பதை விட, நிச்சயம் குறைவாகவே இருக்கும் - தவிர இது போன்ற இடங்களில் பேரம் பேசியும் வாங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளலாம்! அந்தப் பகுதியில் எடுத்த ஒரு நிழற்படம் உங்கள் பார்வைக்கு!

 

******

 

இந்த வாரத்தின் இணையதள அறிமுகம் - மலையேற்றம் :

 

மலையேற்றம் செய்ய உங்களுக்குப் பிடிக்குமா? இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு இடத்திற்கு மலையேற்றம் செய்ய உங்களுக்கு விருப்பமா?  நீங்களாகச் செல்ல முடியாது என்பதால் மலையேற்றம் செய்யாமல் இருக்கிறீர்களா?  உங்களுக்குத் தேவையான பல தகவல்கள் கீழே உள்ள இரு தளங்களில் கிடைக்கும்.  இவர்கள் வழிநடத்தும் மலையேற்றங்கள் மிகவும் சிறப்பானவை என்பதை மலையேற்றத்தில் நிறைய அனுபவம் கொண்ட நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் சொன்ன கூடுதல் தகவல்.  நானும் இவர்கள் மூலம் ஒரு மலையேற்றப் பயணத்திற்குச் சென்று வரலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பார்க்கலாம் எப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என!

 

இந்தியா ஹைக்ஸ்

 

ட்ரெக் தி ஹிமாலயாஸ்

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த உணவு - டோக்ரி சாட் :


 

வடக்கே சாட் வகை உணவுகள் அதிகம் தான்.  விதம் விதமாகக் கிடைக்கும் இந்த வகை உணவுகளுக்கு அதிக அளவில் வரவேற்பு உண்டு.  இந்த வரிசையில் இந்த வாரம் பார்க்கப் போகும் டோக்ரி சாட் எனும் உணவும் ஒன்று.  டோக்ரி என்றால் கூடை என அர்த்தம்!  கூடை போன்ற வடிவத்தில் (அதையும் சாப்பிடலாம்!) சாட் வகை இங்கே சில உணவகங்களில் கிடைக்கிறது.  ஒரு முறை ஹல்திராமில் சுவைத்திருக்கிறேன்.  உங்களில் யாருக்கேனும் வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்களேன்.  டோக்ரி சாட் படம் இணையத்திலிருந்து. 

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை - சினிமா



*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

22 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் ரசிக்க வைத்தது.

    எனக்கென்னவோ சாட் வகைகள் உணவு ரசிப்பாயில்லை! ஜோக் இன்றளவும் பொருந்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஶ்ரீராம்.

      சாட் வகைகள் அனைவருக்கும் பிடித்தது அல்ல. வடக்கில் இதன் மீதான ஆர்வம் அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வாசகம் அருமை, காணொளி கண்டேன் ஜி
    இவ்வார அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  3. இன்றைய பதிவு வழக்கம் போல அருமையான கதம்பம்.


    ஆனந்த விகடனின் அட்டைப்பட நகைச்சுவை என்னிடமும் இருக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. பஞ்சு பொம்மைகள் வீதி நிறைய அதில் உள்ள பன்ரா கரடி போல பேரன் வைத்திருக்கிறார் மருமகன் சைனா சென்றபோது பேரனுக்காக வாங்கிவந்தது. எங்கள் வீட்டிலும் ஒரு சிறு கடையே வைக்கலாம் :)

    மலையேற்றம் ஆசை இருந்தாலும் இனிமேல் நினைக்கவே முடியாது.
    சுவையான உணவு அருமை.
    ஜோக்ஸ் ரசனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மைகள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. என் மகளும் சில பொம்மைகளை வைத்து இருக்கிறார்.

      மலையேற்றம் பிடித்ததாக இருந்தாலும் அதற்கான வயதில் சென்று வருவதே நல்லது மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ரசிக்கும்படியான பதிவு. ஆனந்த விகடன் ஜோக் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.

    டோக்ரி சாட் ஸ்ஸ்ஸ்ஸ் நாவில் நீர். ருசித்ததுண்டு. வீட்டிலும் முயற்சி செய்ததுண்டு.

    நகைச்சுவை எப்போதும் பொருந்தும் போல

    கதை வாசித்தேன் மிக நன்றாக எழுதியிருக்கிறார் சிந்துஜா.

    மலையேற்றம் தளம் பார்க்கிறேன் ஜி. மலையேற்றம் என்றதுமே நாங்கள் சென்ற பர்வதமலை ட்ரெக்கிங்க் தான் நினைவுக்கு வந்தது. பதிவும் போட்டிருக்கிறேன்.

    நிலைத்தகவல் அருமை.

    கொய்யா சாப்பிடும் செல்லத்தை யுட்யூ பிலும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அனைத்தும் அருமை. ஜோக் வெகு பொருத்தம் தற்போதும்.

    கதையை வாசிக்கிறேன்.

    வாசகம், வாட்சப் நிலைத்தகவல் நல்ல தத்துவங்கள்.

    அனைத்தும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நிலைத் தகவலும் , பழமொழியும் அருமை மா.
    விகடன் நகைச்சுவை இதுவரை பார்த்ததில்லை.

    சிந்துஜா என்ற பெயர் நினைவில். குமுதத்தில்
    படித்த நினைவும்.

    சிந்திக்க வைக்கும் கதை.
    மலையேற்றம் பெருமூச்சு விடத்தான் செய்கிறேன்,
    வெறும் மாடிப்படி ஏறி இறங்கவே இப்போது தெம்பு.

    டொக்ரி சாட் பார்க்க சுகம். இங்கே கார்ன் டார்ட்டில்லா இது
    போலச் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அனைத்தும் மிக அருமை.
    காணொளி நன்றாக இருக்கிறது.
    நகைச்சுவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. //ஒரு மலையேற்றப் பயணத்திற்குச் சென்று வரலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் எப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என!//
    அதி விரைவில் கிடைக்க வாழ்த்துகள் சிறு வயதில் சென்று வருவது தான் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வர வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் சென்று வருவேன் கோமதிம்மா. அடுத்த மாதம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் - பார்க்கலாம் எல்லாம் சரியாக அமைகிறதா என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. வாசகம் கடைப்பிடிப்பது கஷ்டமானது. :) இருள் கதையைப் படிக்கிறேன். டோக்ரி சாட் ஒரே முறை சாப்பிட்டோம். :) மலையேற்றங்களெல்லாம் இப்படிப் பார்த்துத் தீர்த்துக்க வேண்டிய ஆசையாகப் போய்விட்டது. கொய்யா சாப்பிடும் முன்னோர் மிகவும் பிரபலமாகி விட்டார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - கடைபிடிப்பது கடினம் தான் கீதாம்மா.

      டோக்ரி சாட் - நானும் உண்டிருக்கிறேன் சில முறை.

      முன்னோர்கள் :) மலையேற்றம் - அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை - கிடைத்தாலும் செல்ல உடல் நிலை ஒத்துழைப்பதில்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....