அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் வளமும் நலமும் தரட்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வும், மன நிம்மதியும் இறைவன் அருளட்டும். நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் வெற்றி பெறட்டும்.
இன்றைய சமையல்:
அறுசுவை மாங்காய் பச்சடி, கடலைப்பருப்பு போளி, சிறுதானிய பால் பாயசம், உளுந்து வடை, வெள்ளரிக்காய் தயிர்பச்சடி, பூசணிக்காய் சாம்பார், வெண்டைக்காய் கறி... இவற்றுடன் மகா நைவேத்யம்(சாதம்)..🙏 🙏
கொழக்கட்டை செய்தாலும் போளி செய்தாலும் அம்மா பூரணம் மிஞ்சியதா! மாவு மிஞ்சியதா! எனக் கேட்பார். இன்று ஒரு போளிக்கான பூரணம் தான் மிஞ்சியது!
இந்த வருடம் இனிப்பாகவே இருக்கட்டும்! நல்லதே நடக்கட்டும்!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
நன்றி. உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள வலையில் பிடிபட்டிருக்கிறேன். அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருளாயே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி இராய செல்லப்பா ஐயா.
நீக்குநேற்று நான் சொன்ன வாழ்த்தைக் காணோம். ஆனால் செல்லப்பா ஸார் கமெண்ட் மட்டும் ப்ராம்ப்ட்டாய் என் மெயிலுக்கு வந்து விட்டது.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்.
உங்கள் கருத்துரை வந்திருக்கிறது - ஸ்பாமில் இருந்தது! பின்னர் வெளியிட்டு விட்டேன் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.
புத்தாண்டு நைவேத்யங்கள் அருமை. பூஜை அறை, மலர் அலங்காரம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்கு