ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF YOU ARE DEPRESSED, YOU ARE LIVING IN THE PAST; IF YOU ARE ANXIOUS, YOU ARE LIVING IN THE FUTURE; IF YOU ARE AT PEACE, YOU ARE LIVING IN THE PRESENT - LAO TZU.

 

******

 

அலுவலக நண்பர் திரு ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணங்களில் ஒன்றான கேதார் தால் குறித்து சில பதிவுகளும் அங்கே எடுத்த படங்கள் குறித்த சில பதிவுகளும் இங்கே வெளியிட்டு இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  அவர் கடந்த 15-20 வருடங்களில் மேற்கொண்ட மலையேற்றப் பயணங்கள் எண்ணற்றவை.  அவரும் அவருடைய நண்பர் திரு ராவத் அவர்களும் எல்லா வருடமும் ஒன்றிரண்டு மலையேற்றப் பயணங்களையாவது மேற்கொண்டு விடுகிறார்கள் - அந்த அளவு மலையேற்றத்தின் மீது அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறது.  அவர் சென்ற பயணங்களின் போது எடுத்த படங்கள் தொகுத்து வைத்திருந்தாலும், அவர் பயணம் குறித்து பெரும்பாலும் எழுதி சேமித்து வைத்துக் கொள்வதில்லை.  ஒன்றிரண்டு பயணங்கள் குறித்து எழுதி இருந்தாலும் அவற்றை வலைப்பூவில் எழுதி வெளியிடவில்லை - காணொளிகள் சில அவர் யூவில் வெளியிட்டு இருக்கிறார்.  அவரிடம் பேசும்போதெல்லாம் மலையேற்றம் குறித்தே பேசுவது வழக்கமாகி விட்டது. 

 

கேதார் தால் பயணத்தினைத் தொடர்ந்து அவரது பயணங்களில் ஒன்றான ருபின் பாஸ் என்ற மலையேற்றம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  கூடவே அப்பயணத்தில் எடுத்த படங்களும்! ருபின் பாஸ்  (கடல் மட்டத்திலிருந்து சுமார் 15300 அடி உயரம்) மலையேற்றம் உத்திராகண்ட் மாநிலத்தில் தொடங்கி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முடிவடையும் ஒரு மலையேற்றப் பயணம்.  குறைந்தது ஒரு வாரமாவது இந்த மலையேற்றத்திற்குத் தேவையாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.  எண்ணற்ற அருவிகள், சமவெளிப்பகுதிகள், வித்தியாசமான பூக்கள் என பார்க்கும் இடங்கள் எல்லாம் அழகு தான். ஒரே பயணத்தில் இரு வேறு விதமான மாநிலங்களில் பயணிப்பதால் வேறு வேறு மனிதர்களையும் பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி.  இந்தப் பயணத்தில் நண்பர் ப்ரேம் மற்றும் அவரது நண்பர் சாம்சங் மற்றும் சோனி டிஜிட்டல் கேமரா கொண்டு எடுத்த நிழற்படங்களை இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு ஞாயிறும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  நிழற்படங்களின் வரிசையில் முதலாவதாக சில படங்கள் உங்கள் பார்வைக்கு! பயணம் குறித்த தகவல்கள் தனிப் பதிவுகளாக/தொடராக வரும் வாரத்தில் வெளியாகும்!






















 

******

 

நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே... விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

24 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு, அழகு.  ரசித்தேன்.  இன்றைய வாசகத்தை எனக்குள் வாங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. மலைகளின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. இறுதிப் படம் மிகவும் அழகாக உள்ளது. மலைகளுக்கு நடுவில், வளைந்து வளைந்துச் செல்லும் நீரோடை படங்கள் இயற்கையின் வனப்பை பறைசாற்றி மனதில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

    ஆங்காங்கே உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டு, சிரமபரிகாரத்திற்கும் வழி செய்து கொண்டு மலை ஏறுவது சிரமமான செயலாக இருக்குமோவென நமக்குத் தோன்றுகிறது. ஆனால் தங்கள் நண்பர்களுக்கு அது மிகவும் விருப்பமான செயலாக இருப்பதால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    மேலும் அதுபற்றிய தகவலாக தங்களது பதிவுகள் வெளி வருவதற்கும் வாழ்த்துகள். விரைவில் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு மற்றும் படங்கள் குறித்த தங்கள் விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. lao tzu பொன்மொழி யதார்த்தம். உண்மை, 

     பிரேம் பிஸ்ட் போட்டோக்களில் ஒரு 3D தோற்றம் இருந்தது. ஆனால் இன்றைய  போட்டோக்களில் அந்த தோற்றம் காணவில்லை. எடுக்கப்பட்ட இடங்களும்  கோணங்களும் சரியே. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் படங்கள் குறித்த தங்களது கருத்துரை பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறார்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தொடர்ந்து நீங்கள் வந்து கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. படங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. இயற்கையின் எழில்..ஏற்றம்..

    படங்கள் பழகுடன் இனிய பதிவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. வாசகம் செம!!! உண்மை.

    படங்கள் அட்டகாசம். அதுவும் அந்த சாய்ந்து ஏணி போன்று இருக்கும் பாலம் வாவ்!! அதன் கீழே தண்ணீர்.

    இரு மாநிலத்தைக் கவர் செய்யும் மலையேற்றம்!!

    //ருபின் பாஸ் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 15300 அடி உயரம்) மலையேற்றம் உத்திராகண்ட் மாநிலத்தில் தொடங்கி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முடிவடையும் ஒரு மலையேற்றப் பயணம். //

    ரூபின் பாஸ் மலயேற்றம் பற்றி இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். ஆவ்! உயரம்!! நிறைய தூரம், பெரிய மலையேற்றம்தான். ஆவலுடன் காத்திருக்கிறேன். பதிவிற்கு. அவர்களின் ஆர்வமும் அதைச் செயல்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு ஜி.

    படங்கள் பதிவைக் குறித்துக் கொஞ்சம் சொல்கிறது. அழகுப் பிரதேசம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. ஷிம்லா பகுதி என்று ஒரு படம் அந்த பிரதான் மந்திரி போர்ட் சொல்கிறது. அப்ப அது பியாஸ் நதியின் கிளையோ?!! அந்தப் பாலம்...

    மற்றொரு பாலம் நதியை ஒட்டி பாறைகளை இணைத்து மரப்பலகை??? அதில் நண்பர் நிற்கிறார் என்று நினைக்கிறேன். அந்த இடம் ரொம்பப் பிடித்துப் போனது. மணாலியில் ஆற்றை, இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு குரங்கு போலக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கடப்பதைச் செய்த பகுதியில் கொஞ்சம் தள்ளி நடந்து சென்றால் ஆற்றின் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு பாறைகளை இணைக்கும் ஒரு சிறு மரப்பாலம் காட்டி, மகனுக்கும் எனக்கும் இருந்த ஆர்வத்தைப் பார்த்து அந்தப் பையன் எங்களை அழைத்துச் சென்றார். திரில்லிங்க் அனுபவம்.

    உங்கள் நண்பரி அனுபவங்கள் அறிய ஆவலுடன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரப் பாலங்களில் இந்த மாதிரி நதிகள் மீது பயணிப்பது ஒரு அலாதி அனுபவம் - மனதின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தாலும் இப்படி பயணம் செல்வது பிடித்தமான விஷயம் தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மீண்டும் நண்பரின் அடுத்த மலையேற்றப் பயணத் தொடர் தொடங்கப் போவது சிறப்பு. முன்னோட்டப் படங்கள் அழகு.

    பயணக் குறிப்புகள் அறிய ஆர்வத்துடன் தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவது அறிந்து மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அழகான படங்கள்.
    பயணத் தொடர் வரப்போவது மகிழ்ச்சி.
    தொடர்கிறேன்.

    //அவரிடம் பேசும்போதெல்லாம் மலையேற்றம் குறித்தே பேசுவது வழக்கமாகி விட்டது. //

    சிலருக்கு மலையேற்றம் மிகவும் பிடிக்கும். அவர்களின் பேச்சு அதை பற்றியே தான் இருக்கும். அனுபவங்கள் மிக அற்புதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மற்றும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகள் குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. சவாலான பயணங்களுக்கு நடுவே இயற்கையை ரசித்துப் படமாக்கி எங்களுக்கும் காணத் தருகிறீர்கள்.

    /எண்ணற்ற அருவிகள், சமவெளிப்பகுதிகள், வித்தியாசமான பூக்கள் என பார்க்கும் இடங்கள் எல்லாம் அழகு தான்./

    அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவாலான பயணங்கள் செய்வது நண்பருக்கு பிடித்த விஷயம். முடிந்த அளவு படம் எடுத்து வந்திருக்கிறார்கள் ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. Lao Tsu சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. அழகான அருவிகளையும், வித்தியாசமான வண்ண மலர்களையும் மனிதர்களையும், சாப்பாடையும் ரசிக்கக் கொடுத்து வைச்சிருக்காங்க. கடைசிப் படம் மிக அழகு எனில் மற்றவை மிக மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....