வெள்ளி, 6 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி நான்கு – மந்திர உச்சாடனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி ஏழு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை, அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது; செயல்களால் மட்டுமே விளக்கம் பெறுகிறது அன்பு - அன்னை தெரசா.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி இருபத்தி நான்கு - மந்திர உச்சாடனம்



 

சிறுவயதில் கேட்கும் விஷயங்கள் மனதில் ஒட்டிக் கொண்டு விடும்! நம்மைச் சுற்றி நல்லவையே சூழ்ந்திருந்தால் அந்தக் குழந்தை நல்லதையே நினைக்கும்! நல்லதையே செய்யும்!

 

சுட்டிப்பெண்ணுக்கு பனிரெண்டு வயதாகி விட அதற்குண்டான பக்குவமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது! அவளின் குட்டித் தம்பிக்கு ஒருநாள் சங்கர மடத்தில் மஹாபெரியவாளின் ஆசிகளோடு இவனைப் போன்ற பல சிறுவர்களோடு சேர்த்து பூணல் போடும் வைபவம் நடைபெற்றது.

 

அதன் பிறகு ஒரு வாரம் போல அப்பா அவனுக்கு காலையும், மாலையும் சந்தியா வந்தனம் செய்வதற்கு கற்றுத் தந்தார். அப்பா அவனுக்கு வேத மந்திரங்களை சொல்லித் தரும் போது உடன் அமர்ந்து கேட்கா விட்டாலும் இவள் காதிலும் விழுந்து மனதுக்குள் படர்ந்து போனது.

 

குட்டித்தம்பி தடுமாறும் இடங்களில் அடுத்து இது தாண்டா வரும்! என்று இவள் எடுத்துக் கொடுக்க அப்பா இவளைப் பார்த்து புன்னகைத்துக் கொள்வார். விளையாட்டுப் போல இவளும் மந்திர உச்சாடனம் செய்து வந்தாள்.

 

அதே போல சனிக்கிழமைகளில் வானொலியில் ஒலித்த கந்த சஷ்டி கவசத்தை அப்பாவிடம் இருந்த குட்டி சஷ்டி கவச புத்தகத்தை வைத்துக் கொண்டு கூடவே சொல்லி மனதில் பதிவு செய்து கொண்டாள். சில வாரங்களிலேயே முழுதும் மனனம் ஆனது அவளுக்கு!

 

கலியுகத் தெய்வமே

கந்தனுக்கு மூத்தோனே

மூஷிக வாகனனே

மூலப் பொருளோனே

 

என்று தொடங்கும் கந்த குரு கவசமும் இவளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. வானொலியில் ஒலித்த போதெல்லாம் அங்கேயே அமர்ந்து கூடவே சொல்லி வந்தாள். 

 

இப்படியே நாட்களும், வாரங்களும் சென்றன. அவளுக்கென்று ஒரு சின்னஞ்சிறிய உலகம்! பள்ளிப்பாடமும், எழுத்தும், அவ்வப்போது வரைந்த ஓவியங்களும், கைவேலையும், வேடிக்கையும் என கடந்தன. 

 

12 வயதாகி விட்டதால் அவ்வப்போது அம்மா அவளிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வருவாள்! ஆனால் இவள் அதை காது கொடுத்து கேட்டால் தானே..🙂 அந்த இடத்திலேயே இருக்க மாட்டாள். ஒரே ஓட்டமாக ஓடி விடுவாள்..🙂

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தப் பெண்?? தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. சிறுவயதில் படிப்பவையும், நினைப்பவையும், கேட்பவையும் மனதில் பசுமரத்தண்ணி போல பதிந்து விடுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய வாசகம் அருமை. ஒருவர் வெளிப்படுத்தும் அன்பையும் மற்றவர் தன் அன்பால்தான் உணர முடியும். அன்னையின் வாக்கு அருள் வாக்கு.

    பதிவு அருமை. சிறு வயதிலேயே பக்தியுடன் சஷ்டி கவசத்தையும், கந்த குரு கவசத்தையும் மனனம் செய்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உண்மை. சிறு வயதில் கற்றவைகள் என்றும் மறவாமல் இருக்கும். பாராட்டுக்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் அருமை.
      ஆதி உங்கள் எழுத்து வர வர மெருகு ஏறி வருகிறது. கடந்த கால நினைவுகளை அழகாய் சொல்கிறீர்கள். பதின்ம பருவம் வர போகிறது. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

      நீக்கு
    2. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் மற்றும் இன்றைய பதிவு குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
    3. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்தும் எழுத்து குறித்துமான தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பத்து வயதுக்குள் மனனம் செய்வது நின்று விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. வாசகம் நல்லதொரு வாசகம்.

    சிறு வயதில் மனதில் எல்லாமே எளிதில்மனதில் பதிந்துவிடுகிறதுதான். குடும்பத்து நிகழ்வுகளும். நீங்கள் சொல்லியிருப்பது போல் நல்ல சூழல் அமைய வேண்டும்.

    ஸ்கந்த குரு கவசம் அதுவும் சூலமங்கலம் சொல்லுவதுதான் அந்தக் குரல்தான் மனதில் இப்போதும் ஓடும். அம்மா என்ன சொல்லியிருப்பார் என்பது புரிகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  5. உங்களின் ஒவ்வொரு பருவத்தையும் நன்றாக நினைவுடன் அழகாகச் சொல்லி வருகின்றீர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. //அம்மா ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வருவாள்..//

    பெற்றோர்கள் இப்படித்தான்.. நாம் கேளாச் செவியர்கள் எனபதை மறந்து விடுகின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. சிறுவயதிலேயே கந்தசஷ்டி கவசம் மனனம் செய்து கொண்டீர்களே.

    எமக்கு நமச்சிவாய பதிகமும் நவராத்திரி பாமாலை தேவாரங்களும்தான் தெரிந்திருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....