சனி, 16 ஏப்ரல், 2022

கதம்பம் - பின்னாடித்தெரு அலறல்கள்! காரடையான் நோன்பு - மனிதர்கள் - பக்கத்து வீட்டு பரிமாற்றங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

RESULTS OF ANGER ARE MORE PAINFUL THAN THE REASONS OF ANGER.  KIND WORDS COST NOTHING. 

 

******

 

பின்னாடித்தெரு அலறல்கள்! - 14 மார்ச் 2022

 

இன்றைய காலை..!

 

மாரியம்மா! மாரியம்மா!

 

மாசப்பிறப்பு ஸ்பெஷல் போலிருக்கு..🙂

 

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா!

 

ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வெச்சேன்!

 

மதுரை மரிக்கொழுந்து வாசம்..

 

வாசலிலே பூசணிப்பூ வெச்சிப்புட்டா வெச்சுப்புட்டா...

 

இனிய பாடல்களுக்குப் பிறகு..

 

அப்புறம் ஒரு மார்க்கமான பாடல்கள்..🙂

 

இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்!

 

******

 

காரடையான் நோன்பு - 11 மார்ச்:



 

உருகாத வெண்ணெயும் ஓரடையும்!

 

இம்முறை காரடையான் நோன்பு புகுந்த வீட்டில்..! 

 

மாமியார் ஊருக்குச் சென்றிருக்க கடந்த ஒரு வாரமாக வயதானவர்கள் இருவர் என் பொறுப்பில்..!

 

******

 

இன்றைய பொழுது..! - 15 மார்ச் 2022: 

 

மாமனாருடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்..! நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

 

அக்கால வாழ்க்கைமுறை! அப்போதைய சென்னை! உறவுகள்! கூட்டுக்குடும்ப வாழ்க்கை! அக்ரஹாரத்து வீடுகள்! கல்யாணம்! வக்கீல் குடும்பம் என்பதால் அப்போதைய வழக்குகள் எதற்காக இருக்கும்? என்று பலதரப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது..!

 

என்னுடைய கருத்தாக

 

அக்காலத்திலும் சரி! இப்போதும் சரி! வேறுபட்ட குணங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்! நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் விதத்தில் தான்! ஏனோ அக்கால மனிதர்களுக்கு கடந்த காலங்கள் தான் இனிக்கின்றன..🙂

 

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், வளர்ச்சியும் மட்டும் தான் மாறியிருக்கிறதே தவிர மனிதர்கள் மாறவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.

 

******

 

பக்கத்து வீட்டு பரிமாற்றங்கள் - 16 மார்ச் 2022: 



 

காலை நேரம் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தேன். 

 

மாமி(அடியேன் தான்!) இன்னிக்கு என்ன சமையல்??  பக்கத்து வீட்டு மாமியின் கேள்வி.

 

வத்தக்குழம்பு, ரசம், முட்டைக்கோஸ் கறி!

 

எனக்கு கொஞ்சமா குழம்பு மட்டும் குடுங்கோளேன்! 

 

கிண்ணத்தில் விட்டுக் குடுத்ததும் தேங்க்ஸ் மாமி என்றார்..🙂

 

மாலை ஒரு கிண்ணம் நிறைய போண்டாக்களுடன் வந்தார் மாமி!

 

என்ன ஸ்பெஷல் மாமி என்றேன்.

 

எங்காத்து மாமா தான் பண்ணார்! சாப்ட்டு பாருங்கோளேன்! என்றார்.

 

வாயில் போட்டுப் பார்த்தேன். மெத்தென்ற பக்குவத்தில் பிரமாதமாக இருந்தது. ரெசிபியைக் கேட்டேன் மாமியிடம்..!

 

மாமா தான் பண்ணார்! அவரிண்டயே கேளுங்கோளேன்!

 

மாமாவிடம் ரெசிபியைக் கேட்டேன். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மூணும் சம அளவுல எடுத்துண்டு ஊறவெச்சுக்கணும்! அதோட காரத்துக்கு தகுந்த மாதிரி வரமிளகாயும், உப்பு, பெருங்காயம் சேத்து தண்ணி விடாம அரைச்சுக்கணும்.

 

கொரகொரன்னு அரைச்சுக்கலாம். எனக்கு பல்லே இல்லாததால எனக்கு தகுந்த மாதிரி அரைச்சுண்டேன். கொத்தமல்லியும் பொடியா நறுக்கி சேத்து போண்டாவா போட்டு எடுக்க வேண்டியது தான்! என்றார்.

 

தேங்க்ஸ் மாமா. ரொம்ப நன்னா இருந்தது! என்றேன்.

 

ரெசிபிய கேட்டு தெரிஞ்சுண்டதால இன்னும் ரெண்டு போண்டா ஸ்பெஷலாக கிடைத்தது..🙂

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

26 கருத்துகள்:

  1. அதென்ன ஒரு மார்க்கமான பாடல்கள்? டமால் டுமீல் டான்ஸ் பாடல்கள்?


    மனிதர்கள் மனதில் மாறாதது அடிப்படை குணம். அவர்கள் தங்கள் இளமையிலேயே தங்கி விடுகிறார்கள்.


    முப்பருப்பு போண்டா! சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க்கமான பாடல்கள் புரியலையா :)

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பதிவுகளை உடனடியாக பகிர்ந்து விடும் நீங்கள் ஒரு மாதம் தாமதமாக காரடையான் நோன்பு பற்றி பகிர்ப்திருக்கிறீர்களே..? போண்டா பற்றி முகநூலில் வாசித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் அன்றே பகிர்ந்தது தான் பானும்மா. இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், முகநூலில் தொடராதவர்களுக்காகவும் வெளியிட்டு பதிவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. மனிதர்கள் மாறிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அதுவும் தற்கால வாழ்க்கை நிலையைப் பார்க்கும்போது பணம், வசதி, ஆடம்பரம் என்ற மாயை வாழ்க்கை பலரை அலைக்கழிப்பதைப் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கு வருகை தந்ததோடு, தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அக்காலத்திலும் சரி! இப்போதும் சரி! வேறுபட்ட குணங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்! நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் விதத்தில் தான்! ஏனோ அக்கால மனிதர்களுக்கு கடந்த காலங்கள் தான் இனிக்கின்றன.//

    ஹாஹாஹா அதே அதே ஆதி. நம் சின்ன வயதில் சில விஷயங்கள் சுவையாக இருந்திருக்கும்தான்

    ஆனால் இப்போதும் அதே தான் நீங்கள் சொல்லியிருப்பது போல் மனித மனம் மாறவில்லை. ஆனால் அப்போதும் கலாச்சார மாற்றங்கள் இருக்கத்தான் செய்தன. இங்கு வெங்கட்ஜி ஒரு பழைய பாடல் பகிர்ந்திருந்தார். அந்தப் பாட்டின் வரி வழக்கம் போல நினைவில் இல்லை. பார்ட்டி கல்சர், ரொட்டி என்று எல்லாம் ஏதோ அது பற்றி வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. நோன்பு அடை, பக்கத்துவீட்டு போண்டா அதுவும் மாமா செய்த போண்டா சூப்பர். இப்படிப் பக்கத்துவீட்டு பரிமாறல்கள் எல்லாம் இப்போதும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஊரில், திருவனந்தபுரத்தில் இருந்தவரை இருந்தது. அதன் பின் இதை ரொம்ப மிஸ் செய்கிறேன். இங்கு இப்போது அடுத்த வீட்டில் அவர்கள் தருவதுண்டு அவர்கள் வீட்டில் செய்வதை எப்போதேனும். நம் வீட்டிலிருந்தும் அங்கு செல்லும்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்து வீட்டு பரிமாறல்கள் மிகவும் குறைவு தான் இப்போது.

      தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. ஒரு மாதிரி பாடல்கள்? குத்துப்பாடல்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குத்துப் பாடல்கள் அல்ல! வேறு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. கதம்பம் அருமை.

    மனிதர்களின் வாழ்க்கை முறையும் மாறியிருக்கிறதே. அதனால் அந்தக்காலம் என்று சொல்லப்படுகிறதாக இருக்கலாம். எனக்குமே கூடச் சில சமயம் தோன்றுகிறது இப்போதைய தொழில்நுட்பம், வளர்ச்சி எல்லாம் எவ்வளவோ நமக்கு நன்மை பயக்கிறது என்றாலும் ஒரு சில விஷயங்கள் அந்தக்காலம் இனிமையாக இருந்தது போலத் தோன்றும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  12. கதம்பம் நன்றாக இருக்கிறது.போண்டா நன்றாக இருக்கிறது. தேங்காய் பல்பலாக கீறி போடுவார்கள் மேலும் ருசியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. கதம்பமும் போண்டாவும் சுவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....