அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
கைத்தொழில் ஒன்றை கற்று
வைத்துக்கொள்வது நல்லது - வறுமைக் காலங்களில் நிச்சயம் அது கைகொடுத்து உதவும்.
******
யாரிவள் - பகுதி ஒன்று
இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே!
யாரிவள்! பகுதி
முப்பத்தி ஏழு - கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கைத்தொழிலை கற்றுக்
கொள்வது அல்லது தெரிந்து கொள்வது வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம்
உதவிகரமாக இருக்கும். சில நேரங்களில் அதுவே நம்மை முன்னேற்றவும்,
அடையாளப்படுத்தவும் கூட உதவும்.
சுட்டிப்பெண்ணின்
பள்ளிநாட்களில் வாரம் ஒருநாளாவது ஏதாவது ஒரு கைத்தொழிலை பள்ளியில் கற்றுக் கொண்டு
வந்தாள். க்ரோஷா பின்னுதல், பட்டை ஒயரில் கிளி, மீன், மல்லிகை மொட்டு போன்றவற்றை
செய்து வாசல் தோரணமாக உருவாக்குதல், அந்த பட்டை ஒயரையே இரண்டாக மூன்றாக கிழித்து
மாலை போல் தயாரித்தல் போன்றவையும் கற்றுத் தரப்பட்டது.
ஓவிய ஆசிரியர் மூலம்
ஓவியம் வரையவும் கற்றுக் கொண்டாள். தூர்தர்ஷனில் 'ரானு' என்பவரும் ஓவியம் வரையக்
கற்றுத் தந்தார். ஒருமுறை குரங்கு ஒன்று மரக்கிளையில் அமர்ந்திருந்ததைப் போன்ற
ஓவியத்தை அவர் சொல்லித் தரவே அவளுக்கு ஆர்வம் மேலிட அப்போதே அவள் பேப்பரில் அதை
வரைந்து பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தாள்.
புத்தகங்களை பைண்டிங்
செய்வது பற்றியும் அப்போது அவளுக்கு வகுப்பு இருந்தது. ஆசிரியர் சொல்லித் தந்ததை
வைத்து ஆளுக்கொரு நோட்டு பைண்டிங் செய்து காண்பித்தார்கள். காகிதங்களை வைத்து
அலங்காரத் தோரணம், Origami முறையில் சிலவற்றையும் கற்றுக் கொள்ள முடிந்தது.
தஞ்சாவூரிலிருந்து
வந்து புதிதாக சேர்ந்த இசை ஆசிரியர் மூலம் காலை பிரார்த்தனையில் பாட நிறைய தமிழ்
கீர்த்தனைகள் கற்று தரப்பட்டது. அவரிடமே மாலை பள்ளி முடிந்ததும் சில மாதங்கள்
பாட்டும் கற்றுக் கொண்டாள். அந்த ஆசிரியருக்கு திருமணமாகி வேறு ஊருக்குச் சென்று
விட வகுப்பும் நின்று போனது!
திருப்பூரில்
தயாராகும் டீ சர்ட் போன்றவற்றில் சமிக்கி வைத்து தைத்து டிசைன் செய்து தரவும் சிலநேரம்
வாய்ப்பு கிடைக்கும். ஒரு டீ சர்ட்டுக்கு தைத்து தந்தால் இவ்வளவு என்று
சொல்லப்படும். அப்போது அம்மாவும் இவளுமாகக் கூட செய்து தந்திருக்கிறார்கள்.
எதிர்வீட்டு
அத்தையிடமும் வயர்க்கூடை பின்னவும் கற்றுக் கொண்டு பின்னி காண்பித்திருக்கிறாள்.
தவறுகளை அத்தை சரி செய்து சொல்லித் தருவார். கூடை பின்னுவது நல்லதொரு
பொழுதுபோக்காக இருக்கும். கைகளுக்கும் நல்ல பயிற்சி!
நேர்மையான முறையில்
உழைத்து சம்பாதிக்கும் எத்தொழிலும் இழிவானதில்லை என்பதை தன் வாழ்வில் தெரிந்து
கொண்டாள். கற்றுக் கொண்ட விஷயங்கள் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக
இருக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
இன்னும் என்னவெல்லாம்
செய்தாள் இந்த சுட்டிப்பெண்! தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இன்றைய வாசகத்தில் அந்த அனாவசியமான 'கு' வை எடுக்க வேண்டும். கூகுள் டைப்பிங்கில் எனக்கும் இது அடிக்கடி நேரும்.
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை கற்றுக் கொண்டிருந்திருக்கிறீர்கள்... உங்கள் பெற்றோருக்கும் உங்கள் ஆர்வத்துக்கும் பாராட்டுகள்.
வாசகம் குறித்த கருத்துரை - தவறை திருத்தி விட்டேன் - சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம். பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.
நீக்குசிறு வயதிலேயே மிகவும் பொறுப்பாக இருந்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பதிவு குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமை... கற்றுக் கொண்டது என்றும் கை கொடுக்கும்...
பதிலளிநீக்குகற்றுக் கொண்டது என்றும் கை கொடுக்கும் - உண்மை தான் தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குநேர்மையான முறையில் உழைத்து சம்பாதிக்கும் எத்தொழிலும் இழிவானதில்லை என்பதை தன் வாழ்வில் தெரிந்து கொண்டாள்.//
அருமை. பொறுமை, அம்மாவுக்கும் உதவும் பண்பும் இருந்து இருக்கிறது.
உங்கள் கலை ஆர்வம் மகளுக்கும் வந்து இருக்கிறது.
தங்களது வருகைக்கும் பதிவு குறித்த தங்களது கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குசிறுவயதில் பலவற்றையும் கற்றுள்ளீர்கள். பொழுதுபோக்கும் கூட.
பதிலளிநீக்குநானும் சிறுவயதில் எனது அக்காவிடம் இருந்து பலவும் கற்றிருக்கிறேன்.
உங்கள் அனுபவங்களைக் குறித்து இங்கே பகிர்ந்தமைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குகற்றுக்கொண்டது அவசியம் கைகொடுக்கும்
பதிலளிநீக்குகற்றுக் கொண்டது அவசியம் கைகொடுக்கும் - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா. நானும் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நன்றி.
நீக்குசிறுவயதில் குழந்தைகளுக்குப் பல கலைகளையும் கற்பிக்கவேண்டும் என்ற பேரார்வம் பெற்றோர்களிடம் இருந்தால் மிகவும் பலனளிக்கும்!
பதிலளிநீக்குகற்பிக்க வேண்டும் எனும் ஆர்வம் பெற்றோர்களிடம் இருக்க வேண்டும் - கற்க வேண்டும் எனும் ஆர்வம் குழந்தைகளிடம் இருக்க வேண்டியதும் அவசியம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராய செல்லப்பா ஐயா.
நீக்குமுந்தைய பகுதி - உங்கள் அம்மா அண்ணா மன்னி பாசம், பொங்கல் சீர் எல்லாம் வாசித்து நெகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஆமாம் ஆதி கைத்தொழில் தெரிந்து வைத்திருப்பது மிக மிக நல்லது. நீங்களும் கற்று அம்மாவும் நீங்களும் அதைச் செய்தது எல்லாவற்றிற்கும் பாராட்டுகள்.
பள்ளியில் இப்படி வயர்க்கூடை பின்னக் கற்றுகொண்டு நானும் கூடை பின்னி கொடுத்ததுண்டு. க்ரோஷியோ சின்ன ஹேன்ட் பேக்குகள் போட்டுக் கொடுத்ததுண்டு. வயரில் மீன் செய்து அது பல பல அலங்காரங்கள் செய்வது எல்லாம் அப்போது இன்னும் ஹூக் தைப்பது, பட்டன் தைப்பது போன்று பல...
நல்ல அனுபவங்கள் ஆதி.
கீதா