வியாழன், 12 மே, 2022

கம்ப்ளெயிண்ட்! - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிமிடங்களைத் தான் நேரமே சரியில்லை என நாம் சலித்துக் கொள்கிறோம்.

 

******


 

எவ்வளவு நேரமா நிக்கறோம்! பொறுமையா ஏதோ தட்டிட்டு இருக்கு இந்தம்மா. வாடிக்கையாளர் வரிசையில் ஒரு குரல்..

 

withdrawal பண்ணனும்! 

 

எழுதிக் குடுத்துட்டு போங்க சார். அதுல உங்க செல் நம்பரும் எழுதிடுங்க! கேஷ் இல்ல! நாளைக்கு வந்ததும் சொல்றேன்!

 

மேடம்! அக்கவுண்ட்ட க்ளோஸ் பண்ணனும்! அவங்களால வர முடியாது!

 

சரி! உங்க ஏரியா போஸ்ட்மேன் கிட்ட விட்னஸ் கையெழுத்து வாங்கிட்டு நாளைக்கு வாங்க!

 

மேடம்! போன வருஷமே 15H குடுக்கும் போது சொன்னேனே Nominee போடணும்!

 

இன்னிக்கு 15H குடுக்கத் தான் நிறைய பேர் வந்திருக்காங்க மேடம். புரிஞ்சுக்கோங்க.

 

பென்ஷன் எடுக்கணும்மா!

 

பாட்டி இப்போ கேஷ் இல்ல! எழுதிக் குடுத்துட்டு போங்க! நாளைக்கு வந்ததும் சொல்றேன்!

 

என்னம்மா! இன்னொரு தடவ வரணுமா! அலைய விடறியே!

 

அதற்குள் அங்கே வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர்..

 

நான் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறேன் மேடம். தப்பா எடுத்துக்காதீங்க! கேஷ் இல்லன்னா எப்படி??

 

சார்! இதுவரை டெபாசிட் எதுவும் வரல. எங்களுக்கு பத்தாயிரம் வரை தான் வெச்சிருக்க முடியும்! 

 

கீர்த்தி அந்தக் கிளை தபால் அலுவலகத்தில் பணியில் இருந்தாள். அன்றாடம் இப்படி எத்தனையோ விதமான மனிதர்களை பொறுமையுடன் தான் கையாண்டு வந்தாள்.

 

மாலை நேரம்

 

அம்மா!!!

 

வீட்டிற்குள் நுழைந்ததும் மகள் தியா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். நான்கு வயது சுட்டி! அம்மாவுக்கு முத்த மழை பொழிந்தாள். 

 

அம்மா! எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா! உன்னோட விளையாடலாம்னு..!

 

அம்மாக்கு நிறைய வேலை இருந்ததுடா கண்ணா!

 

அப்படியாம்மா!!! 

 

ஆமாண்டா கண்ணு! 

 

உங்கம்மாவ வேலைக்கெல்லாம் போக வேண்டாம்னா கேட்கிறாளா! 

 

சின்னக் குழந்தை உன்ன விட வேலை தான் அவளுக்கு முக்கியமா போயிடுத்து! 

 

மாமியார் உள்ளேயிருந்து சடைத்துக் கொண்டாள்.

 

ராத்திரிக்கு எனக்கு அரிசி உப்புமா பண்ணிடு! தொட்டுக்க கொத்ஸு தான் வேணும்! என் புள்ளைக்கு அரிசி உப்புமா வெங்கலப் பானையில பண்ணா தான் புடிக்கும்! வேலை ஜாஸ்தின்னு குக்கர்ல கிக்கர்ல பண்ணிடப் போற!!

உத்தரவு பிறப்பித்த படியே சீரியல் பார்க்கத் துவங்கிட

 

அம்மாடி! நீ மத்தவாளுக்கு உபகாரமா இருக்காப்ல உத்தியோகம் கெடச்சிருக்கு!  நீ உன் சொந்தக் கால்ல நிக்கணும்மா! பொண்களுக்கு படிப்பும் வேலையும் ரொம்ப முக்கியம்! அது தான் தன்னம்பிக்கைய குடுக்கும்! பாதுகாப்பும் தரும்! 

 

எந்தவொரு சந்தர்ப்பத்திலயும் வேலைக்கு ஏன் வந்தோம்னு தோணிடக்கூடாது! குடும்பமும் முக்கியம்! வேலையும் முக்கியம்! எல்லாத்தையும் சமாளிக்க உன்னால முடியும்டா!

 

வேலை கிடைத்த போது அப்பா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க.!! ஆமாம்! என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்!

 

கீர்த்திக்கு புதுத்தெம்பு கிடைத்த உணர்வில்

 

தியா குட்டிக்கு இன்னிக்கு நான் என்ன டிஃபன் பண்ணித் தரப் போறேன்னு கண்டுபிடி பார்க்கலாம்.

 

ம்ம்ம்ம்!!! பலத்த யோசனையில் இறங்கினாள் தியா குட்டி..🙂

 

அம்மா! நான் உன் காதுல சொல்றேன்! கரெக்ட்டா சொல்லு! 

 

ரகசியம் பேச ஆரம்பித்தார்கள் அம்மாவும் மகளும்…..🙂

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

 1. அருமை. சிரமங்களையும், தன்னம்பிக்கையையும், அப்பா பாசத்தையும் ஒருங்கே சொன்ன சின்னஞ்சிறு கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பெண்ணாக பிறந்தவளுக்குத் தான் எத்தனை பொறுப்புகள் இல்லையா!

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 4. பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. கதை அருமை ஆதி! வேலை பார்க்கும் பெண்ணிற்குள்ள அலுவலகப் பொறுப்பு, வீட்டுப் பொறுப்பு அத்தனையும் அழுத்தும் போது, அப்பாவின் வார்த்தைகள் உந்துசக்தி! யதார்த்தம்.

  கதையிலும் கலக்கறீங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். உந்துசக்தியால் தான் வாழ்க்கை நகர்கிறது.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 6. 'சொந்தக் கால்லே நிக்கணும்'. அவசியம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

   நீக்கு

 7. குட்டிக்கதை அருமை.
  ஒரு வேளை நேற்ரைய கதையின் தொடர்ச்சியோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீர்த்தி என்ற இந்த கதாபாத்திரம் பல வித அவதாரங்களை எடுக்கக் கூடியவள். இது நேற்றைய தொடர்ச்சி அல்ல..!

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சகோ.

   நீக்கு
 8. வேலை பார்க்கும் பெண்மணிகள் எல்லாருமே கீர்த்தியைப் போல் பொறுமைசாலிகள் என்று சொல்ல முடியாது. ஆனால் கீர்த்திகள் போல் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் சார். கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா சார்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

   நீக்கு
 10. கதை நன்றாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

   நீக்கு
 11. வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் சமாளிப்பது என்பது எனக்கும் பழகிப்போன விடயம்தான் நாங்கள் முன்கூட்டியே உணவுவகைகளை தீர்மானித்து சமாளித்துகொள்கிறோம்.

  இங்கு கீர்த்திக்கு மாமியார் இதைத்தான் செய் என்று உத்தரவுபோடுவதுதான் சிரமப்படுத்துகிறது இப்படியும் பல பெண்கள் சிரமப்படுவது உண்மையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டளையிடுவது தான் சிரமமான விஷயம்.

   கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. கதை குறித்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....