ஞாயிறு, 5 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி நான்கு – பீரங்கிப் பச்சடி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நாம் வீணாக்கும் உணவு மற்றொருவரின் உணவு என்பதை மறந்து விடக்கூடாது.   


******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

யாரிவள்! பகுதி முப்பத்தி நான்கு - பீரங்கிப் பச்சடிசுட்டிப்பெண் சாப்பிடத் தான் மிகவும் முரண்டு பிடிப்பாள் என்று சொன்னது நினைவிருக்கலாம். அவளை சாப்பிட வைக்க அம்மா என்னென்னவோ செய்து பார்த்தாள். மிரட்டி உருட்டினாலும் பிரயோஜனமில்லை!  அப்பாவும் தன் பங்குக்கு சிறுவயதில் தான் கஷ்டப்பட்டக் கதைகளை எடுத்துச் சொல்வார். ஆனாலும் இவள்!!!


உறவினர் வட்டத்தில் கல்யாண அழைப்புகள் வரும் போது முதல் நாள் ஜானவாசம் என்று சொல்லப்படுகிற மாப்பிள்ளை அழைப்புக்கு இவர்களை அழைத்துச் செல்வார் அப்பா. பள்ளியிலிருந்து வந்து பட்டுப்பாவாடை சரசரக்க இவளும் கிளம்பி விடுவாள். 


ஜானவாசத்தன்று மாலையில் சேவை, உருளைக்கிழங்கு போண்டா, அல்வா என்று மெனு இருக்கும். இரவு பால்பாயசம், போளியுடன் தடபுடலான சாப்பாடு இருக்கும். கல்யாண சாப்பாட்டை விட ஜானவாச சாப்பாடு தான் ஜோரா இருக்கும் என்று அப்பா எப்போதும் சொல்வார்! 


அப்படி ஒருநாள் கல்யாண விருந்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த இலையில் பரிமாறி இருந்த பீட்ரூட் இனிப்பு பச்சடி குட்டித்தம்பிக்கு மிகவும் பிடித்துப் போய் விட, அம்மாவிடம் அவன் 'எனக்கு பீரங்கிப் பச்சடி வேணும்' என்று திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தான்..🙂 முதலில் ஒன்றும் புரியாமல் எல்லோரும் முழிக்க, பிறகு தான் புரிந்தது..🙂 


அந்த இடமே சிரிப்பலையில் அதிர்ந்தது. பரிமாறுபவரே சிரித்துக் கொண்டே 'குட்டிப்பயலுக்கு இது தான் வேணுமா! ஒனக்குப் பிடிச்ச பீரங்கிப் பச்சடியே போடறேன்! சாப்பிடு கண்ணா! என்று இலையில் பரிமாறினார்..🙂 மழலைப் பேச்சே அவனுக்கு நெடுநாட்கள் வரை இருந்தது. அம்மாவின் இடுப்பை விட்டு இறங்க மாட்டான்!


நிமிஷம் என்பதை மினிஷம் என்பான்! மினிட் என்பதை நிமிட் என்பான்! குடு மானிங் மீஸ்! குடு வீனிங் மீஸ்! என்பான்..🙂 தயிர் என்பதை தேர் என்பான்..🙂 இவள் அப்பாவுக்கு செல்லம் போல் அவன் அம்மாவுக்கு செல்லம்! அவனைக் கொஞ்சுவதென்றாலும்  அடிப்பதென்றாலும் அது அம்மாவாக தான் இருக்கும்! 


முதல் பந்தியில உன்னை ஓரமாக உட்கார வெச்சிடறேன்! நீ சாப்பிட்டு முடிக்கும் போது கடைசிப் பந்தியும் முடிஞ்சு பரிமாறுகிறவா எல்லாரும் சாப்பிடுவாப் பாரு அப்ப தான் எழுந்திருப்ப! என்று அம்மா எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பாள்..🙂 அப்புறம் கொஞ்சம் பெரியவளானதும் ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள்! ஒருநாள் தம்பியுடன் சாப்பாட்டில் போட்டியிட்டாள்! அந்தக் கதைகளெல்லாம் அடுத்த பகுதியில்..🙂


இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!!! தொடர்ந்து பார்க்கலாம்!


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

 1. ரிசப்ஷன் சாப்பாடு - ஜானவாச சாப்பாடு எப்போதுமே ஸ்பெஷல்தான்.  தம்பியின் விவரங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்ற விழாக்களில் சாப்பாடு தான் முக்கியம் :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

   நீக்கு
 2. பீரங்கிக் பச்சடி ஹா.. ஹா.. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 3. தம்பியின் மழலை பேச்சும், அக்காவின் நினைவுகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. குழந்தைகளின் மழலைப்பேச்சு என்றுமே மறக்க முடியாதது. அவர்கள் வளர்ந்து "நானா அப்படி பேசினேன்" என்றாலும் அந்த நினைவுகளின் இனிமை என்றும் நம்முள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 6. ஆமாம் ஆதி, ஜானவாச சாப்பாடு அப்போது- இப்போது ரிசப்ஷன்/மெஹந்தி பார்ட்டி/சங்கீத் சாப்பாடுதான் சுவாரசியம் என்றாலும் அதுவும் பெரும்பாலும் ஒரே போன்றவையாக இருக்கின்றன பெரும்பாலும் கல்யாணங்களில். மற்றும் நமக்குச் சாப்பிட முடியாமல் ஆகிவிடுவதும் உண்டு. நமக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லமாட்டோமே!!!!

  தம்பியின் மழலை சூப்பர். பீரங்கிப் பச்சடி தலைப்பிலேயே ஊகிக்க முடிந்தது....அதான் நம்ம வீட்டிலும் வாண்டுகள் இப்படிப் பேசியதுண்டே!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு வயசாயிடுச்சுன்னு சொல்ல மாட்டோம்... அதே தான். நாம எல்லாம் எப்பவும் குழந்தைகள் தானே....

   பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 7. பீரங்கிப்பச்சடி என்பது பீட் ரூட் பச்சடியா. ஜானவாசம் சாப்பாடு ஸ்பெஷலாக இருக்குமா?

  தமிழ்நாட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்டால்தான் சுவைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

  மழலை மொழி எப்போதுமே சுவாரசியம்தான். ரசித்தேன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பீட் ரூட் பச்சடி நன்றாகவே இருக்கும் துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 8. ஆண்டவா, துளசியின் கருத்தைப் போடும் போது நான் போட்ட கருத்தை ப்ளாகர் ஒளித்துவிடாமல் பார்த்துக் கொள்!!! - கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துளசி ஜி கமென்ட் மற்றும் இந்த கமென்ட் இரண்டும் ஸ்பேம் பக்கத்தில் இருந்தது கீதா ஜி.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

   நீக்கு
 9. உங்கள் தம்பியின் மழலை பேச்சு சிரிப்பை வரவழைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்த விஷயம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. பீரங்கி பச்சடி ரசனை தம்பியின் மழலை.
  உங்களுக்கு சிறு வயதில் பசி இருந்ததில்லை போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....