திங்கள், 4 ஏப்ரல், 2022

மகளுக்கு ஒரு கடிதம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய கேதார் தால் நிழற்பட உலா பதிவினை படிக்காதவர்கள்/பார்க்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE GREAT THING ABOUT GETTING OLDER IS THAT YOU DON’T LOSE ALL THE OTHER AGES YOU’VE BEEN.

 

******

 


 


 

அன்பு மகள் ரோஷ்ணிக்கு!

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா! 

 

ஒரு அம்மாவாக இந்த இனிய நாளில் உன்னோடு பகிர்ந்து கொள்வதற்கும் நீ என்றும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் என்னிடம் சில விஷயங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இப்போது தான் உன்னை பிரசவித்தது போல் உள்ளது! அதற்குள் வருடங்கள் அதிவேகமாக உருண்டோட 17 வயது சுட்டிப்பெண்ணாக இப்போது வளர்ந்து விட்டாய்! 

 

எங்கள் இனிய வாழ்வுக்கு மேலும் சுவைக்கூட்ட என் வயிற்றில் வளர்ந்தாய்! எந்த காலத்திலும் திருமணமான ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் கேள்விக்கணைகளிலிருந்து நீண்ட காலம் தவிக்க விடாமல் என்னைக் காப்பாற்ற விடையாக வந்தாய்!

 

என் அம்மாவும் உன்னை எப்படியாவது கண்டிடவே நிதமும் அந்த கணேசனை வலம் வந்தாள்! பின்பு அம்மாவே உன்னுருவாய் எனை வந்து சேர்ந்தாள்! அம்மாவைப் போலவே நீயும் அந்த கணேஷாவை பிரியமான தோழனாக்கிக் கொண்டாய்!

 

உன்னாலே எங்கள் வாழ்வுக்கும் ஓர் பிடிப்பு வந்தது! உன்னைச் சுற்றியே எங்கள் உலகம் உருவானது! உன் ஒவ்வொரு பருவத்திலும் நீ செய்த விஷமங்களையும் மிகவும் ரசித்தோம்! உன்னை வளர்த்ததோடு உன்னோடு நானும் வளர்ந்து என்னை மேம்படுத்திக் கொண்டேன்.

 

எதற்காகவும் அடம் பிடிக்காத குழந்தையாக வளர்ந்தாய். எங்கள் எளிமையான வாழ்க்கை முறைக்கு நீயும் எளிதாக பழகிக் கொண்டாய்! படிப்பிலும், ஓவியம் தீட்டவும், கவிதை எழுதவும், கைவேலைகள் செய்வதிலும் மிளிர்ந்து வருகிறாய்!

 

உன் வாழ்வை அழகாக்கவும், உன் பெயருக்கேற்றாற் போல் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திடவும் உன் அப்பாவும் தான் நம்மை விட்டு தொலைவில் இருந்து கொண்டு அனுதினமும் அயராது உழைக்கிறார்.

 

மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உன் திறமைகளோடும் நற்சிந்தனைகளோடும் நீ வளர்ந்து சமுதாயத்தில் சிறந்த பெண்மணியாக திகழணும்! உன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு என்றும் உதவியாக இருக்கணும்! யாரையும் மனதளவில் கூட காயப்படுத்தாத குணம் கொண்டவளாய் இருக்கணும்!

 

இனி வரும் காலங்கள் யாவும் வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் கிடைக்கப் பெற்று சிறந்து விளங்கிட எங்கள் மனமார்ந்த ஆசிகள்!

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!

 

என்றும் அன்புடன்,

 

அம்மாவும் அப்பாவும்!

 

22 கருத்துகள்:

  1. //எதற்காகவும் அடம் பிடிக்காத குழந்தையாக வளர்ந்தாய். எங்கள் எளிமையான வாழ்க்கை முறைக்கு நீயும் எளிதாக பழகிக் கொண்டாய்! படிப்பிலும், ஓவியம் தீட்டவும், கவிதை எழுதவும், கைவேலைகள் செய்வதிலும் மிளிர்ந்து வருகிறாய்!//

    சிறப்பு. 

    ஆம், பெயருக்கேற்றவாறு ஒளிமயமான எதிர்காலம் அமைய எங்கள் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள்/பிரார்த்தனைகள் ரோஷ்ணி. இன்று போல் என்றென்றும் எல்லாவற்றிலும் சிறந்தவளாய் வாழ்க்கையை நடத்தவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. ரோஷ்ணிக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. ஒரு அருமையான தந்தையாய் தாயாய் ஒரு பிரியமான மகளுக்கு நீங்களிருவரும் பூரிப்புடன் அடுக்கடுக்காய் வாழ்த்துக்களை அவள் பிறந்த நாளுக்கு மனம் திறந்து கொட்டும்போது அவற்றையும் விட உன்னதமான வாழ்த்துக்கள் ஏது? ரோஷினி நன்னலம், மகிழ்ச்சி என்ற பற்பல செல்வங்கள் குறைவின்றி பெற்று வாழ்க்கையில் என்றென்றும் உயர்ந்திருக்க இனிய வாழ்த்துக்களும் ஆசிகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோம்மா.

      நீக்கு
  5. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    கல்வியில் சிறந்திடவும் நல்ல எதிர்காலம் அமையவும் என் ப்ரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. மிக அருமையான பிறந்த நாள் வாழ்த்து ஆதி.
    ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
    ஆசிகள் என்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அழகான பதிவு..

    ரோஷ்ணிக்கு அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. ரோஷ்னிக்குட்டிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! மேன்மேலும் பல சிறப்புகள் பெற்றிடவும் வாழ்த்துகள். God Bless!!!

    மகளுக்கான அருமையான கடிதம், ஆதி. அடம் பிடிக்காத குழந்தை!! திறமைகள் கொண்ட குழந்தை. சூப்பர்!!

    பொக்கிஷம் இக்கடிதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள்/பிரார்த்தனைகள் ரோஷ்ணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வா்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  11. ரோஷ்ணிக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வா்த்துகளுக்கும் உளம் கனிந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....