தொகுப்புகள்

திங்கள், 13 ஜூன், 2022

வாசிப்பனுபவம் - வாழ்வளித்த வள்ளல் - கனவு காதலி ருத்திதா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம் - பிரான்சிஸ் பேக்கன்.  

 

******

 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூலை மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் கனவு காதலி ருத்திதா அவர்கள் எழுதிய “வாழ்வளித்த வள்ளல்” எனும் நாவல்/சுய சரிதை. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்/சுய சரிதை

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 74

விலை: ரூபாய் 200/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

வாழ்வளித்த வள்ளல் (Tamil Edition) eBook : Ruthitha , Kanavu Kadhali : Amazon.in: Kindle Store

 

******* 



 

சஹானா இணைய இதழ் நடத்தும் ஜூலை மாத வாசிப்புப் போட்டியில் இருக்கும் பதினான்கு நூல்களில் கனவு காதலி ருத்திதா அவர்கள் எழுதிய ”வாழ்வளித்த வள்ளல்” எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. காதல், குடும்பம், வாழ்க்கையில் தாய் தந்தையின் பங்களிப்பு என சில விஷயங்களைச் சொல்லும் மின்னூல் இது.  மேலும் நூல் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

கனவு காதலி ருத்திதா என்ற புனைப் பெயரில் எழுதுகிற நூலாசிரியர் இந்த நூலை தனது சுயசரிதை என்றும் கூறுகிறார்.  முதல் பத்து அத்தியாயங்கள் வரை பல காதல்களை - காதலர்களை - வேதா, ரசாக், லைபின் என வரிசையாகச் சொல்லிக் கொண்டு வரும்போது நமக்கே “என்னடா இது” என்று  தோன்றிவிடுகிறது.  பதினொன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் விளக்கமாக இந்த காதல், வேதாவின் மீதான தனது காதல், வேதா எப்படி வாழ்வளித்த வள்ளல் ஆக இருக்கிறார் என்று விளக்கமாகச் சொல்கிறார்.  

 

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படட இந்த காதல் எப்படியானது? அது அனைவருக்கும் தேவையானது என்பதை சிறப்பாகச் சொல்லிய இருக்கிறார் நூலாசிரியர்.  முதலில் படிக்கும்போது ஒரு வித அதிர்சசி இருந்தாலும், சொல்ல வரும் விஷயத்தினை சிறப்பாகச் சொல்லி  முடித்திருக்கிறார் என்பதனை ஒப்புக் கொள்ள வேண்டும்.  வித்தியாசமாக சிந்தித்து, கதையை, காதலை நகர்த்தி இருக்கும் நூலாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.  

 

மேலும் மேலும் கதைகள் எழுதி, மின்னூலாக வெளியிட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.  

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா.

      நீக்கு
  5. நல்லதொரு நூல் அறிமுகம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. விலை சற்றே அதிகம் தான் இராய செல்லப்பா ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. 'வித்தியாசமாக சிந்தித்து கதையை நகர்த்தும்.....' நூல் அறிமுகம் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....