ஞாயிறு, 19 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி ஒன்பது – தொப்புள் கொடி பந்தம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தேடிவந்த உறவை தள்ளிவிட்டபோது தெரியவில்லை; தேடிச்சென்ற உறவு தள்ளிவிடும்போது தான் தெரிகிறது வாழ்க்கை ஒரு வட்டம் என்று. 


******


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே!


யாரிவள்! பகுதி முப்பத்தி ஒன்பது - தொப்புள் கொடி பந்தம்!சுட்டிப்பெண் வளர்ந்து கொண்டு வரும்  ஒவ்வொரு பருவத்திலும் செய்த விஷயங்களையும், பெற்ற  அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறாள். சங்கிலித் தொடர் போல் அவளது நினைவில் அணிவகுத்து நிற்கும் சம்பவங்கள் தான் அவளை பக்குவப் படுத்துகின்றன.


எட்டாம் வகுப்பில் மதிய நேர ஷிஃப்ட் முறையில் பள்ளிக்குச் சென்று வருவதும், காலை வேளையில் ஹிந்தி செண்டருக்குச் சென்று  பயின்று வருவதும் என நாட்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. மழைநாட்களில் மழையை ரசித்தபடியே நனைந்தவாறே முதுகுச்சுமையுடன் நடந்து வருவாள். அம்மாவிடம் திட்டும் வாங்கிக் கொள்வாள்..🙂 


எட்டாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வும் எழுதினாள். அரசுத் தேர்வு என்பதால் மிகக் குறைந்த தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அப்பாவிடம் இது பற்றி சொல்லியிருந்தாள். அப்பாவும் எப்போது செலுத்தணுமோ சொல்லு! தரேன்! என்று தான் சொன்னார். அதன் பின்பு அப்பாவிடம் வாங்கிக் கொண்டு செல்ல மறந்து விட்டாள். குறிப்பிட்ட நாளன்று எல்லோரிடமும் வசூலிக்க அப்போது இவளிடம் பணமில்லை!


ஆசிரியர் ஒருவரிடம் கேட்டு வாங்கி செலுத்தி விட்டாள். பின்பு அப்பாவிடம் சொல்லி அவர் கொடுத்தனுப்பி அதை ஆசிரியரிடம் தந்த போது சிரித்துக் கொண்டே அதை பேங்க்ல போட்டுக்கோ! என்று சொன்னார். இவளுக்கு மிகவும் பிடித்த அன்பான ஆசிரியர் அவர்! சிரித்த முகம்! நீண்ட கூந்தல் கொண்டவர்! 


சுட்டிப்பெண் தன் அம்மா மோர் சிலுப்பி வெண்ணெய் எடுக்க உட்கார்ந்தால் இன்னிக்கு எனக்கு ______ வேணும் என்று சொல்வாள் என்று சொல்லியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது என்னவென்று யூகித்தீர்களா?? வெண்ணெயை தொட்டுக் கொண்டு சாப்பிடக்கூடிய ஐயிட்டம் என்றால் அது அடை தான்!


அடை வார்த்தால் வெண்ணெய் தொட்டுக் கொண்டு சாப்பிட இவளுக்கு மிகவும் பிடிக்கும். வேறு எதுவும் வேண்டாம். அம்மா பண்ணித் தரும் காரசாரமான அடைக்கு வெண்ணெய் தான் தோதான காம்பினேஷன். 


அடை என்றதும் அவளுக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால் கோடை விடுமுறைக்காக ஒருமுறை சிவகங்கை சென்ற போது மாமா செய்து தந்த முறுவலான அடை தான். பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சற்றே வதக்கி மாவில் சேர்த்து வார்த்த அடைக்கு தொட்டுக்கையாக தேங்காய் சட்னி. அந்த சுவைக்கு ஈடு இணையில்லை. மிகவும் ரசித்து சாப்பிட்டாள்.


அடையோடு பிணைந்த பந்தம் இவளுக்கு இருந்தது!  அடை இவளுக்கு பிடித்துப் போக ஒரு சுவையான காரணமும் உண்டாம். மாமா ஒருமுறை இவளிடம் பகிர்ந்து கொண்டது என்னவென்றால் அம்மா வயிற்றிலிருந்து இவள் வெளியே வர துடிக்கப் போகும் முன்பு அம்மாவும் மாமாவும் இரவு உணவாக அடை தான் சாப்பிட்டார்களாம்..🙂 அதன் பின்னே இடுப்பு நோக தான் அம்மா இவளைப் பெற்றாள்..🙂 எப்படிப்பட்ட பந்தம் அல்லவா!


அது போல் இவள் சிறுவயது முதல் ருசித்த உணவுகள் பற்றி சொல்ல வேண்டிய கதைகளும் நிறைய இருக்கிறது. 


இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!!  தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

9 கருத்துகள்:

 1. இன்றைய வாசகம் எனக்கு  சமீபத்து என் அனுபவம் ஒன்றை நினைவுபடுத்துகிறது!

  ஆ..   வெண்ணெயோடு இணைந்த அடை...  அதுவும் மாலை நேரங்களில் சூடாக..   சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. அட்டைக்கு வெண்ணெய் நல்ல காம்பினேஷன் தொடர்ந்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. வாசகம் அருமை.
  பதிவு அருமை.
  அடையோடு பிணைந்த பந்தத்தின் காரணம் அருமை.

  பதிலளிநீக்கு
 4. அனுபவங்கள் மனதில் நிற்கின்றன. சிறப்பு.
  ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 5. வாசகம் முதல் பகுதி என்றுமே செய்ததில்லை ஆனால் ....இரண்டாவது பகுதி அனுபவம் உண்டு. எனவே என் வகையில் அரைவட்டம் எனலாமோ!!!!!

  ஆதி! வாவ் அடை வெண்ணை சரியான இணை. அட! சரியான பந்தம் தான்....

  அடை வெண்ணை ரொம்பப் பிடிக்கும்.

  இப்போதுதான் 6 ஆம் தேதியிலிருந்து விட்ட பதிவுகளை வாசிக்க நினைத்து உங்களின் பதிவை வாசித்தேன்....சரியான போட்டி!!! நீங்களும் தம்பியும். சுவாரசியம். நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள் உரையாடல்களைக் கூட.

  எங்கள் வீட்டிலும் நாங்கள் பெரிய கூட்டுக்குடும்பம் என்பதால் இட்லிக்குப் போட்டி நடக்கும் ஏப்போதாவதுதான்.... நிறையப்பேர் என்பதால் பெரும்பாலும் ரேஷன் தான்!!!!!!

  அங்கு கருத்து போகுமா என்று தெரியவில்லை. பழைய பதிவுககளுக்குப் போட்டால் கருத்து அப்ரூவலுக்குப் பின் வெளியாகும் என்று வந்ததால் தெரியவில்லை....

  விட்ட பதிவுகள் எல்லாவற்றையும் வாசிக்கிறேன். கருத்தும் இட முயற்சி.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நான் யாரையும் தள்ளினதே இல்லை, என்னைத் தள்ளினவர்களைக் கூட! ஹிஹிஹி! எனக்கும் அடை/வெண்ணெய்/வெல்லம் காம்பினேஷன் ரொம்பப் பிடிக்கும். நேத்திக்குக் கூட இரவுக்கு அடை/வெண்ணெய்/வெல்லம் தான்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....