தொகுப்புகள்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வாசிப்பனுபவம் - நான் நீ மழை - கல்யாண் ஆனந்த்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“Love and kindness are never wasted. They always make a difference. They bless the one who receives them, and they bless you, the giver.” - Barbara De Angelis. 

 

******



 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் கல்யாண் ஆனந்த் அவர்கள் எழுதிய “நான் நீ மழை” எனும் மின்னூல். மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: குறிப்பிடப்படவில்லை

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

நான் நீ மழை : Nan Nee Mazhai (Tamil Edition) eBook : Ananth, Kalyan: Amazon.in: Kindle Store

 

******* 

 

சமீப காலங்களில் எந்தத் தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டாலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஏதாவது ஒன்று நடந்து கொண்டிருக்கிறது நாம் அறிந்தது.  அப்படியான தொடர்களில் பார்ப்பவர்களைக் கவர, தத்தமது நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்த, Television Rating Point எனப்படும் TRP என்பதை அதிகரித்துக் கொள்ள நிறைய உத்திகளைக் கையாள்வது உண்டு.  அதையெல்லாம் அறியாத/அறிந்திருந்தாலும் அதை உணர்ந்து கொள்ளாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும், வீட்டு வேலைகள் உட்பட, அனைத்தையும் மறந்து நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுவது வாடிக்கை. 

 

மழை நாளில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஸ்ரீகாந்த்.  மழைக்கு ஒதுங்க பேருந்திலிருந்து இறங்கிய  தேவதை காதம்பரி… பார்த்த மாத்திரத்திலேயே ஸ்ரீகாந்த்-க்கு காதம்பரி மீது காதல் - அவளின் பெயர் கூட அறிந்திராமல்.  மழை நிற்க அவள் பின்னர் செல்கிறான். அவள் ஒரு இசை பயிற்சிப் பள்ளியில் பயில்வது தெரிந்து அங்கேயே அவனும் சேர்கிறான்.  நாளடைவில் அவளுக்காகவே தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் ”பாடும் பறவை - சிறந்த குரலுக்கான தேடல் - சூப்பர் ரியாலிட்டி ஷோ” ஒன்றில் சேர்கிறான்.  கூடவே அவளும்!  அவர்கள் இருவருக்கிடையே காதல் உண்டானதா, தொலைக்காட்சி நிறுவனம் அவர்கள் காதலை வைத்து என்ன விளையாட்டு நடத்துகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார். 

 

ஸ்ரீகாந்த் - காதம்பரி காதல் ஜெயித்ததா? நிகழ்ச்சியின் முடிவு என்ன ஆனது என்பதை மின்னூல் வாசித்து தெரிந்து கொள்ளலாமே!  நூலாசிரியருக்கு வாழ்த்துகள். வாசிக்கப் போகும் உங்களுக்கு பாராட்டுகள்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்பிரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

6 கருத்துகள்:

  1. இதுபோன்ற காதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவைதான்.

    பதிலளிநீக்கு
  2. கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. கதையைப் பற்றி விரிவாக கூறாமல் விமரிசத்த விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  4. கதை ஆரம்பம் ஏதோ ஒரு படத்தை நினைவுபடுத்துகிறது...

    சுருக்கமான விமர்சனம் நன்று. ரியாலிட்டி ஷோ - கதை இந்த இடத்தில் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது..

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....