திங்கள், 27 ஜூன், 2022

வாசிப்பனுபவம் - ஒரு பிடி மண் - சுபாஷினி பாலகிருஷ்ணன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள்.


******

 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூலை மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் சுபாஷினி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “ஒரு பிடி மண்” எனும் குறுநாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 21

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


ஒரு பிடி மண் (Tamil Edition) eBook : பாலகிருஷ்ணன், சுபாஷினி : Amazon.in: Kindle Store


******* 


சஹானா இணைய இதழ் நடத்தும் ஜூலை மாத வாசிப்புப் போட்டியில் இருக்கும் பதினான்கு நூல்களில் சுபாஷினி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ”ஒரு பிடி மண்” எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. விவசாயம், தனது சொந்த நிலத்தை விற்க நேரிடும் விவசாயின் வலியைச் சொல்லும் மின்னூல் இது.  மேலும் நூல் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 


மிக்க குறைவான பக்கங்கள் கொண்ட குறுநாவல் இந்த மின்னூல்.  ஐந்து ஏக்கர் நிலம் வைத்து அதில் பாடுபட்டு விவசாயம் செய்வதோடு, மாடும் வைத்து பால் வியாபாரம் செய்து தனது மக்களை நன்றாக படிக்க வைக்கும் ஒரு விவசாயி.  மகள்களின் திருமணத்திற்காக நிலத்தில் பெரும்பகுதி விற்பனை செய்து விட, மீதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்ய அவரது மகனும் ஆசைப்படுகிறார்.  விவசாயம் செய்யும் விவசாயின் நிலை மோசமாக இருக்கிறது என்று மகனை வேறு வேலை தேடச் சொல்லும் தகப்பன்! ஆனாலும் மகன் இருக்கும் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார்.  


விவசாயம் பார்க்கும் மாப்பிள்ளை என்பதால் அவருக்கு திருமணம் தட்டிப் போகிறது.  அந்த விவசாயிக்கு தகுந்த பெண் கிடைத்தாளா, அவர் வாழ்க்கையில் பெற்றி பெற்றாரா போன்ற விஷயங்களையும் நிலம் விற்ற பெரியவருக்கு ஒரு பிடி மண் கூட எத்தனை பெரிய விஷயம் என்பதை திறம்படச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.  குறைவான பக்கங்களில் நிறைவான கதை.  நீங்களும் படித்து ரசிக்கலாமே ! 


சிறப்பான கதையை எழுதி இருக்கும் நூலாசிரியருக்கு பாராட்டுகள். மேலும் மேலும் கதைகள் எழுதி, மின்னூலாக வெளியிட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…. 

9 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.ஆசிகள் வெங்கட். அமைதியான வாழ்க்கைக்கும் வரும்நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதற்கும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி
    விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நூல் விமர்சனம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இங்கு தந்திருந்த என் கருத்தும் இப்போது காணவில்லையே.. உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    இதுவும் ஒடி விடுமோ என்னவோ... நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கதை விவசாயம் சார்ந்த கதை. கதை இன்றைய வாசகத்திற்குப் பொருத்தமானது என்றும் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஒருபிடிமண் நல்ல விமர்சனம். விவசாயம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறியும் கால கட்டத்தில் நம்நாட்டு மக்கள் வாழ்கிறோம் ஆபத்பாந்தவன்.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....