வியாழன், 30 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பத்தி இரண்டு – அப்பாவின் சட்டை!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மனைவியின் பேச்சை கேட்காத கணவர்கள் இருக்கலாம்; ஆனால் மகளின் பேச்சை கேட்காத அப்பாக்கள் இருக்கவே  முடியாது! 


******


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 


பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 


பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!


பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!


பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!


பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!


பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 


பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!


பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!


பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 


பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!


பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 


பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 


பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 


பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!


பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 


பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!


பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!


யாரிவள்! பகுதி நாற்பத்தி இரண்டு - அப்பாவின் சட்டை!சுட்டிப்பெண் இப்போது ஒன்பதாம் வகுப்புக்குச் சென்று விட்டாள். பள்ளியில் இந்த ஒன்பதாம் வகுப்பில் காலை ஷிப்ட் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஏழு மணிக்குச் சென்றால் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள். பள்ளிச்சீருடையும் மாறியிருந்தது. 


இதுவரை வெள்ளை நிறச் சட்டையும், அடர்பச்சை நிறத்தில் Half skirt அணிந்து கொண்டு சென்றிருந்தாள். அது இப்போது சுடிதாராக மாறிப் போயிற்று. இதற்கு முன்பு ஒன்பதாம் வகுப்பு முதல் பாவாடை தாவணியாக தான் இருந்தது. அடர்பச்சை நிறப் பாவாடையும், வெள்ளை நிற ப்ளவுஸும், பிஸ்தா பச்சை போன்ற நிறத்தில் தாவணியுமாக இருந்தது.


இவள் ஒன்பதாம் வகுப்புக்கு வந்த வருடம் அது அப்படியே சுடிதாராக மாறியது. வெள்ளை நிறத்தில் டாப்ஸும், அடர்பச்சையில் பாட்டமும், பிஸ்தா நிறத்தில் பின் செய்யப்பட்ட துப்பட்டாவும் அணிந்து கொண்டு சென்றாள். வெள்ளை நிற கான்வாஸ் ஷுவும் புதிதாக சேர்ந்து கொண்டது. மெட்ரிகுலேஷனில் மூன்றாம் வகுப்பு வரை படித்த போது ஷு அணிவது கட்டாயமாக இருந்தது. அதன் பின்பெல்லாம் எந்த கட்டாயமுமில்லை! நம் விருப்பம் தான்!


எட்டாம் வகுப்பு முதல் அவளே தலைமுடியும் வாரிக் கொண்டு ரிப்பன் வைத்து பின்னலிட்டு பள்ளிக்குச் சென்று வரலானாள். அம்மா வாரி விட்டாலும் இறுக்கமாக இருப்பதில்லை என்பதால் தானே செய்து கொள்ளலானாள். இரண்டு மூன்று தடவை கூட அவிழ்த்து பின்னலிட்டுக் கொள்வாள். அவளைப் பொறுத்தவரை பிசிறு ஏதும் இல்லாமல் perfect ஆக இருக்கணும்.


ஏழு மணிக்கு பள்ளிக்கு கிளம்பணும் என்றால் அதற்கு ஏற்றாற் போல் எழுந்து குளித்து தலைவாரிக் கொண்டு தயாராகணும். அதற்கு இடையில் அம்மா தரும் வேலைகளையும் செய்யணும். அரிவாள்மனையில் காய்கறி நறுக்க, தேங்காய் துருவ, கீழேயிருந்து தண்ணீர் குடத்தில் எடுத்து வர என்று ஏதேனும் வேலைகள் இருக்கும்.


பள்ளிக்கும் நடந்து தான் சென்று வர வேண்டும். அங்கு சென்று விட்டால் அவள் சிந்தனையில் படிப்பைத் தவிர எதுவும் இருக்காது. தன் கனவுகள் மெய்ப்பட படிப்பில் ஆழ்ந்து போய்விடுவாள். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு முந்திக் கொண்டு பதில் சொல்வதும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பதும் அவர் பாராட்டும் போது பெருமிதமாக உணர்வதுமாக சென்றன நாட்கள்.


மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஏதேனும் எழுதிப் பார்க்கவும், வரைந்து பார்க்கவும் ஆரம்பித்து விடுவாள். வீட்டுக்கு வந்த பின் அவளது உடை லாங் ஸ்கர்ட்டாக இருக்கும். மேலே அப்பாவின் சட்டை அணிந்து கொள்வாள். கோவையின் சிலுசிலுவென்ற சூழலுக்கும் குளிருக்கும் அப்பாவின் முழுக்கை சட்டை அவளுக்கு அடக்கமாக இருக்கும்.


அவள் தான் அப்பா செல்லமாயிற்றே! இப்போது பெரியவளாக ஆனாலும் அப்பா தான் ஒரு சில விஷயங்களை அவளுக்கு செய்து கொடுக்க வேண்டும். அதுவே அவளின் விருப்பமாக இருந்தது! அது என்ன??


இந்த பள்ளிச் சீருடை அவளுக்கு நன்மை செய்ததா? பிரச்சினைகள் தந்ததா?? போன்ற கேள்விகளுக்கான விடைகளை தொடர்ந்து பார்க்கலாம். இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்? தொடர்ந்து பார்க்கலாம்!


*****


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

9 கருத்துகள்:

 1. தானாக தலைவாரிக்கொள்ள ஆரம்பித்தது, அம்மாவுக்கு உதவிக்கொண்டே பள்ளிக்கு கிளம்பும் நேரங்கள் ....  மலரும் நினைவுகள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 2. பெண்பிள்ளைகள் இருக்கும்வீடு இனிமை ததும்பும் வீடு!

  பதிலளிநீக்கு
 3. அந்த வயதில், தானே செய்து கொள்ளும் பழக்கங்கள் சிறப்பு.

  நல்ல நினைவுகள், ஆதி.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இனிய நினைவுகள்.. என்றைக்கும் சந்தோஷம்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 5. பாடசாலை நாட்களிலேயே அம்மாவுக்கு வேலைகளில் உதவும் பழக்கம் எனது சிறுவயது காலத்தையும் நினைவூட்டியது. நானும் ஏழு மணிக்கு செல்லமுன் உதவி செய்து விட்டு செல்வேன்.

  பதிலளிநீக்கு
 6. அருமை ... தொடரை நானும் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....