ஞாயிறு, 29 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி ஒன்று – இனிமையான நாட்கள்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எலுமிச்சம் பழ ஊறுகாய் பழகப் பழக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும். வாழ்க்கையின் பழைய நினைவுகளும் அதை போலவே சுவை நிரம்பியவை.  


 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

பகுதி முப்பது இங்கே! 

 

யாரிவள்! பகுதி முப்பத்தி ஒன்று - இனிமையான நாட்கள்




சுட்டிப்பெண் சிவகங்கையில் தன் கோடை விடுமுறையை மிகவும் இனிமையாக செலவிடுவாள். ஒரு வேளை உணவு மாமா வீட்டில் என்றால் அடுத்த வேளை அத்தை வீட்டில்! அடுத்தடுத்த தெரு தான் என்பதால் மாற்றி மாற்றி இருப்பார்கள். வெயில் சுள்ளென்று அடிக்கும் வேளைகளில் ஜில்லென்று ரோஸ்மில்க்கும், ஃப்ரூட் மிக்ஸும், நுங்கும், மாலை வேளைகளில் வறுபயறு, சுண்டல், பஜ்ஜி, பக்கோடா என வரிசையாக சாப்பிடக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

பாட்டி கீரையை மசித்து அதில் வெறும் தாளிப்பு செய்து பரிமாறினால் கூட அத்தனை ருசியானதாக இருக்கும். பாட்டியின் பக்குவத்தில் சுவைத்த தேன்நெல்லியும், புளிப்பொங்கலும், பால் சேர்த்து பிசைந்து தந்த பொரியரிசி மாவும், புட்டும் என வயிற்றுக்கு கெடுதல் செய்யாத அந்த பதார்த்தங்களும் , பாட்டியின் பரிவும், வாசமும் இவளுக்குள் பொதிந்து போன பசுமையான தருணங்களாக இருந்தது!

 

ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை நீட்டிக் கொண்டு பாட்டி அரிசியை திருகையில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்து அதன் பக்குவத்திற்கு தகுந்தாற் போல் பிரித்து வைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் இவளுக்கு பொழுதுபோக்கு தான். கூடவே பாட்டியிடமிருந்து கேட்கும் பழங்கதைகளும்!

 

அவளுடைய மாமா செய்யும் வேலைகள் அத்தனையுமே பாந்தமாகவும், பக்குவமாகவும் இருக்கும். ஒருமுறை இப்படிச் சென்றிருந்த போது இவளுக்கும் இவளுடைய மாமா பெண்ணிற்கும் வாழைமடலில் பூ தைத்து அலங்காரம் செய்து விட்டார் மாமா. அவ்வளவு அழகாக இருந்தது! அப்போது விடுமுறைக்கு சென்றதால் இவள் பாவாடையெல்லாம் எடுத்துச் செல்ல வில்லை! ஆனாலும் ஒரு  புடவையில் மடிப்புகள் எல்லாம் வைத்து பாவாடை போல் கட்டி விடப்பட்டு ஸ்டூடியோவுக்குச் சென்று புகைப்படமும் எடுத்துக் கொண்டாள்.

 

அத்தை வீடு ரேழி, கூடம், முற்றம், கிணற்றடி, கொல்லைப்புறம் என்று நெடுக போய்க்கொண்டே இருக்கும் அமைப்புக் கொண்டது. கொல்லைப்புறத்தில் தென்னை மரங்களும், நந்தியாவட்டை, செம்பருத்தி போன்றவையும் இருக்கும். இவளுக்கு அங்கே பூப்பறித்து பூஜைக்கு கொண்டு வருவது ஒரு பொழுதுபோக்கு!

 

ஒரு மாலை நேரம் இவள் இப்படி பூப்பறித்துக் கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் இவளை உள்ளே வைத்து இவளது அத்தை மகன் தோட்டத்து கதவை பூட்டி சாவியையும் ஓட்டின் மேல் வீசி விட்டு ஓடி விட்டான். இவள் மிகவும் பயந்து போய் அழுது கொண்டே கதவை தட்டிக் கொண்டிருக்கவும் பின்பு எல்லோரும் வந்து ஓட்டின் மீதிருந்து சாவியை எடுத்து திறந்த பின் தான் வெளியில் வந்தாள்…:)

 

நாற்காலியில் உட்காரும் போது அதை இழுத்து விடுவது, எதற்காகவாவது சீண்டிக் கொண்டிருப்பது போன்று இதையும் அவன் விளையாட்டாக செய்யப் போய் அவள் மனதில் அது ஆழமாக பதிந்து போனது. அவளுக்கு பயத்தில் ஜுரமும் வந்தது!

 

இப்படியாக பெரிய வகுப்புகளுக்கு செல்லும் வரை தம்பியும், இவளும் கோடை விடுமுறை என்றால் சிவகங்கைக்கு கிளம்பி விடுவார்கள். அன்பும், பாசமும் தோய்ந்த உறவுகளின் இருப்பில் இருந்த நாட்களும், அங்கு கிடைத்த அனுபவங்களும், பார்த்த காட்சிகளும் என நினைவில் வைத்துக் கொள்ள ஓராயிரம் விஷயங்கள் இருந்தன இவளுக்கு! 

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தப் பெண்!!! தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அருமையான இன்மையான நினைவுகள் ஆதி. அன்றைய காலத்து அந்த உறவுகளும் இனிமையும் தனிதான்.

    கிட்டத்தட்ட இதே தான் எனது சிறு பிராயத்திலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. இன்றைய வாசகம் பதிவுக்கு பொருத்தம் . பழைய நினைவுகள் அருமை.
    விடுமுறைக்கு உறவுகள் வீட்டுக்கு போய் வந்த நினைவுகள் மிக அருமையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி.

      நீக்கு

  6. பாவாடை, சட்டை, ஜடையுடன் அழகு.

    எங்கள் பெரியம்மாஆட்டுக்கல்லில் ஆட்டி விறகு அடுப்பில் சுட்ட தோசையின் சுவை இப்பொழுதும் சுவைக்கிறது.

    அன்றைய பொழுதுகள் இனிமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....