அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
கடவுள் வரங்களைத் தருவதில்லை - வாய்ப்புகள் மட்டுமே தருவார்; அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.
******
மலையேற்றம் எளிதான விஷயமல்ல என்பதோடு, மலையேற்றத்திற்கான உபகரணங்களும் உங்களிடம் இருந்தால் நல்லது. அப்படியான உபகரணங்கள் நீங்களாகவே மலையேற்றப் பயணங்கள் மேற்கொள்ளும் போது தேவையாக இருக்கும். சில நிறுவனங்கள் மூலம் மலையேற்றப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் போது அவர்களே சில உபகரணங்களைத் தருவதுண்டு - குறிப்பாக ஸ்லீப்பிங் பேக் எனப்படும் படுக்கை, தங்குவதற்கான கூடாரங்கள் போன்றவை. அதைத் தவிர உங்கள் காலணி (ஷு)க்கு மேலாக பனிப் பிரதேசங்களில் நடக்கும்போது தேவையான கூரான பற்கள் கொண்ட ஒரு உபகரணம் (அதனை உங்கள் காலணி மீதே அணிந்து கொள்ளலாம்) தேவை. கூடுதலாக ஒரு வாக்கிங் ஸ்டிக் அவசியம். இந்த மாதிரி உபகரணங்கள் இணைய வழி வாங்கலாம் அல்லது இதற்கெனவே இருக்கும் கடைகளிலும் வாங்கலாம். Decathlon, Stikage போன்ற நிறுவனங்களின் கடைடளோ அல்லது அவர்களது இணைய தளங்களிலோ நீங்கள் இவற்றை வாங்க முடியும். குறைந்த பட்சமாக இந்த உபகரணங்களாவது உங்களிடம் இருப்பது அவசியம். நிறுவங்கள் மூலம் மலையேற்றப் பயணம் ஏற்பாடு செய்யும் போது என்னென்ன உபகரணங்களை அவர்கள் தருவார்கள் என்று விசாரித்துக் கொள்வது நல்லது.
சரி இந்த வாரம் ருபின் பாஸ் பயணத்தில் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் எடுத்த மேலும் சில படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
வழிகாட்டி சும்மா இருக்கையில் இந்தப் பக்கம் எல்லாம் வந்து எதெது எங்கெங்கே இருக்கிறது, எந்த வழி நல்லவஷி, குறுக்கு வழி இருக்கிறதா என்று பார்த்து வைத்துக் கொள்வாரோ!
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
இது போன்ற வழிகாட்டிகள் பல குழுக்களுடன் சென்று வருவது வழக்கம் ஸ்ரீராம். அதனால் பல மலையேற்றப் பாதைகள் அவர்களுக்கு அத்துப்படி. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிக அருமையான பசுமையான படங்கள்.
பதிலளிநீக்குசிறப்புப் பயிற்சி பெற்று நல்ல உடல்
வளத்தையும் பெற்றவர்களே இந்த மலை ஏற்றம் செய்ய முடியும்.
இத்தனை சிரமங்களையும்
ஏற்று மலையேறு பவர்களுக்கு வாழ்த்துகள்.
பயிற்சி என்று இல்லாமல் நடைப் பயிற்சி, உடல் எடையில் கவனம், சரியான உணவு என விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும் வல்லிம்மா.
நீக்குபதிவு மற்றும் படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
படங்கள் வழக்கம்போல் மிகவும் அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை.
படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பு ...
பதிலளிநீக்குபசுமையான வழித்தடம் , நீரில் குதிக்கும் ஒருவர், frameன் நடுவே மேயும் குதிரை ...வாவ்
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம்.
நீக்குவாசகம் அருமை. உண்மைய்தான்.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகு. மலைப்பகுதிகளின் இடையே நடப்பது ஏறுவது என்பது அது ஒரு தனி சுகானுபவம். மலையேற்றத்திற்கான பொருட்கள் ஆம் அறிந்ததுண்டு. ஸ்லீப்பிங்க் பேக் இருந்தது. கூடாரம் தவிர சில...
கீதா
வாசகம் மற்றும் படங்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.
நீக்குஆற்றில் ஒருவர் குதிப்பதும், நீந்துவதற்குக் குதிப்பதும் அழகு. ஆனால் அத்தனை ஆழம் இருந்ததா? பார்த்தால் தெரியவில்லையே. ஆழம் இல்லை என்றால் அடிபடுமே! சிறிய வயதில் குதித்துப் பழக்கமுண்டே!` அதனால் தோன்றியது.
பதிலளிநீக்குகுதிரைகள் மேய்வது எல்லாமே அழகான படங்கள்.
வெள்ளிப் பனி உருகி வருகிறதோ....அந்தப் படம் செம.
வழிகாட்டி சின்னப் பையனாக இருக்கிறார் இப்பகுதி எல்ல்லாம் நல்ல பழக்கமாக இருக்கும் அங்கேயே பிறந்து வளர்ந்தால்..
ரொம்ப ரசித்துப்பார்த்தேன் அனைத்துப் படங்களையும்....(கூடவே ஏக்கமும்!!!!!)
கீதா
ஆற்றில் குதிக்கும் அளவு நீர் இருந்ததால் தான் குதித்திருப்பார் கீதா ஜி. அங்கே சென்று பழக்கமுடையவர் தான் என்பதால் தெரிந்தே இருக்கும்.
நீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. எனக்கும் சென்று வர எண்ணம் உண்டு - பார்க்கலாம் எப்போது பயணம் அமைகிறது என!
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. நேரில் பார்ப்பது போல் இருக்கின்றது.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.
அருமையான படங்கள்...
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
அருமையான படங்களை அளித்துள்ளார் தங்கள் நண்பர். மலைகளுக்கு நடுவே ஆங்காக்கே இறங்கி வரும் அருவிகள் நேரில் பார்க்க இன்னும் அழகாக இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
மிகவும் அழகான இடங்கள். படங்களும் நன்று.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு