வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ஆதங்கம் - அண்ணாமலை பல்கலைக் கழகம் - பகுதி இரண்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்றும் இன்றும் வெளியிட்ட பதிவுகளை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS A COLLECTION OF CHANGES. SO DON’T AVOID CHANGES. TAKE EVERY CHANGE AS A CHALLENGE. SOME GIVES SUCCESS AND SOME ACT AS A STEPPING STONE TO SUCCESS.

 

******

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு நண்பர் சுப்ரமணியன் அவர்களின் ஒரு பதிவினை (ஆதங்கம் - பகுதி ஒன்று) நேற்று மாலை வெளியிட்டிருந்தேன்.  இன்று அந்தப் பதிவின் இரண்டாம் (கடைசி) பாகம் உங்கள் பார்வைக்கு - வெங்கட் நாகராஜ். ஓவர் டு சுப்பு அண்ணாச்சி!

 

****** 

எனது பிரதான பதிவிற்கு வருவதற்கு முன் ஒரு குட்டி வரையறை! (பயம் வேண்டாம் நண்பர்களே! ஜவ்வா இழுக்க மாட்டேன்!)  1920-களில் தமிழை வளர்க்கவும் அந்நாளின் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டைக் கருதியும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் (.செ) அவர்கள் ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்க் கல்லூரி மற்றும் ஸ்ரீ மீனாக்ஷி சமஸ்க்ருதக் கல்லூரியை சிதம்பரத்தில் நிறுவினார்.  சரியாகச் சொல்வதென்றால் சிதம்பரத்தின் அருகில் ஒரு கிராமப் பகுதியில்! 1928-இல் ராஜா சர். .செ. அவர்கள், அன்னாளைய பிராந்திய அரசின் கோரிக்கையை ஏற்று (சுதந்திரத்திற்கு முன்) அவரிடமிருந்த நிலம், கட்டிடம் ஆகியவற்றை அண்ணாமலை பல்கலைக்கழகம் என்று நிறுவ ஒப்படைத்தார். அதன்படி 01.01.1929 அன்று உதயமானது அண்ணாமலை பல்கலைக்கழகம். நான் அதன் பொன்விழா ஆண்டு மாணவன்!

 

10 புலன்கள் (Faculty) 55  பிரிவுகள் (Departments) என பிரசித்தி பெற்ற தனியார் பல்கலைக்கழகமாக விளங்கியது. இது தான் முகாந்திரம். இப்படிப்பட்ட பல்கலைக்கழகம் தனியான பாடத்திட்டத்தை (Syllabus) வடிவமைத்தது. எனவே அன்னாளில் அண்ணாமலை பல்கலைக்கழக படிப்பென்றால் தனி மரியாதை உண்டு - இருந்தது - பின்னர் இறந்தது! இந்தப் பாசறையில் படித்த மாணவர்களில் சிலர் - இயக்குனர் சிகரம் திரு கே. பாலச்சந்தர், நாட்டியெ பெருந்தகை டாக்டர் பத்மா சுப்ரமணியம், கவிஞர் டி.கே. துரைசாமி, பௌதீக வல்லுனர் திரு ராமானுஜ விஜயராகவன், மலேசிய பெருந்தகை திரு வி.டி. சம்பந்தன், ஆட்சிமைப் பணியில் சிறந்த திரு பி.சி. அலெக்சாண்டர், பின்னாளில் கனடா பல்கலைக்கழகத்தின் அல்ஜீப்ரா வித்தகர் Ms. சுஜாதா இராமதுரை, புகழ்பெற்ற இந்திய காவல்துறையைச் சார்ந்த திரு டி.ஆர். கார்த்திகேயன், நாவலர் நெடுஞ்செழியன்.

 

இப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் நான் 1978-1981 வருடங்களில் பயின்றேன். 1980 முதலே பல்கலைக்கழகம் - கலகமானது. காரணம் உலகத்தில் எந்த நாட்டிலும் போற்றப்படாத ஜாதி என்னும் அராஜக அரசியல் தான். இவ்வாறு எழுதுவதால் எனை வெறியன் என்றோ அல்லது அறிவிலி என்றோ சாடாதீர்கள். இது எவ்வளவு மாணவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பதை நான் உட்பட என் சக மாணவர்கள் நன்கு அறிவோம்.  இந்த வன்மத்தை தோற்றுவித்தவர்களும் தூண்டியவர்களும் சுகபோகங்களை அனுபவிக்கும் வேளையில் அப்பாவி மாணவர்களும் அவர்களைப் பெற்றவர்களும் சமுதாயத்தில் படும் அல்லல்களையும் அவமானங்களையும் எழுத்தில் கொண்டு வருவது கடினம். 

 

இவ்வளவு விவரமாக எழுதியதன் நோக்கம், அவ்வளவு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் பல்வேறு முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்து இன்று பல்கலைக்கழக மானியக் குழு இங்கு சேர வேண்டாம் (Through Distance Education) என எச்சரிக்கும் அளவுக்கு அழிந்தொழிந்து போனதே என மிகவும் வேதனையாக உள்ளது. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்த நீண்ட பதிவு.  மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் அனைத்து பாடத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய கல்வி நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு விதி உண்டு. ஏதாவது ஒரு பருவத்தில், ஏதாவது ஒரு தேர்வில் தேறத் தவறினால் (தேர்ச்சி விழுக்காடு 40%) எவ்வளவு மதிப்பெண் மொத்தமாகப் பெற்றாலும் மூன்றாம் (III) வகுப்பில் தேர்ச்சி என்றே பட்டம் வழங்கப்படும். இந்த உயரிய கோக்கம் பின்னாளில் தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் இன வேறுபாடுகளையும் காண்பிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  அதற்கு நானும் என்னுடன் படித்த தோழரும் பலிகடா ஆனோம். இதற்கு மேல் இதை விவரிக்க என்னால் இயலாது! 

 

ஆகவே நண்பர்களே, ஒரு பொது நிகழ்வை உங்களுடன் பகிர விழைந்தேன். நண்பர் வெங்கட்டை நாடினேன்! அவரும் ஓகே சொல்ல, எழுதிவிட்டேன்.  பொறுமையுடன் படித்து கருத்துகளை ஆழமாகப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

 

மீண்டும் சந்திப்போம். நட்புடன்

 

சுப்ரமணியன்.

 

*****

 

பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

 1. புலன்கள் என்றால் Faculty என்று அர்த்தமாம்.

  இதே மாதிரி இருக்கை என்று இன்னொரு தமிழாக்கம்.

  குருட்டு வளைவு என்றால் Blind curve.

  வாழ்க தமிழ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குருட்டு வளைவு - :(

   பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 2. பரிதாபம்தான் அண்ணாமலை பல்கலைக்கழக நிலைமை.

  ஆரம்பித்தவர்களின் உயரிய நோக்கம், பிறகு வந்தவர்களின் வியாபார எண்ணத்தால் அழிவுபட்டது என்றே நினைக்கிறேன்.

  வெறும் ஆதங்கமாக எழுதிவிட்டீர்கள் (இப்படி இருந்தது இவ்வளவு மோசமாகப் போய்விட்டதே என்று), ரொம்பவே விளக்கம் கொடுக்காமல். அதனால் effectiveஆக இல்லை என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. நல்ல என்னத்துடன் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் நிலை கவலைக்குறியதே.
  இன்று, பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் புலம்பலும், அவர்களின் சந்தையின் நோக்கத்திற்கேற்ற திறமையான மாணவர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது இல்லை என்பதே.
  15 ஆண்டுகளுக்கு முன், "Internship" காக நான் இப்பல்களைக்கழக இலக்கிய மாணவர்களுக்கு கற்பிக்கச் சென்றபோதே, அதன் பாடத் திட்டத்தின் போதாமை கண்டு வருந்தினேன்.
  காலத்தின் தேவைக்கேற்ப, கல்விமுறையையும், பாடத்திட்டத்தையும், அறசியல் தலையீடு இன்றி செய்வது கட்டாயம் என்பதே அணைவரும் உணர வேண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்தின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.

   கீதா

   நீக்கு
  2. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. நண்பர் சுப்ரமணியன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. காரணம் உலகத்தில் எந்த நாட்டிலும் போற்றப்படாத ஜாதி என்னும் அராஜக அரசியல் தான். இவ்வாறு எழுதுவதால் எனை வெறியன் என்றோ அல்லது அறிவிலி என்றோ சாடாதீர்கள். இது எவ்வளவு மாணவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பதை நான் உட்பட என் சக மாணவர்கள் நன்கு அறிவோம். இந்த வன்மத்தை தோற்றுவித்தவர்களும் தூண்டியவர்களும் சுகபோகங்களை அனுபவிக்கும் வேளையில் அப்பாவி மாணவர்களும் அவர்களைப் பெற்றவர்களும் சமுதாயத்தில் படும் அல்லல்களையும் அவமானங்களையும் எழுத்தில் கொண்டு வருவது கடினம். //

  ப்ளஸ் 1

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 7. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டாம் என்று சொல்லியிருக்காங்க.

  பொதுவாகவே எந்தப் பல்கலைக்கழகமோ அல்லதுகல்லூரிகளோ நல்ல திறனுள்ள மாணவர்களை உருவாக்குவதில்லை. Competitive ஆக இல்லை. இது பற்றி நான் சொல்லத் தொடங்கினால் பதிவு போல ஆகிவிடும். ஒரு சில மாணவர்கள் சுய ஆர்வத்தால் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேறி வருகிறார்களே அல்லாமல் கல்வித்துறை, கம்பெனிகள் பல குறைப்பட்டுக் கொள்வது அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் மாணவர்களை உருவாக்குவது இல்லை அதாவது பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு Competitive ஆக இல்லை என்பதே. இதைப் பற்றி எழுதினால் கருத்து பதிவாகிவிடும். நான் பதிவாக எழுத விரும்பாததால் எழுதவும் இல்லை. ஆனால் இந்த ஆதங்கம் நிறைய உண்டு.

  கல்வி வியாபாரம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....